Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.06.2026 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 28-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 28.06.2026 (Kids Special)

 

இயேசுவை சந்தோஷப்படுத்து

 

"என் மகனே, என்னை நிந்திக்கிறவனுக்கு நான் உத்தரவு கொடுக்கத் தக்கதாக, நீ ஞானவானாகி, என் இருதயத்தைச் சந்தோஷப்படுத்து." - நீதி.27:11

 

கட... கட...வென குதிரைகள் ஓடும் இரைச்சல் சத்தமும், மக்களின் ஆரவார சத்தமும், கீத வாக்கியங்களின் இனிமையான இசையும், கலர்கலராக பூச்சரங்கள் கண்ணைக் கவர, காவலர்கள் வாசலில் காவல் காத்துக்கொண்டிருக்க, அந்த அரண்மனையே ஜகஜோதியாக இருந்தது. அது எங்கே என்று தானே கேட்குறீங்க, அதுதான் ஏரோது ராஜாவின் அரண்மனை.

         

அன்று ஏரோது ராஜாவுக்கு பிறந்த நாளாக இருந்ததினால் பல பிரபுக்களும், முக்கியமான VIP களும் பந்தியில் அவரோடு அமர்ந்திருக்க, பளபள ஆடையுடனும், அலங்காரத்துடனும் காலில் சலங்கையோடு அழகாக நடனமாட வந்தாள் ஒரு சிறு பெண். அந்த சிறு பெண்ணின் நடனம் எல்லோரையும் கவர்ந்தது. அவள் ஆடிய நடனத்தைக் கண்டு எல்லோரும் வியந்து அவளை பாராட்டினார்கள். சந்தோஷமடைந்த ராஜா, அவளிடம் உனக்கு என்ன பரிசு வேண்டும். என்னிடத்தில் என்ன கேட்டாலும் உனக்குத் தருவேன். என்னுடைய ராஜ்யத்தில் பாதி வேண்டுமானாலும் தருவேன் என்றார்.

          

அதைக் கேட்ட சிறு பெண் தனது அம்மாவிடம் ஓடி, நான் என்ன பரிசு கேட்க வேண்டும் என்று கேட்டாள். உடனே அவள் அம்மா யோவான் ஸ்நானனுடைய தலையை கேள் என்றாள். அந்த சிறுமியும் அவங்க அம்மாவிடம், வேண்டாம்மா ஏன் இப்படி விசேஷ நாளில் ஒரு கொலையை செய்யச் சொல்கிறீர்கள். அது ஆண்டவருக்கு பிடிக்காதுல அப்படின்னு எதுவும் சொல்லாமல், தனது அம்மா சொன்னபடியே ராஜாவிடம் போய் அந்த ஊழியக்காரருடைய தலையை கேட்டாள். ராஜாவும் வேறு வழி இல்லாமல் அவள் கேட்டபடியே தலையை வெட்டி வரச் சொல்லி அவளிடம் கொடுத்தார். சந்தோஷமாயிருந்த ராஜாவின் இருதயம் துக்கம் அடைந்தது. அங்கு வந்திருந்த எல்லோரையும் தனது திறமையால் சந்தோஷமடைய செய்த அந்த பெண்ணுக்கு தேவனை பிரியப்படுத்த தெரியவில்லை.

       

தம்பி தங்கச்சி, உனக்கு இருக்கும் தாலந்து, திறமைகளை கொண்டு நீ யாரை சந்தோஷப்படுத்திக்கொண்டு இருக்கிறாய். இயேசுவையா? அல்லது உலகத்தையா? சிந்தித்துப் பார்.

- Mrs .சாராள் சுபாஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom meritking casibom giriş perabet holiganbet matbet grandpashabet deneme bonusu casibom giriş casibom vaycasino vaycasino giriş casibom meritking casibom casibom giriş meritking meritking giriş holiganbet cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş