Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 26-06-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 26-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 26-06-2021

 

“நீ உனக்குப் பெரிய காரியங்களைத் தேடுகிறாயோ?” – எரேமியா 45:5

 

கனம் பொருந்திய மனிதன் என்று பெயர்பெற வேண்டும், சமுதாயத்திலும், திருச்சபையிலும் பேர் பெற்றவனாக இருக்க வேண்டும் என்ற சோதனை கிறிஸ்தவர்களுக்குள்ளும் வரும். இதனை நாம் வளரவிடுவோமெனில் சாத்தானின் கண்ணிக்கு நாம் எளிதாக அகப்பட்டு விடுவோம்.

 

இயேசுகிறிஸ்துவின் வாழ்வை நாம் பார்ப்போமானால் தனது வாழ்வின் பெரும்பகுதியை தச்சராகவே மரக்கடையில் கழித்தார். மேலும் உலகின் பெரிய நகரங்களாகிய ரோம், ஏதன்ஸ், அலெக்ஸான்ட்ரியா ஆகிய இடங்களுக்கு சென்று அங்கெல்லாம் பிரசங்கிக்க முற்படவில்லை. மாறாக அவர் சுற்றித்திரிந்த நாசரேத் ஒரு சிற்றூர், கலிலேயாவும் எளிமையானதே. ஒரு அற்புதத்தை அவர் செய்த பிறகு “ஒருவருக்கும் இதைக் குறித்து சொல்லாதே” என்றுதானே கூறினார். அவர் வேதாகமமே கொள்ளாத அளவிற்கு அற்புதங்களையும் அதிசயங்களையும் செய்தார். ஆனால் ஒருக்காலும் அதை பறைசாற்றவில்லை. ஆனால் நாமோ நாம் செய்த செயல்களைக் காட்டி பலருடைய கவனத்தையும் ஈர்க்க முயலுகிறோம். தேவனுக்காக செய்கின்ற ஆலயப்பணி, சுவிசேஷப்பணி போன்ற வேலையையும் நம்முடைய புகழ்ச்சிக்காகவும் சேர்த்து செய்கிறோம். நமது நற்செயல் திறமை ஒருவருக்கும் தெரியாமல் போவதை நம்மால் சகித்துக் கொள்ள முடிவதில்லை. அறியப்படாத கிறிஸ்தவனாக இருக்க நாம் யாரும் விரும்புவதில்லை. 

 

தேவ ஊழியர் டார்பி என்பவர் கூறும் கூற்று “இது தேவனுடைய ஊழியம், இங்கு மனிதன் மறைக்கப்படவேண்டும், தேவன் மகிமைப்பட வேண்டும். கர்த்தருடைய பணியில் விளம்பரம் நன்றன்று” என்று கூறுவார். இறுதியில் அவர் கல்லறையில் எழுதப்பட்ட வாசகம் “அறியப்படாதவராக இருக்க விரும்பியவர், ஆயினும் நன்கு அறியப்பட்டவர்” என்று எழுதப்பட்டிருந்தது. 

 

பிரியமானவர்களே! மேன்மை பாராட்டலை யோவான்ஸ்நானன் விடாமுயற்சியுடன் துறந்தார். “அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும்” என்பதே அவருடைய இலக்காக இருந்தது. நம்முடைய சிந்தை எப்படி? எல்லோராலும் அறியப்பட்ட கிறிஸ்தவனுடைய வாழ்வில் ஏற்படும் சிறிய வீழ்ச்சி, கிறிஸ்துவுக்கு பெரிய நிந்தையை கொண்டுவரும். நம்மை மேலே வரும்படிக்கு கர்த்தர் அழைக்கும்வரை, நாம் தாழ்மையான இடத்தில் தங்கியிருப்போம். கிறிஸ்து ஒருவரால் மட்டுமே அன்பு கூரப்படவும், பாராட்டப்படவும் விரும்புவோம். “மற்றவர்களால் அறியப்படாத சிறியவனாக இருக்க என்னை காத்துக்கொள்ளும்” என்று ஜெபிப்போம். 

- Bro. வில்லியம் மெக்டொனால்டு

 

ஜெபக்குறிப்பு:

ஏழை எளிய மக்களுக்கு இந்த கொரோனா நாட்களில் நம்மால் இயன்ற உதவிகளை செய்து வருகிறோம். இதன் மூலம் இங்குள்ள ஜனங்கள் இயேசுவை அறிய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet