Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.06.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 24-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 24.06.2026

 

ஆனந்த பாக்கியம்

 

“கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்.” - சங்கீதம் 37:4

 

மனமகிழ்ச்சியாய் இரு, சந்தோஷமாய் இரு, கர்த்தரைத் துதித்துக் கொண்டிரு. அப்போது கர்த்தர் உன் வேண்டுதல்களையெல்லாம் நிறைவேற்றி உன்னை ஆசீர்வதிப்பார்.

 

சிறு குழந்தை தன் தாயின் கவனத்தை ஈர்ப்பதற்கு எதற்கெடுத்தாலும் அழுகிறது. ஆனால் பிள்ளை வளர்ந்து விவரம் தெரிந்த பிறகு எதற்கெடுத்தாலும் அழுதுகொண்டேயிருந்தால், பெற்றோருக்கு கோபம் தான் வரும். அதுபோல் நாமும் சில காரியங்களுக்காக வருத்தப்பட்டு கண்ணீர் சிந்துவது இயல்பு. நம்முடைய பாவங்களுக்காக நாம் மனஸ்தாபப்பட்டு ஆண்டவரை நோக்கி கண்ணீரோடு போராடி ஜெபித்தால், அவர் நமது பாவங்களையெல்லாம் நமக்கு மன்னித்து, நம்மை இரட்சிக்க வல்லவராயிருக்கிறார். ஆனால் ஆவிக்குரிய ஜீவியத்தில் வளர்ந்த தேவனுடைய பிள்ளைகள் கர்த்தரை துதித்து ஸ்தோத்தரித்து, தங்கள் விண்ணப்பங்களை அவருக்கு தெரியப்படுத்தி எல்லா நன்மைகளையும் பெற்றுக் கொள்ளுவார்கள்.

 

1 சாமுவேல் 1 ஆம் அதிகாரத்தில் எல்க்கானாவின் மனைவி அன்னாளுக்கு குழந்தை இல்லாததால் பல ஆண்டுகள் அழுதாள். ஆனால் ஒரு நாள் அன்னாள் கர்த்தருடைய ஆலயத்திற்குப் போய், மனங்கசந்து, மிகவும் அழுது கர்த்தரை நோக்கி விண்ணப்பம் பண்ணி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன் என்று ஒரு பொருத்தனை பண்ணினாள். அவள் கர்த்தருடைய சந்நிதியில் தன் இருதயத்தை ஊற்றி விட்டாள். அப்புறம் அவள் துக்கமுகமாயிருக்கவில்லை. பொருத்தனையின் மகன் சாமுவேலை பெற்றுக்கொண்டாள்.

  

பிரியமானவர்களே! அதுபோல் நம்முடைய பாரங்கள், கவலைகள், ஏக்கங்கள், பெருமூச்சுகள் எல்லாவற்றையும் கர்த்தரிடத்தில் தெரிவிக்க வேண்டும். நம்பிக்கையோடு இரட்சிப்பின் தேவனுக்கு காத்திருக்கும் போது, தேவன் நம்மை கேட்டருளுவார். நாம் கர்த்தரை துதிக்கும்போது, இரட்சிப்பின் கெம்பீரசத்தம் நம் கூடாரத்தை நிரப்பும். கர்த்தரின் வலதுகரம் பராக்கிரமஞ்செய்யும். சகாயராகிய அவர் நம்மை நெகிழவிடாமலும், கைவிடாமலும் காத்துக்கொள்வார். அல்லேலூயா. 

- A. பாத்திமா

 

ஜெபக்குறிப்பு:-

நம் சிறுவர் முகாமில் கலந்து கொண்ட பிள்ளைகள் உள்ளத்தில் கர்த்தரின் வார்த்தை கிரியை செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler online casino online casino Piabet Piabet Giriş Ngsbahis Ngsbahis Giriş İnterbahis İnterbahis Giriş Klasbahis Klasbahis Giriş Coinbar Coinbar Giriş Limanbet Limanbet Giriş İmajbet İmajbet Giriş Restbet Restbet Giriş Matbet Matbet Giriş Jasminbet Jasminbet Giriş Belugabahis Belugabahis Giriş Online casino nz Best payout online casino nz jojobet jojobet giriş jojobet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş perabet perabet giriş perabet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş Meritking Perabet Holiganbet jojobet jojobet giriş jojobet güncel giriş bahsegel bahsegel bahsegel bahsegel bahsegel perabet perabet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş holiganbet holiganbet giriş belugabahis matbet romabet alobet alobet giriş bahissenin bahissenin giriş bayconticasino bayconticasino giriş atlasbet atlasbet giriş betcio betcio giriş grandpashabet grandpashabet giriş marsbahis marsbahis giriş matbet matbet giriş nakitbahis nakitbahis giriş pashagaming pashagaming giriş Meritking Meritking giriş imajbet imajbet giriş İmajbet Prizmabet Yakabet Betsat Betnano Restbet Perabet Perabet Giriş Perabet Güncel Giriş Cratosroyalbet