By Village Missionary Movement
Sunday, 21-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 21.06.2026
பாவங்களை மறைக்காதே
"தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்" - நீதி. 28:13
ஒரு அழகிய கிராமம். அங்கு வனிதா, வினிதா என்ற இருவரும் தோழிகள். இருவரும் இணைந்தே Schoolக்கு போவார்கள், விளையாடுவார்கள். ஒரு லீவு நாளன்று இருவரும் ஆலமரத்தடியில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது வினிதாவின் தாத்தா ரோட்டில் நடந்து செல்லவே தாத்தாவிடம், எங்க போறீங்க தாத்தா என்று கேட்டாள். தாத்தா நான் பண்ணையார் தோட்டத்தில் பறித்த மாம்பழங்களை அவர் வீட்டில் கொடுக்கச் செல்கிறேன் என்றார். உடனே இருவரும் தாத்தா நாங்களும் உங்க கூட தோட்டத்திற்கு வருகிறோம் என்றனர். தாத்தாவும் சரி, வாருங்கள் என தன்னுடன் அழைத்துச் சென்றார். இருவரும் விளையாடிக் கொண்டே சென்றனர். பண்ணையாரின் தோட்டமும் வந்தது. மாம்பழங்களை கூடையில் வைத்து அதை தாத்தாவின் தலையில் ஏற்றினர். தாத்தாவிடம் நாங்கள் தோட்டத்தை சுற்றிப் பார்க்கலாமா தாத்தா என்று கேட்டார்கள். தாத்தா வேண்டாம்மா. நாம் இதை பண்ணையார் வீட்டில் இறக்கி வைத்துவிட்டு நம் வீட்டுக்கு போவோம் என்றார். முன்னே சென்ற தாத்தா திரும்பிப் பார்த்து வேகமாக நடந்து வாருங்கள் என்றார். அப்பொழுது கூடையிலிருந்து மூன்று மாம்பழங்கள் கீழே விழுந்தது. தாத்தா அதை கவனிக்காமல் விரைவாக நடந்து சென்றார். பின்னால் வந்த வனிதாவும், வினிதாவும் கீழே விழுந்த மாம்பழங்களை எடுத்து சாப்பிட்டுக் கொண்டே நடந்தனர். மாம்பழம் தித்திப்பாக இருந்தது.
தாத்தா பண்ணையார் வீட்டிற்குள் சென்றார். இவர்கள் இருவரும் பழத்தை தின்றுக் கொண்டு வெளியே நின்றனர். வீட்டினுள்ளிருந்து பண்ணையார் தாத்தாவை திட்டும் சத்தம் கேட்டது. இருவரும் கேட்டிற்குள் சென்று பார்த்தால், பண்ணையார் பழங்களை எடை போட்டுப் பார்த்து, தாத்தாவை திட்டிக் கொண்டிருந்தார். உடனே வனிதாவும், வினிதாவும் உள்ளே சென்று ஐயா, எங்களை மன்னித்து விடுங்கள். தாத்தா பழங்களை கொண்டு வரும்போது, மூன்று பழங்கள் கீழே விழுந்தது. அதை எடுத்து நாங்கள் தான் சாப்பிட்டோம். தாத்தாவுக்கு அது தெரியாது. தயவு செய்து எங்களை மன்னியுங்கள் என்றனர். ஐயா, அந்த பழங்களுக்கு எவ்வளவு ரூபாய் என்று சொன்னால், நாங்கள் எங்கள் அப்பாவிடமிருந்து வாங்கி தருகிறோம் என்றனர். உடனே பண்ணையார் 'very good’ செல்லங்களே , நீங்கள் உங்கள் தவறை ஒத்துக் கொண்டீர்கள். இனிமேல் கீழே இருந்து எதையாவது எடுத்தால் அதை உரியவரிடம் கொடுக்க வேண்டும் சரியா என சொல்லி இரண்டு மாம்பழங்களை எடுத்து ஆளுக்கொன்று கொடுத்து அனுப்பினார்.
தம்பி, தங்கச்சி தவறு செய்தால் அதை மறைக்கக் கூடாது. செய்த தவறை அறிக்கை செய்து மன்னிப்பை பெற்று கொள்ளணும். o.k வா bye.
- Sis. சோபியா ஸ்டாலின்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864