Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.06.2026
Share:

By Village Missionary Movement

Saturday, 20-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 20.06.2026

 

தன்னை வெல்லுகிறவன்

 

"மோசே தேவனுடைய வீட்டில் எங்கும் உண்மையுள்ளவனாயிருந்தான்..." - எபிரெயர் 3:2

 

உள்ளான மனுஷனில் ஜெயம் பெற்றவன் தான் வாழ்வில் வெற்றி பெற்றவன். கர்த்தர் மோசேயைக் குறித்து சாட்சி கொடுக்கும் போது, மோசே என் வீட்டில் எங்கும் உண்மையுள்ளவன் என்கிறார். இங்கே தேவனுடைய வீடு என்று குறிக்கப்படுவது நம்முடைய சரீரம் அல்லது இதயம். நம்பிக்கையினாலே உண்டாகும் தைரியத்தையும் மேன்மை பாராட்டலையும் முடிவுபரியந்தம் உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருப்போமாகில், நாமே அவருடைய வீடாயிருப்போம் (எபி.3:6) என்று வேதம் சொல்கிறது. ஒரு மனிதன் உண்மையுள்ளவனாயிருந்தால் அவனே வெற்றி வாழ்க்கை வாழ்பவன். தான் வெற்றி பெறாமல் மற்றவரை வெற்றியின் பாதையில் நடத்துவது கூடாத காரியம். 

         

தானியேலைக் குற்றவாளியாக நிறுத்த வேண்டும் என்று பிரதானிகளும் தேசாதிபதிகளும் பிரயாசப்படுகின்றார்கள். அதற்காக தந்திரமாக தேசத்தின் குடிகள் அனைவரும் ராஜாவை வணங்க வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்படுகிறது. முப்பது நாள் வரையும் ராஜாவைத்தவிர வேற தெய்வங்களை வணங்கினால், சிங்கக்கெபியில் போடப்படுவது நிச்சயம் என்பது தானியேலுக்குத் தெரியும். ஆனாலும் அவன் ராஜாவை வணங்கவில்லை. அவன் எப்போதும் போல் தன் மேல் அறையிலே எருசலேமுக்கு நேராக பலகணிகள் திறந்திருக்க, தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற்படியிட்டு ஜெபம் பண்ணி, ஸ்தோத்திரம் செலுத்தினான். காரணம் அவனது உள்ளான மனிதனில் ஜெயம் இருந்தது. சிங்கக் கெபியிலும் சேதப்படாதபடி கர்த்தர் அவனைக் காத்தார்.  

 

மாற்கு 16:18 ல் "சர்ப்பங்களை எடுப்பார்கள்" என்று எழுதப்பட்டுள்ளது. யோவான் ஊழியம் செய்த நாட்களில் பரிசேயரிலும் சதுசேயரிலும் அநேகர் தன்னிடத்தில் ஞானஸ்நானம் பெரும்படி வருகிறதை அவன் கண்டு: விரியன் பாம்புக் குட்டிகளே! வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகைகாட்டினவன் யார்?(மத்.3:7) என்கிறார். இயேசுவும் தம்மிடத்தில் வருகிறவர்களைப் பார்த்து விரியன்பாம்புக் குட்டிகளே, நீங்கள் பொல்லாதவர்களாயிருக்க, நலமானவைகளை எப்படிப் பேசுவீர்கள்? இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும் (மத்.12:34) என்றார்.

        

அன்பு தேவ பிள்ளைகளே, யோவான் ஸ்நானன் மனிதர்களைப் பார்த்து விரியின் பாம்புக் குட்டிகளே என்று அழைப்பதைக் கவனியுங்கள். மனிதனுக்குள் சர்ப்பத்தின் தன்மை காணப்படுகிறது என்பதையே குறிப்பிடுகிறார். அப்படியானால் நாம் வசனத்தையும், இயேசு கிறிஸ்துவின் மரணத்தையும், உயிர்த்தெழுதலையும், நித்திய ஜீவனையும் விசுவாசித்து, நாம் சுவிசேஷத்தை பிரசங்கிக்கும் முன்பாக நமக்குள் இருக்கின்ற சர்ப்பத்தின் தன்மையை அகற்ற வேண்டும். அவ்வாறு செய்தால் வெற்றி வாழ்க்கை வாழ முடியும். ஆமென்.

- B. சுபாஷ்  

 

ஜெபக்குறிப்பு:-

VBS ஊழியத்தின் பின் தொடர் பணி எல்லா கிராமங்களிலும் செய்யப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al matbet matbet giriş pokerklas betpas maximcasino pashagaming pashagaming egebet casibom casinolevant virusbet ultrabet grandpashabet royalbet perabet matbet kralbet perabet perabet giriş meritbet meritbet giriş