Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.06.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 18-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 18.06.2026

 

ஆத்தும தாகம்                                    

 

“…(இயேசு) தாகமாயிருக்கிறேன் என்றார்” - யோவான் 19:28

 

இயேசுவை சிலுவையில் அறைந்த போது, தாகமாயிருக்கிறேன் என்றார். ஏனென்றால் அவருக்கு ஏற்பட்டது சரீர தாகமல்ல, அது ஆத்தும தாகம்.  

 

இயேசு தாம் ஊழியம் செய்த போது நீதிமான்களையல்ல, பாவிகளையே மனந்திரும்புகிறதற்கு அழைக்க வந்தேன் (மத். 9:13) என்றார். அதே போல யோவான் ஸ்நானன் அவரைப் பார்த்த போது இதோ, உலகத்தின் பாவத்தைச் சுமந்து தீர்க்கிற தேவ ஆட்டுக்குட்டி (யோ.1:29) என்றார். ஆம், அவர் ஆத்துமாக்களுக்காகவே வந்தார். ஜனங்களைப் பார்த்த போது ஆத்துமபாரத்தால் மனதுருகினார். சிலுவைக்கு செல்லும் முன், பந்தியிருக்கையில் தம்மை காட்டிக்கொடுக்கப்போகிற யூதாசின் ஆத்துமாவைக் குறித்து கவலைப்பட்டு ஐயோ; அந்த மனுஷன் பிறவாதிருந்தானானால் அவனுக்கு நலமாயிருக்கும் (மத்.26:24) என்றார். சிலுவையில் தொங்கும் போதும் அவரை தூஷித்த, வேடிக்கை பார்த்த, அழுத, அவரை ஏற்றுக் கொள்ளாத ஜனங்களை நினைத்து பாரப்பட்டு, தாகமாயிருக்கிறேன் என்றார். எனவே உயிர்த்தெழுந்த பின், வானத்திலும் பூமியிலும் சகல அதிகாரமும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆகையால், நீங்கள் புறப்பட்டுப் போய், சகல ஜாதிகளையும் சீஷராக்கி, பிதா குமாரன் பரிசுத்த ஆவியின் நாமத்திலே அவர்களுக்கு ஞானஸ்நானங் கொடுங்கள் என்கிறார். ஆம், ஒவ்வொரு மனிதனின் ஆத்துமாவும் விலையேறப்பெற்றது. உலகம் முழுவதையும் தராசின் ஒரு தட்டிலும், ஒரு ஆத்துமாவை மறு தட்டில் வைத்தால் ஆத்துமாவே மதிப்புள்ளது. அந்த ஆத்தும மீட்பிற்காக இயேசு கிறிஸ்து தம்மையே சிலுவையில் தந்துள்ளார். நாம் இலவசமாய் மீட்பை பெற்றோம். ஆனால் அது குற்றமற்ற இரத்தம் சிந்தி சம்பாதிக்கப்பட்டது. இதை உணர்ந்து நம் இரட்சிப்பை காத்துக் கொண்டு, பிறருடைய ஆத்துமாவின் மேல் கரிசனையுள்ளவர்களாய், இயேசுவை குறித்து அறிவித்து அவர்களின் ஆத்தும மீட்பிற்காய் ஜெபித்து, செயல்படுவோம்.                                                                                             

- Mrs .எமீமா சௌந்தரராஜன்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al matbet matbet giriş pokerklas betpas maximcasino pashagaming pashagaming egebet casibom casinolevant virusbet ultrabet grandpashabet royalbet perabet matbet kralbet perabet perabet giriş meritbet meritbet giriş