Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.06.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 17-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 17.06.2026

 

உணராதிருந்தார்கள்                                

 

“நோவாவின் காலத்தில் எப்படி நடந்ததோ, அப்படியே மனுஷகுமாரன் வரும் காலத்திலும் நடக்கும்” - மத்தேயு 24:37

 

நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இரண்டாம் முறை திரும்பி வரும் போது, இந்த உலகம் நோவாவின் காலத்தில் இருந்தது போல இருக்கும். மத்தேயு 24:38 ல் நோவாவின் நாட்களின் தன்மை எப்படிப்பட்டது என்று ஆண்டவர் சொல்கிறார். முதலாவது ஜனங்கள் புசித்து, குடித்துக் கொண்டிருந்தனர். இது அன்றாட வாழ்வின் ஒரு பகுதி. குடித்து என்று சொல்லும் போது இது மதுபானம் போன்றவற்றை குறிக்காமல் உணவின் ஒரு பகுதியாய் சொல்லப்படுகிறது. அடுத்ததாக அதே வசனத்தில் “பெண் கொண்டும் பெண் கொடுத்தும்” என்று ஆண்டவர் சொல்லும் போது இது விபசாரம் போன்ற பாவத்தை குறிக்காமல் திருமணம் பற்றியதாகும்.

 

இன்னொரு வார்த்தையில் சொன்னால், நோவாவின் நாட்களில் ஜனங்கள், அன்றாட வாழ்க்கை, சாப்பாடு, வாழ்வில் ஒரு நாள் வரும் திருமணம் போன்ற பாவமற்ற காரியங்களில் தான் ஈடுபட்டனர். ஆனால் சிருஷ்டிகரான தேவனை தங்கள் வாழ்க்கையில் தேடவில்லை. அவருக்கு முதலிடம் கொடுக்கவில்லை.

 

பிரியமானவர்களே, நாமும் கூட கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை நேசித்து, அவரை வாழ்வில் மையமாக வைக்காமல், வாழ்வின் அன்றாட காரியங்களாகிய சாப்பாடு, திருமணம் போன்றவற்றிற்கு மட்டும் நம் மனதை செலுத்தும் அபாயம் நேரிடலாம். இந்த வசன பகுதி வாழ்வின் எச்சூழ்நிலையிலும் கர்த்தருக்கு முதலிடம் கொடுக்க நம்மை நினைவு படுத்துகிறது.

- Bro. சந்தோஷ்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al matbet matbet bahiscasino betsat betsat pashagaming pashagaming betpas betpas giriş ngsbahis perabet perabet giriş