Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.06.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 09-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 09.06.2026

 

பலவந்தம்

 

“...பலவந்தம் பண்ணுகிறவர்கள் அதைப் பிடித்துக் கொள்ளுகிறார்கள்” – மத்தேயு 11:12

 

நாம் ஒரு பொருளை வாங்க வேண்டுமென்று தீர்மானித்து, அதைக் குறித்த விபரங்களைப் பெற நமது மொபைலிலுள்ள App ல் தேடும் போது அதன் விலை நாம் எதிர்பார்த்த அளவுக்கு இல்லாமல் இருக்கலாம். ஆனால் அடுத்த சில நிமிடங்களிலேயே அந்தப் பொருளை இன்னொரு நிறுவனம் நமக்கு இந்த விலைக்கு தருகிறேன் என்று தெரியப்படுத்த ஆரம்பிக்கும். அப்படியே அது தொடரவும் ஆரம்பிக்கும். நாம் எப்பொழுதெல்லாம் மொபைலை open பண்ணுகிறோமோ முதலில் நாம் என்ன பொருளைத் தேடினோமோ அந்த பொருள் அந்த மொபைலில் வந்து நிற்கும். பல கம்பெனிகள் நம்மிடத்திலே அந்த பொருளை பலவந்தம் பண்ணி கொடுப்பதற்கு முயற்சி செய்து கொண்டே இருக்கும். அடுத்த பொருளை நாம் வாங்குகிற வரைக்கும் அது தொடர்ந்து கொண்டே இருக்கும். தங்கள் கம்பெனியின் பொருளை நம்மை வாங்க வைக்கும்படி பலவிதங்களில் நெருங்கி பலவந்தம் பண்ணுகிறார்கள்.

 

இந்த உலகப் பொருளையே இப்படி பலவந்தமாய் வாங்க வைக்க முடியும் என்றால், நாம் பரலோக ராஜ்யத்தை எத்தனை பேருக்கு பலவந்தம் பண்ணிக் கொண்டிருக்கிறோம்? இயேசு கிறிஸ்துவைக் குறித்து எத்தனை பேருக்கு அறிவிக்க முயற்சிக்கிறோம்? எப்படியாவது இயேசுவை அவர்களுக்குள் கொண்டு வர வேண்டும் என்று சொல்லி நாம் முயற்சிக்கிற காரியம் என்ன? நமக்கு அவர் இரட்சிப்பை தந்திருக்கிறார். அந்த விலையேறப்பெற்ற பரலோக வாழ்க்கையை நமக்கு தந்திருக்கிறார். உங்களுக்காக ஒரு ஸ்தலத்தை ஆயத்தம் பண்ணப் போகிறேன் என்று சொல்லி இருக்கிறார். இந்த பரலோக ராஜ்யத்தை குறித்து, இயேசு கிறிஸ்துவை குறித்து எத்தனை பேருக்கு நாம் சொல்லுகிறோம்? திரும்பத் திரும்பச் சொல்ல முயற்சிக்கிறோமா? எப்படியாவது என்னுடைய சகோதரன், சகோதரி, உடன் பிறந்தவர்கள், உற்றார் உறவினர்கள், நண்பர்கள், என்னுடைய பிள்ளைகள் இப்படி எல்லாரிடத்திலும் இயேசுவை பலவந்தம் பண்ணுகிறோமா என்று சற்று யோசித்துப் பார்க்கலாம். ஆண்டவர் சொல்லுகிறார், யோவான் ஸ்நானன் காலம் முதல் பரலோக ராஜ்யம் பலவந்தம் பண்ணப்படுகிறது. இன்றைக்கும் அநேகர் ஆண்டவரை அறியாதபடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். அனேக மிஷனெரிகள் நம்முடைய தேசத்துக்கு வந்து தங்கள் உடைமைகளை இழந்து, தங்களுடைய குடும்பங்களை பிரிந்து தங்களுடைய ஜீவனையும் இழந்திருக்கிறார்கள். நாமும் பரலோக ராஜ்யத்தை பலவந்தம் பண்ணுகிறவர்களாய், அனைவருக்கும் இயேசுவினுடைய அன்பை சொல்லுவோம். எப்படியாவது ஏதாவது ஒரு வழியிலே இயேசு கிறிஸ்துவை குறித்து சொல்லிவிடலாமா என்று தினமும் முயற்சி செய்து பலவந்தம் பண்ணிக்கொண்டே இருப்போம்.   

 

நிச்சயமாகவே தேவன் ஒரு பெரிய எழுப்புதலை நாம் காணச் செய்வார். கர்த்தர் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக.     

- P. வேணு வில்லியம்ஸ்

 

ஜெபக்குறிப்பு:-

ஓவ்வொரு மாநிலத்திலும் 500 ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet