Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 08.06.2026
Share:

By Village Missionary Movement

Monday, 08-Jun-2026

இன்றைய தியானம்(Tamil) 08.06.2026

 

நியாயம் தீர்க்கப்படாதிருக்க 

 

"நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம்." - 1 கொரி. 11:31

 

ஒரு பட்டணத்தின் எல்லையில் அழகான பெண்ணின் சிலை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. ஒரு ஏழை சிறுமி, அச்சிலையின் அழகால் கவரப்பட்டு அதை போலவே தன் தோற்றத்தை சீர் செய்து கொள்ள விரும்பினாள். சிலையின் தலைமயிர் அழகாக வாரப்பட்டிருப்பதை கண்டு தன் உடைந்த சீப்பினால் தன் தலைமுடியை தினமும் அழகாக வாரிக் கொள்வாள். தன் அழுக்கான ஆங்காங்கே கிழிந்து போயிருந்த உடையை துவைத்து, தைத்து அணிந்து கொண்டாள். இப்படி நாளுக்கு நாள் தன்னை சரிபடுத்திக் கொண்டே வந்தாள். இவ்வாறு நாட்கள் செல்லச் செல்ல அவளது தோற்றம் அழகாக மாறியது.

        

 நம்மை நாமே நிதானித்து அறிவது எப்படி? மேற்கண்ட வேதப் பகுதியில் பரிசேயன் தன்னைத்தானே உயர்த்தி ஜெபிக்கிறான். ஆனால் வேதம் என்ன சொல்கிறது? தங்களைக் கொண்டு தங்களை அளந்து கொண்டு, தங்களுக்கே தங்களை ஒப்பிட்டுக் கொள்ளுகிற அவர்கள் புத்திமான்களல்ல (2 கொரி.10:12) என்றும், தன்னைத்தான் புகழுகிறவன் உத்தமனல்ல, கர்த்தரால் புகழப்படுகிறவனே உத்தமன் (2 கொரி. 10:18) என்றும் வேதம் சொல்கிறது. தன்னைத்தான் நிதானித்து அறிந்து, தான் ஒரு பாவி என்பதை உணர்ந்து, கர்த்தரின் கிருபைக்காக கெஞ்சிய ஆயக்காரனே கர்த்தரால் புகழப்பட்டு, நீதிமானாக்கப்படுகிறார்களேயன்றி பரிசேயன் அல்ல.

    

பிரியமானவர்களே, நாமும் நம்மை நாமே அளந்து கொண்டு, மற்றவர்களைப் பார்க்கிலும் நாம் எவ்வளவோ நல்லவர்கள், பரிசுத்தமானவர்கள் என்றெல்லாம் எண்ணிக் கொண்டிருக்க வேண்டாம். ஒவ்வொரு நாளும் இயேசுவின் அன்பு, பொறுமை, மன்னிக்கும் சிந்தை, சாந்தம், பரிசுத்தம், நன்மை செய்தல் ஆகியவற்றோடு நம்முடைய குண நலன்களை ஒப்பிட்டுப் பார்த்து, நாம் எவ்வளவு குறைவுள்ளவர்கள் என்பதை உணர்ந்து, "உம்மைப் போல என்னை மாற்றும்" என்று நம் உள்ளத்தின் ஆழத்திலிருந்து கர்த்தரை நோக்கி ஜெபிக்க வேண்டும். ஆவியானவர் நமக்கு நிச்சயமாக உதவி செய்வார். நாம் தேவனின் பார்வையிலும், மனிதனின் பார்வையிலும் மாற்றப்பட்டவர்களாக, ஆவிக்குரிய அழகுள்ளவர்களாக மாறுவோம். பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமாகிக் கொண்டே செல்ல தேவன் கிருபை பாராட்டுவாராக . ஆமென். 

- Mrs .கீதா ரிச்சர்ட்

 

ஜெபக்குறிப்பு:-

கண்மணி பிள்ளை இயேசுவுக்காக ஜெபத்திட்டதில் இணைந்துள்ள பிள்ளைகளின் இரட்சிப்பிற்காக, சுகத்திற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet