By Village Missionary Movement
Sunday, 07-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 07.06.2026 (Kids Special)
ஞானமே முக்கியம்
“கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.” -நீதி. 2:6
ஹலோ குட்டீஸ், புதிய கல்வியாண்டிற்குள் அடியெடுத்து வைத்து அடுத்த வகுப்புக்கு சென்றிருக்கிற உங்கள் அனைவருக்கும் எங்கள் அன்பான வாழ்த்துக்கள். அநேக நாள் Leave க்கு அப்புறம் School போயிருக்கீங்க. Teachers க்கு கீழ்ப்படிந்து, நல்ல பிள்ளைகளா இப்போதிலிருந்தே படிக்க ஆரம்பிக்கணும் O.K வா குட்டீஸ்.
வேதாகமத்தில் ஆண்டவர் சொப்பனத்தில் ஒரு மனிதனிடம் பேசி உனக்கு என்ன வேண்டும் கேள் என்றார். உங்ககிட்ட ஆண்டவர் கேட்டா நீங்க என்ன பதில் சொல்வீங்க. யோசித்து வைங்க. கதை முடியும் போது கேட்கிறேன். அந்த மனிதன் யார்? என்னதான் கேட்டார் என்று நான் உங்களுக்கு சொல்லட்டுமா? தாவீது ராஜாவுக்கு பிறகு சாலொமோன் தான் இஸ்ரவேல் ஜனங்களுக்கு ராஜா. மக்களை பற்றியோ, அரசியலை பற்றியோ விவரம் தெரியாத இளம் வயது சாலொமோன் எப்படி இந்த ராஜ்யங்களை ஆளப்போகிறேன் என்ற நினைவுகளோடு பொறுப்பேற்றார். ஆண்டவர் கனவில் தோன்றி நீ விரும்புகிறதை என்னிடத்தில் கேள் என்றார். உடனே சாலொமோன் ராஜா என்ன கேட்டார் தெரியுமா? எண்ணிக்கைக்கு அடங்காததும் இலக்கத்திற்கு உட்படாததுமான திரளான ஜனங்களை நியாயம் விசாரிக்க ஞானமுள்ள இருதயத்தை தந்தருளும் என்று கேட்டார். அந்த விண்ணப்பம் ஆண்டவருடைய பார்வையில் உகந்ததாய் காணப்பட்டது. அதனால் அவர் கேட்ட ஞானம் மட்டுமல்ல, கேளாத ஐசுவரியத்தையும், மகிமையையும் கொடுத்தார். அவரின் ஞானத்தை கேள்விப்பட்ட அநேக ராஜாக்களும் ராஜாத்திகளும் வந்து பார்த்து ஆச்சரியப்பட்டு போனார்கள். சாலொமோன் ராஜாவைப் போல் இதுவரை யாரும் பிறந்ததில்லை இனி பிறக்கப்போவதும் இல்லை என்று ஆண்டவர் சொன்னார். அவரின் அரசாட்சியையும், நியாயம் செய்யும் காரியத்தையும் கண்ட மக்கள் வியந்து பாராட்டினார்கள். சாலொமோன் ராஜாவின் நாட்களில் தேசம் நாற்பது வருஷம் அமைதியாய் இருந்ததாம். எவ்வளவு Super ல.
குட்டீஸ், நீங்களும் இயேசப்பாகிட்ட ஞானத்தை கேட்டு பெற்றுக் கொள்ளனும். எனக்கு Maths ரொம்ப கஷ்டம், Maths பிடிக்காது, Science வராது அப்படி சொல்லக்கூடாது. ஞானம் மிகவும் முக்கியம். இயேசப்பாவிடம் கேட்டு ஞானத்தைப் பெற்றுக் கொள்ள நீங்க ரெடி தானே குட்டீஸ் O.K Bye.
- Mrs. ஜீவா விஜய்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864