By Village Missionary Movement
Saturday, 06-Jun-2026இன்றைய தியானம்(Tamil) 06.06.2026
நற்குணம்
“ஆவியின் கனி, சகல நற்குணத்திலும் நீதியிலும் உண்மையிலும் விளங்கும்” - எபேசியர் 5:9
ஹவார்டு பல்கலைக்கழகத்தை உலகப்பிரசித்திப் பெற்ற பல்கலைக்கழகமாக மாற்றியவர் சார்லஸ் வில்லியம்ஸ். இவர் முகக் குறைபாட்டுடன் பிறந்ததால் சக மனிதர்களால் புறக்கணிக்கப்பட்டார். அந்த குறைபாட்டை சரி செய்ய பல முயற்சிகள் செய்து தோற்றுப் போனார். அப்போது அவரது தாய் இந்த குறைபாட்டை சரி செய்ய நம்மால் முடியாது. தேவ பெலனை பெற்றுக் கொண்டு, நற்கிரியை செய். அப்போது மனிதர்கள் உன் முகத்தைப் பாராமல், உன் செயல்களைப் பார்ப்பார்கள் என்றார்கள். சார்லஸு ம் அப்படியே வேதத்தை வாசித்து, ஜெபித்து தேவ பெலனோடு தன் அறிவை பெருக்கினார். தன் 35 வது வயதில் ஹவார்டு பல்கலைக்கழகத்தின் தலைவராகி, சிறப்பாக பணியாற்றி அப்பல்கலைக்கழகத்தை மிகச் சிறந்த கல்வி நிறுவனமாக மாற்றினார். அரசியல், தொழில், சமூகம் மற்றும் ஆன்மீகத் துறையிலும் சிறந்து விளங்கினார்.
நாம் நம் தோற்றம் நன்றாக இருக்க வேண்டுமென்று அதற்கான முயற்சிகளை எடுக்கிறோம். “சௌந்தரியம் வஞ்சனையுள்ளது, அழகும் வீண், கர்த்தருக்குப் பயப்படுகிற ஸ்திரீயே புகழப்படுவாள்” என்று நீதி. 31:30 ல் வாசிக்கிறோம். ஆனால் நம் தோற்றத்தை விட நம் கிரியைகள் மட்டும் தான் நாம் இவ்வுலகை விட்டு மறுமைக்குள் பிரவேசித்தாலும் பேசப்படும். நம்முடைய நல்நடத்தையும், நம் வாயிலிருந்து புறப்படும் வார்த்தைகளும் பிறருக்கு மாதிரியாய் இருக்க வேண்டும். அதற்கு நம் குணங்கள் மாற்றப்பட வேண்டும். குணங்கள் மாற்றப்பட கர்த்தரிடம் காத்திருந்து தேவபெலனைப் பெற்றுக் கொள்ள வேண்டும். என்னையல்லாமல் உங்களால் ஒன்றும் செய்யக் கூடாது என தேவனே கூறுகிறார். நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால் நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்கு செய்யப்படும் என்கிறார். வேதத்தை வாசித்து அதன்படி வாழ வேண்டும். பிறரை நேசித்து நற்கிரியைகளை செய்ய வேண்டும். தேவ அன்பு நம்மில் ஊற்றப்பட்டால் ஒழிய நம்மால் நற்கிரியைகளை செய்ய முடியாது. தேவனை நெருங்கி அவரின் வார்த்தைக்குக் கீழ்ப்படிந்து வாழுவோம்.
நம்மில் அநேகர் நம் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்பதில் மிகவும் நேரம் செலவளிப்போம், அதில் தவறில்லை. நல்ல தோற்றம் தேவை தான். ஆனால் அதைக் குறித்து பெருமையடைய ஒன்றுமில்லை. நம் தேவன், மனிதனின் வெளித்தோற்றத்தையோ, வெளிப்புறமாக, மனிதர்களுக்கு முன்பாக நாம் நடந்து கொள்ளும் விதத்தையோ வைத்து நம்மை மதிப்பிடுகிறவரல்ல. அவர் காண்பதோ நம் இருதயம்! அது நற்குணத்தால் நிறைந்திருக்கும் போது மிகுந்த கனிகளை கொடுப்போம்.
- Mrs. சரோஜா மோகன்தாஸ்
ஜெபக்குறிப்பு:-
கண்மணி பிள்ளை இயேசுவுக்காக ஜெபத்திட்டதில் இனணந்துள்ள பிள்ளைகளின் எதிர்கால வாழ்விற்காக ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864