Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.05.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 28-May-2026

இன்றைய தியானம்(Tamil) 28.05.2026

 

MOBILE DATA 

 

"புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக் கொள்ளுங்கள்.” -கொலோ.4:5

 

இன்றைக்கு கிராமம், நகரம், படித்தவர்கள், படிக்காதவர்கள் எல்லோரிடமும் எது இருக்கிறதோ இல்லையோ, Android phone முக்கியமாக இருக்கிறது. நம்மைச் சுற்றி உள்ளவர்களிடம், சில வேளைகளில் நம் வீட்டில் உள்ளவர்களிடம் கூட பேசுகிறோமோ இல்லையோ, phone ல் மணிக்கணக்காய் நேரத்தை செலவிடுகிறோம். பல நேரங்களில் அது பிரயோஜனமுள்ளதாய், நன்மையாய் இருந்தாலும், சில நேரங்களில் தேவையில்லாத, தீய காரியங்களை பார்க்கவும் அது ஏதுவாகிறது. சிலர் 2 GB ஒரு நாளைக்குப் போட்டிருக்கிறேன், அது வீணாகி விடுமே, என்று வேலையில் busy ஆக இருந்தாலும், phone use பண்ணி, சிலதை down load பண்ணி, Data வை காலி செய்யும் மனநிலையோடு இன்றைய மக்கள் வாழ்கின்றோம். ஆனால் நேரத்தை நம்மை படைத்த தேவனுக்கு பிரயோஜனமாகப் பயன்படுத்துகிறோமா என்றால் கேள்வி குறிதான். நேரத்தை தேவனுக்காய் தீவிரமாய் செயல்படுத்த வேண்டிய நாட்களில், ஏதேதோ காரியங்களில் வீணாக்குகிறோம்.

           

 வேதத்தில் எஸ்தர் புஸ்தகத்தில் யூத குலத்தை அழிக்க நினைத்த ஆமானின் சதிகளைத் தடுக்க மொர்தேகாயினால் எச்சரிப்புப் பெற்ற எஸ்தர், உபவாசம் பண்ணி ஜெபித்து, தீவிரமாய் செயல்பட்டாள். ராஜாவிடம் ஞானமாய் பேச பெலனை, கிருபைகளை ஆண்டவர் சமுகத்தில் பெற்றாள். ராஜாத்தி என்ற பதவியையோ, கணவன் என்ற உறவையோ சாராமல், பரலோகத்தின் தேவனைச் சார்ந்து, ஏற்ற காலத்தில் ராஜாவிடம் தன் ஜனங்களுக்காக மன்றாடினாள். என்ன ஆச்சரியம்! சாதகமான கட்டளைப் பிறந்தது. அஞ்சற்காரர் 127 தேசங்களுக்கும் தீவிரமாக அனுப்பப்பட்டார்கள். யூதரைக் குறித்த கலக்கம் ஜனங்களைப் பிடித்ததினால், அநேகர் யூத மார்க்கத்தில் அமைந்தார்கள் என்று பார்க்கிறோம். என்ன ஒரு வெற்றி! நேரத்தின் மேன்மையை உணர்ந்து தீவிரமாய் செயல்பட்டாள். எஸ்தர் காலதாமதம் பண்ணி இருப்பாளானால் யூத குலத்திற்கு தீமையே நிகழ்ந்திருக்கும்.

           

ஆம், இந்த நாட்களிலும் எத்தனையோ ஜனங்கள் அழிகிறார்களே, தேவப்பிள்ளைகளை அவமானப்படுத்தும் காரியம் நடக்கிறதே. எனக்கு வசதி இருக்கிறது, நான் safe ஆக இருக்கிறேன் என்று எண்ணுகிறீர்களா? 127 நாட்டுக்கு அதிகாரம் பெற்ற எஸ்தர் காலத்தைப் பிரயோஜனப்படுத்தினார்களே. இன்னும் mobile data வீணாகும் என்று அதை உபயோகித்து விட வேண்டுமென்று நேரத்தை வீணாக்குகிறோமே, ஜனங்கள் நரகத்தை நோக்கி தீவிரமாய் சென்று தேவன் கொடுத்த வாழ்வை வீணாக்கிக் கொண்டிருக்கிறார்களே, அவர்களுக்காக நாம் என்ன செய்கிறோம்? நரகம் தீவிரமாக செயல்படுகிறது, பிசாசும் தீவிரமாக செயல்படுகிறான். நாம் எப்படி செயல்படுகிறோம்? காலத்தை பிரயோஜனப்படுத்துகிறோமா? சிந்திப்போம்.

- G.எஸ்தர் செல்வி

 

ஜெபக்குறிப்பு:- 

NH சாலையில் ஜெபக் கோபுரம் கட்டுவதற்கான அரசாங்க அனுமதி கிடைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet