Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.05.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 12-May-2026

இன்றைய தியானம்(Tamil) 12.05.2026

 

கிறிஸ்துவை பிரதிபலிக்கும் வாழ்வு 

 

 “…உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது” - மத். 5:16

 

இத்தாலி நாட்டிலுள்ள பிளோரன்ஸ் என்ற ஊரில் 1820 ம் ஆண்டு மே 12ல் பிறந்தவர் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் அம்மையார். ‘கைவிளக்கு ஏந்திய காரிகை’ (‘The Lady With the Lamp’) என்று போற்றப்படும் இவர், மிகுந்த செல்வமும், செல்வாக்கும் நிறைந்தவர், ஆங்கில மரபைச் சேர்ந்தவர். அழகும், அறிவும், இரக்கபண்புகளும் நிறைந்த பிளாரன்ஸ், தன் தந்தையின் செல்ல மகள் ஆவார். தன் தாய்மொழியாகிய ஆங்கிலத்துடன் இலத்தீன், கிரேக்கம், ஜெர்மனி, இத்தாலி, பிரெஞ்சு போன்ற மொழிகளிலும் புலமைப் பெற்றவர். இயற்கையிலேயே பிறருக்கு உதவும் குணம் படைத்த பிளாரன்ஸ், எளிய மக்களுக்கு உதவுவதற்காக செவிலியர் பயிற்சியில் சேர விரும்பினார். தன் 16 ம் வயதில் ஜெர்மனியில் படித்து, பின்னர் இலண்டனில் பல ஆண்டுகள் செவிலியர் மேற்பார்வையாளராக பணியாற்றினார். 1854 ம் ஆண்டு ஐரோப்பாவில் ஏற்பட்ட போரில் எண்ணற்ற மக்கள் காயமடைந்து மடிந்தனர். தேவ அன்பினால் நிறைந்திருந்த பிளாரன்ஸ் அம்மையார் தன்னலம் கருதாமல் இரவும் பகலும் காயமுற்ற மக்களுக்கு உதவிசெய்தார். இவரின் சேவையை பாராட்டி, விக்டோரியா அரசி, அரசு செஞ்சிலுவை விருதை வழங்கி கௌரவித்தார். எளிமையாய் வாழ்ந்த பிளாரன்ஸ் தனக்கு வழங்கப்பட்ட பரிசுத் தொகையைக் கொண்டு செவிலியர் பள்ளியை ஆரம்பித்தார். இவரால் எழுதப்பட்ட “செவிலியர் கடமை” என்ற நூல் செவிலியர்களின் பாட நூலாக இன்றளவும் செயல்பட்டு வருகிறது. தனது 90 ம் வயதில் இவ்வுலகைவிட்டு மறைந்தார். இவரது பிறந்த நாளான மே 12-ஐ உலக தாதியர் தினமாக கொண்டாடி வருகிறோம். 

 

மத்தேயு 5 ம் அதிகாரத்தில் ‘நீங்கள் பூமிக்கு உப்பாயிருக்கிறீர்கள்’, ‘நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்’ என்று இயேசு கிறிஸ்து சொல்லுகிறது போல, நாமும் நம்மை சுற்றியுள்ள மக்களின் வாழ்விலுள்ள இருளை அகற்றி, அவர்களின் வாழ்வில் வெளிச்சத்தை ஏற்றுபவர்களாய் இருக்க வேண்டும். மனுஷர் உங்கள் நற்கிரியைகளைக் கண்டு, பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதாவை மகிமைப்படுத்தும்படி, உங்கள் வெளிச்சம் அவர்கள் முன்பாகப் பிரகாசிக்கக்கடவது.

 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பூமியெங்கும் நன்மை செய்கிறவராய், மனதுருக்கத்துடன், ஜனங்களின் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்ந்து காட்டினார். இருளிலிருந்த ஜனங்களுக்கு ஒளி விளக்காய் திகழ்ந்தார். நமது வாழ்வு பிதாவை மகிமைப்படுத்துவதாக இருக்க வேண்டும். மரித்தும் மகிமையாக பேசப்படும் பிளாரன்ஸ் அம்மையாரைப் போல நம் ஜீவியமும் அமைய தேவன் உதவி செய்வாராக! எனக்கன்பானவர்களே, தேவ அன்பில் நிறைந்து பிறர் நலம் பேணுபவர்களாக, தெய்வீக சுபாவங்களைக் கொண்டவர்களாக நாம் வாழ தேவன் கிருபை செய்வாராக!

- Mrs. சரோஜா மோகன்தாஸ்

 

ஜெபக்குறிப்பு:- 

VBS ஊழியத்திற்கு தன்னார்வ ஊழியர்கள் எலும்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş