Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22-06-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 22-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 22-06-2021

 

“வருகிறவர் இன்னுங் கொஞ்சக் காலத்தில் வருவார், தாமதம் பண்ணார்.” – எபிரெயர் 10:37

 

நரகத்திலே, பிசாசுகளின் மாநாடு ஒன்று நடந்து கொண்டிருந்தது. அதில், “மக்களை இரட்சிப்பின் பாதையில் விடாமல் தடுப்பது எப்படி?” என்ற திட்டம் தீட்டப்பட்டன. முதல் வரிசையிலிருந்த குட்டிப் பிசாசு கூறியது, “கடவுளே இல்லை” என்ற செய்தியைப் பரப்பலாம் என்றது. மற்றவை “இது ஏற்கனவே பல மக்கள் கூறி வருவதுதானே, புதிதான செய்தியல்ல” என்றன. இன்னொரு பிசாசு, “நரகமே இல்லை” என்ற செய்தியைப் பரப்பலாம் என்றது. மற்றவை “அப்படியானால் சொர்க்கம் பற்றிய செய்தியை மக்கள் விசாரிப்பார்களே இது சரியான திட்டமல்ல” என்றன. மற்றொரு பிசாசு, “இயேசு வரத் தாமதமாகும்” என்ற செய்தியைப் பரப்பலாமே என்றது, மற்றவை, ஆமாம், ஆமாம் இது கிறிஸ்தவர்களுக்கும் பிடித்த ஒரு நல்ல திட்டம்” என்று வரவேற்றன. 

 

உலகத்தின் முடிவை நெருங்கிக் கொண்டிருக்கிற இக்காலக்கட்டத்தில், எந்த நிமிடத்திலும் கிறிஸ்துவின் வருகை வரும் என்ற நம்பிக்கையைப் பலர் இழந்து விட்டனர். ஆனால் மனிதன் வருகையை நம்புகிறானோ இல்லையோ, இந்த உண்மை நிச்சயமாக நிறைவேறும். “இதோ, நியாயாதிபதி வாசற்படியில் நிற்கிறார்” (யாக்கோபு 5:9) “எல்லாவற்றிற்கும் முடிவு சமீபமாயிற்று” (1பேதுரு 4:7) இவ்வசனங்களெல்லாம் அவருடைய வருகை தாமதமாகாது என்பதை நம் உள்ளத்தில் உரைப்பதாய் உள்ளது. ஆகவே நாம் நம் நடக்கையிலெல்லாம் சுத்தமுள்ளவர்களாகவும், கிறிஸ்துவை எதிர்கொண்டு செல்ல ஆயத்தமுள்ளவர்களாகவும், காணப்பட வேண்டும். இவ்வுலகில் நாம் செய்யத்தக்க பொறுப்பு எதுவோ, ஊழியமோ, தொழிலோ எதுவானாலும் அதை சுறுசுறுப்பாய், நமது வேலையை உத்தமத்தோடு நிறைவேற்ற வேண்டும். 

 

பிரியமானவர்களே! நமது வீட்டிற்கு நாளை ஒரு விருந்தினர் வருகிறார் என்றால் இன்றே வீட்டை ஒழுங்குபடுத்துகிறோம். நாளை சமையலுக்கு தேவையான அனைத்தையும் வாங்கி வைத்துவிடுகிறோம். “மெய்யாகவே நான் சீக்கிரமாய் வருகிறேன்” (வெளி.22:20) என்ற இயேசு கிறிஸ்துவை சந்திக்க நமது ஆயத்தம் எந்த அளவில் உள்ளது? சிந்திப்போம். தேவன் வர தாமதமாகும் என்ற செய்தி பிசாசின் தந்திரம் ஆகும். ஆகவே எப்போதும் நமது அரைகள் கட்டப்பட்டதாயும், விளக்கு எரிகிறதாயும், எஜமான் வர ஆயத்தமாக காத்திருக்கிறவர்களாக காணப்படுவோம். தேவ எக்காளம் தொனிக்கையில் மத்திய வானில் அவரை எதிர் கொண்டு போய் நித்திய நித்தியமாய் அவரோடு வாழ்வோம்.

- K. மணிமொழி

 

ஜெபக்குறிப்பு:

ஊக்கமான ஜெபத்தினாலும், உதாரத்துவமான காணிக்கையினாலும் தாங்கும் பங்காளர்கள் அநேகரை புதியதாக தேவன் இவ்வூழியத்தில் இணைக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking jojobet