By Village Missionary Movement
Sunday, 03-May-2026இன்றைய தியானம்(Tamil) 03.05.2026 (Kids Special)
வேதமே எனக்கு நலம்
“அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்” - சங்கீதம் 119:72
ஹலோ குட்டி செல்லங்களே, எல்லாரும் சுகமா இருக்கீங்கன்னு நினைக்கிறேன். லீவு விட்டதால ரொம்ப ஜாலியா இருப்பீங்க. அதுமட்டுமல்ல, VBS க்கு போகலாம். அங்க நிறைய வசனங்கள், சூப்பரான பாடல்கள், நாடகங்கள் என Enjoy பண்ணலாம். சரி, நாம கதைக்குள்ள போகலாமா?
ஒரு பணக்காரர் பைபிளையும், பணத்தையும் எடுத்துக்கொண்டு, “இன்னைக்கு கஷ்டப்படுற யாருக்காவது நான் இதைக் கொடுத்து உதவணும் இயேசப்பா” என்று ஜெபம் பண்ணிக் கொண்டே ரோட்டில் நடந்து போனார். அப்போ அந்த வழியில் ஒரு வயதானவர் ரோட்டில் உட்கார்ந்து பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த பணக்காரர் அவரிடம் போய், ஒரு கையில் பணத்தையும், ஒரு கையில் பைபிளையும் நீட்டினார். அப்போது அவர் சொன்னார், எனக்குப் பசிக்குது, கையில் காசு ஒன்றும் இல்லை. இந்த பணத்தை எடுத்துக்கணும் போல இருக்குது. ஆனா எங்க அம்மா ஒரு வசனத்தை அடிக்கடி சொல்லுவாங்க. "அநேகமாயிரம் பொன் வெள்ளியைப்பார்க்கிலும், நீர் விளம்பின வேதமே எனக்கு நலம்."(சங்.119:72). நான் தான் வேதத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் மனம் போல வாழ்ந்து விட்டேன். என் அம்மா சொன்ன வேதத்தில் என்னதான் இருக்கிறதென்று படித்துதான் பார்ப்போமே என்று எண்ணி பைபிளை எடுத்துக்கொண்டார். பணக்காரருக்கு ரொம்ப ஆச்சரியமா போச்சு. பசியிலும் பட்டினியிலும் கஷ்டப்பட்டாலும் பைபிளை எடுத்துக்கிட்டாரே என்று நினைத்தார்.
அவர் ஒரு கவரில் அந்த பணத்தை வைத்து, அதை பைபிளுக்குள் வைத்து அந்த வயதானவரிடம் கொடுத்துவிட்டு சென்றார். ஆமா செல்லங்களே, பைபிள் வசனம் தங்கம், வெள்ளியைப் பார்க்கிலும் விலையேறப்பெற்றது. அதை எடுத்து தினமும் வாசிக்கணும். ஒருவேளை அர்த்தம் தெரியலன்னா பெரியவங்க, இல்லன்னா உங்க Sunday Class டீச்சர் கிட்ட கேட்டு புரிஞ்சிக்கணும். வேதத்தை தினமும் வாசித்து அதன் படி நடந்தால், தேவன் உங்களை ஆசீர்வதிப்பார். அந்த வயதானவரும் படிச்சிகிட்டே பக்கங்களைத் திருப்பும் போது, பைபிளில் இருந்து ஒரு கவர் கீழே விழுந்துச்சு. என்னடா கவர்ன்னு எடுத்துப் பார்த்தா, கவருக்குள் பணம் இருந்தது. அவருக்கு ரொம்ப ஆச்சரியம். அப்போது அவருக்கு ஒரு வசனம் ஞாபகத்திற்கு வந்துச்சு. “முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள், அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக்கூடக் கொடுக்கப்படும்.” (மத்.6:33)
ஆமா, குட்டிச் செல்லங்களே! இயேசப்பா அந்த வயதானவரை ஆசீர்வதித்தது போல, வேதத்தை நீங்க தினமும் வாசிச்சீங்கன்னா, அதன் மூலம் உங்களோட பேசுவார், உங்களை ஆசீர்வதிப்பார். ஆண்டவர் எவ்வளவு பெரியவர் பாருங்க! சரி செல்லங்களே, இப்ப நீங்க வேதத்தை வாசிக்க ஆரம்பிச்சிருப்பீங்கன்னு நான் நினைக்கிறேன். O.K. bye.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864