Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.05.2026
Share:

By Village Missionary Movement

Friday, 01-May-2026

இன்றைய தியானம்(Tamil) 01.05.2026

 

உலக தொழிலாளர் தினம்                             

 

“…நான் உங்களுடனே இருக்கிறேன் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார்.” - ஆகாய் 2:4

 

தேவ பிள்ளைகள் அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள். ஆகாய் தீர்க்கதரிசி மூலமாக ஆலய கட்டுமான பணி செய்து சோர்ந்து போயிருந்த மக்களுக்கு இந்த ஆசீர்வாதமான வாக்குத்தத்தம் சொல்லப்பட்டது. இன்று ‘உலக தொழிலாளர் தினத்தைக்’ கொண்டாடும் தொழிலாளர்களுக்கு ஆண்டவரின் வாக்குத்தத்தம் இது!  

 

ஆதி.1:26-30 ல் நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்பி, எல்லாவற்றையும் ஆண்டு கொள்ளுங்கள். பூமியிலுள்ள எல்லாவற்றையும் உங்களுக்கு ஆகாரமாக கொடுத்தேன். மனிதன் உழைக்க வேண்டும் என்று ஆண்டவர் கட்டளையிட்டார். சங்கீதம் 15:5 ல் தன் பணத்தை வட்டிக்குக் கொடாமலும், பரிதானம் வாங்காமலும் இருக்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை. நீதி.16:11 ல் வியாபாரிகள் பயன்படுத்துகிற சுமுத்திரையான நிறைகோலும் தராசும் கர்த்தருடையது. நீதி.20:10,23 ல் வெவ்வேறான நிறைகல்லும், வெவ்வேறான மரக்காலும் கர்த்தருக்கு அருவருப்பானவைகள். ஆகவே வியாபாரிகள் கர்த்தருக்கு பயந்து அவருடைய வார்த்தையின்படி தொழில் செய்ய வேண்டும்.

 

 இயேசு கிறிஸ்துவும் ஒரு நல்ல தொழிலாளி தான். மாற்கு 6:3 ல் "இவன் தச்சன் அல்லவா?" இயேசு வளர்ந்த ஊரில் சீஷர்களோடு ஜெப ஆலயத்தில் உபதேசம் பண்ணினதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, இந்த தச்சு தொழில் செய்கிறவனுக்கு ஞானம் எப்படிப்பட்டதாக இருக்கிறது என்றார்கள். ஆகவே எந்த தொழிலும் இழிவானது அல்ல, அது ஆசீர்வாதமே. 2 தெசலோ.3:10 ல் ஒருவன் வேலைசெய்ய மனதில்லாதிருந்தால் அவன் சாப்பிடவும் கூடாது. உழைத்து உண்பதே ஆண்டவரின் விருப்பம்.  

 

ஒரு தொழில் இரகசியம் இருக்கிறது. நீங்கள் செய்கிற தொழில் ஆசீர்வாதமாக இருக்க, இடைவிடாமல் ஜெபம் பண்ணுங்கள். வேதத்தை வாசித்து, தியானியுங்கள். தேவனுக்காக உற்சாகமாக கொடுங்கள். நீங்கள் செய்கிற தொழிலையும், உங்கள் உழைப்பையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார்.  

 

இந்த தொழிலாளர் தினத்தில், அவரவர் செய்கிற வேலையை உண்மையாய், உத்தமமாய், உற்சாகமாய் செய்யுங்கள். தொழிலாளர் எல்லோரோடும் இருக்கிறேன் என்று ஆகாய் தீர்க்கதரிசி மூலம் நம்மை ஆசீர்வதிக்கிறார். 

- Rev.S.ஜோதி நாயகம்

 

ஜெபக்குறிப்பு:-

இம்மாத ஊழியங்களுக்காக ஊழியத் தேவைகளுக்காக ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al holiganbet giriş holiganbet casibom bets10 extrabet royalbet süperbetin casibom giriş betcio royalbet betpas giriş milanobet bahiscasino betpas bahiscasino atlasbet romabet giriş holiganbet giriş bahiscasino ngsbahis betplay holiganbet jojobet casibom romabet betpas