Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 30.04.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 30-Apr-2026

இன்றைய தியானம்(Tamil) 30.04.2026

 

உருவாக்குகிறார்  

 

"...களிமண் குயவன் கையில் இருக்கிறதுபோல நீங்கள் என் கையில் இருக்கிறீர்கள்" - எரேமியா 18:6

 

ரேஷ்மா அம்மாவோட பிறந்தநாளுக்கு பரிசு வாங்குவதற்காக கடைக்குச் சென்றாள். கடையிலிருந்த எந்த பொருளும் அவள் மனதுக்கு பிடிக்கவில்லை. அந்த நேரத்தில் கடையினுள் ஒரு பேசுற சத்தம் கேட்டது. அவள் சத்தம் வந்த இடத்துக்குச் சென்றாள். அங்கு ஒரு ஓரத்தில் மண்ணாலான ஒரு tea cup இருந்தது. அவள் அந்த tea cup ஐ பார்த்து, 'நீ ரொம்ப அழகா இருக்க' என்று சொன்னாள். அதற்கு அது, முதலில் நான் களிமண்ணாய் தான் இருந்தேன். குயவன் என்னை இப்படி மாற்ற பல கடினமான process க்குள்ளாக என்னை கொண்டு சென்றார். எனக்கு ரொம்ப வலிக்க ஆரம்பித்தது. என்னை விட்டு விடுங்கள் என்று கூறி அழுதேன். ஆனால் அவரோ கொஞ்சம் பொறுத்துக்கொள் என்று சொன்னார். எனக்கு நல்லதொரு வடிவம் வரும் வரை என்னை வனைந்தார். பின்பு என்னை தீயில் சுட்டார். எனக்கு ரொம்ப சுடுது என்று கத்தினேன். என் மீது வர்ணம் தீட்டி, என்னை ஒரு கண்ணாடியின் முன்பாக வைத்தார். நான் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருந்தேன். எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர் என்னைப் பார்த்து, நீ களிமண்ணாய் இருந்தாய். நான் உன்னை எடுத்து வனைந்தேன். உனக்கு வலிக்கும் என உன்னை சூளையில் வைத்து சுடாமல் இருந்திருந்தால், நீ பயன்படாமல் போயிருப்பாய். உன்னை அழகாக மாற்ற நான் இவ்வளவு கஷ்டப்பட்டேன் என்றார். இந்த கதையெல்லாம் கேட்டுவிட்டு ரேஷ்மா அந்த tea cup ஐ அம்மாவுக்கு பரிசளிக்க வாங்கிச் சென்று எரேமியா 18:6 ஐயும் எழுதி கொடுத்தாள்.

 

எரேமியாவைப் பார்த்து கர்த்தர் நீ எழுந்து, குயவன் வீட்டிற்குப் போ. அங்கே என் வார்த்தைகளை உனக்குத் தெரிவிப்பேன் என்றார். எரேமியா போன போது, குயவன் மண்பாண்டம் வனைந்து கொண்டிருந்தான். அவன் வனைந்து கொண்டிருந்த மண்பாண்டம் அவன் கையிலே கெட்டுப்போனபடியினால், அதை திருத்தமாய் செய்யும்படிக்கு, அதைத் திரும்ப வேறே பாண்டமாக வனைந்தான். அப்பொழுது எரேமியாவுக்கு கர்த்தருடைய வார்த்தை உண்டாகி இஸ்ரவேல் குடும்பத்தாரே, இந்தக் குயவன் செய்ததுபோல நான் உங்களுக்குச் செய்யக்கூடாதோ என்று கர்த்தர் உணர்த்தினார்.

 

எனக்கன்பானவர்களே, நம் வாழ்க்கையிலும் குயவனாக இருக்கிற இயேசுவின் கையில் நாம் களிமண்ணாய் இருக்கிறோம். நம்மை எவ்வாறு வனைந்தால் நம் எதிர்காலம் சிறந்ததாக அமையும் என்பது அவருக்குத் தெரியும். ஒருவேளை அவர் நம்மை நடத்தி செல்லும் பாதை கடினமாக, கஷ்டம் நிறைந்ததாக, வலிகளைத் தரக்கூடியதாக கூட இருக்கலாம். அது எல்லாமே நம்மை உருவாக்க, நம்மை பொன்னாக விளங்கப் பண்ணத் தான். நாம் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்று தான். நம்மை நாமே தாழ்த்தி, அவர் கரங்களில் முற்றிலுமாக ஒப்புக் கொடுத்தால் மட்டும் போதும். அவரே நம்முடைய வாழ்க்கையை சிறந்ததாக வனைந்து நம்மை மேன்மைப்படுத்துவார்.

- Sis. சிந்து

 

ஜெபக்குறிப்பு:-

பள்ளி ஊழியங்களில் பிள்ளைகள் கற்றுக் கொண்ட வசனங்கள் மனதில் பதிந்து கிரியை செய்ய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al padişahbet padişahbet giriş casibom giriş bets10 extrabet royalbet süperbetin jojobet casibom holiganbet galabet matbet matbet giriş hilbet bahiscasino celtabet antikbet betoffice