By Village Missionary Movement
Sunday, 26-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 26.04.2026 (Kids Special)
இரக்கமுள்ளவனாயிரு
"எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்" - கொலோ. 3:24
Hai குட்டீஸ், எல்லாரும் நல்லா இருக்கீங்களா? ம்... superஆ இருக்கோம் அக்கான்னு சொல்றீங்களா. சரி, யாருக்கெல்லாம் ரொம்ப தூரம் பிரயாணம் பண்ணப் பிடிக்கும். அதுவும் மலைகள், ஆறுகள் உள்ள பகுதியில், இயற்கையை ரசித்துக்கொண்டே போகணும்னா சந்தோஷமா தானே இருக்கும். ஜாலி ஜாலி ன்னு தானே சொல்லுவீங்க. இப்படித்தான் குட்டீஸ், ஒரு நாள் பஸ்ல ரஞ்சித் தன் அம்மா அப்பா கூட travel பண்ணினான். அங்க பாருங்க எவ்வளவு அழகாக இருக்கிறது என்று சந்தோஷமா இயற்கையை ரசித்துக் கொண்டே போனான். போற வழியில் சிலர் சைக்கிள்ல போனாங்க. பைக்ல போனவங்க speedடா போனாங்க. இன்னும் சிலர் கார்ல போனாங்க. பெரிய கண்டெய்னர் லாரி போச்சு. இவங்க போன பஸ் நிதானமாய் சென்று கொண்டிருந்தது. ரஞ்சித்- தும் வேடிக்கை பார்த்துக்கொண்டே மக்காச்சோளம் சாப்பிட்டுக்கிட்டு, அம்மாவிடம் பேசிக்கொண்டே சென்றான்.
கொஞ்ச நேரத்துல டமால்....னு ஒரு பெரிய சத்தம் கேட்டது. ஐயோ! அம்மான்னு கம்பியப் பிடிச்சி ஒரு வழியா கீழே விழாமல் சமாளித்துக் கொண்டான் ரஞ்சித். என்ன பிரச்சனை என்று பார்க்க எல்லாரும் கீழே இறங்கிட்டாங்க. பார்த்தா எதிர்ல வந்த ஆட்டோ, ஒதுங்க இடமில்லாம ரஞ்சித் சென்ற பஸ் மீது மோதிடுச்சு. அந்த ஆட்டோ டிரைவர் பதறிப் போய் நடுக்கத்துடன், மூச்சு வாங்கியவாரே ஒருவரின் கைகளை இறுகப்பிடித்தார். நீங்களா இருந்தா அந்த இடத்துல என்ன பண்ணியிருப்பீங்க குட்டீஸ். இந்த மாதிரி சூழ்நிலையில பாதிக்கப்பட்டவருடைய பயம் நீங்கும் படி தைரியமாய் பேசணும். முதலுதவி செய்து மருத்துவமனைக்கு கூட்டிச் செல்ல தீவிரப்பட வேண்டும். ஆனால் அங்க சுத்தி நின்னவங்க அதாவது பஸ் டிரைவர், கன்டெக்டர் எல்லாரும் ஆட்டோவை ஓட்டி வந்த அந்த அண்ணாவை திட்டினாங்க. அந்த அண்ணன் தெரியாம தானே இடிச்சாங்க, அவங்கள மன்னிச்சுடனும் அப்படித்தானே. இதை கவனித்துக் கொண்டிருந்த பெரியவர் ஒருவர் அவருக்கு வேண்டிய உதவியை செய்தாங்க. இதை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சித்தின் உள்ளத்தில் பெரிய தாக்கம் உண்டானது. நானும் இப்படி இரக்கமுள்ளவனாய் இருக்க வேண்டுமென்று! மீண்டும் பஸ் புறப்பட்டது. ரஞ்சித்தின் உள்ளத்தில் பெரியவர் செய்த காரியம் படம் போல ஓடிக்கொண்டிருந்தது.
அன்பான தம்பி தங்கச்சி, உன்னைப் போல பிறரையும் நேசி என்று இயேசப்பா கற்றுக் கொடுத்திருக்காங்க. உங்களுக்கு ஒன்னு தெரியுமா? ஏழைகளுக்கு, கஷ்டப்படுறவங்களுக்கு நாம என்ன செய்தாலும், அது இயேசப்பாவுக்கே செஞ்ச மாதிரியாம். அவங்க மேல இரக்கப்பட்டு, அவங்களுக்கு உதவி செய்தால், நம்ம கஷ்டத்துல "JESUS" இரக்கப்பட்டு, நமக்கு உதவி செய்வார். அப்புறம் என்ன இரக்கப்பட்டு மற்றவர்களுக்கு உதவி செய்தால் நீயும் இயேசப்பாவோட செல்லப்பிள்ளை தான்.
- G. எஸ்தர் செல்வி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864