Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 24.04.2026
Share:

By Village Missionary Movement

Friday, 24-Apr-2026

இன்றைய தியானம்(Tamil) 24.04.2026

 

பொறுமையுடன் காத்திரு   

 

"கர்த்தருக்காகப் பொறுமையுடன் காத்திருந்தேன்; அவர் என்னிடமாய்ச் சாய்ந்து, என் கூப்பிடுதலைக் கேட்டார்" - சங்கீதம் 40:1

 

விஞ்ஞானம், பொருளாதாரம், அரசியல் போன்ற எல்லாத் துறைகளிலும் முன்னேற்றத்தைக் காணும் போது, நமக்கு வியப்பாக உள்ளது. ஆனால் எல்லாக் கண்டுபிடிப்புகளின் பின்னணியிலும் அனேக தியாகச் செம்மல்கள் இருப்பார்கள்.

ஜார்ஜ் ஸ்டீபன்சன் என்றதுமே நம் நினைவில் வருவது அவர் ஒரு பெரிய விஞ்ஞானி, புகைவண்டியை கண்டுபிடித்தவர் என்பது தான். ஆனால் அவரின் கண்டுபிடிப்புகளுக்குப் பின்னால் அவரது கண்ணீரின் வாழ்க்கை சொல்லும் சம்பவங்கள் ஏராளம். சிறந்த ஞானமும், செயல் திறனும் உள்ளவராயிருந்தாலும் தன் வறுமை நிறைந்த வாழ்க்கையை மிகுந்த பொறுமையோடு சகித்து, கர்த்தரிடம் நம்பிக்கையோடு காத்திருந்து உயர்வை பெற்றார்.

 

பள்ளியில் சென்று படிக்க முடியாமல், பகல் முழுவதும் மாடுகளை மேய்த்து விட்டு, இரவு பள்ளியில் சேர்ந்து படித்தார். விஞ்ஞானக் கருவிகளிலுள்ள தொழில் நுட்பங்களை ஆராய்வதற்கு அதிக நாட்டங் கொண்டு அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார். தன் அன்றாடத் தேவைகளுக்காக செருப்புத் தைக்கும் தொழிலைச் செய்தார்.

 

வாலிப வயதில் நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்தார். ஒருமுறை பழுதடைந்து போன ஒரு இயந்திரத்தை சரிசெய்ய அனேகர் முயற்சித்தும் பழுதை நீக்க முடியவில்லை. அற்பமாக எண்ணப்பட்ட ஸ்டீபன்சன், தன்னை யாரும் விரும்பி அழைக்கவில்லை என்றாலும், தானாகவே முன் வந்து அந்த இயந்திரத்தின் பழுதை நீக்கினார். அனைவரும் வியப்பில் ஆழ்ந்தனர். அந்த முதலாளியும் அவரைப் பாராட்டி, ஒரு பெரிய தொகையை பரிசாகக் கொடுத்தார். அந்தத் தொகையை மூலதனமாக கொண்டு தான் புகை வண்டியைக் கண்டுபிடித்தார். யாரும் தன்னைப் போல் மாணவப் பருவத்தில் கஷ்டங்கள் அனுபவிக்கக் கூடாது என்று அனேக இலவச ஆய்வுக்கூடங்களையும் நிறுவினார்.

 

வேதத்தில் கூட மிகப் பொறுமையுடன் காத்திருந்து வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட சந்ததியை ஆபிரகாம் கண்டார். மோசேயும் ஆண்டவரின் வார்த்தையைக் கேட்டு பல சவால்களில் வெற்றி பெற்று மிகுந்த பொறுமையோடு இஸ்ரவேலரை கானானுக்கு அழைத்துச் சென்றார். யாக்கோபு 5:11 ல் “இதோ, பொறுமையாயிருக்கிறவர்களைப் பாக்கியவான்களென்கிறோமே! யோபின் பொறுமையைக்குறித்துக் கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்” என்று வாசிக்கிறோம். நீடியபொறுமை என்பது ஆவியின் கனி. நாமும் கூட பொறுமையுடன் காத்திருந்து கர்த்தர் நமக்கு வாக்குப் பண்ணினதை பெறுவோம். ஆமென். 

- Mrs .ஜாஸ்மின் பால்  

 

ஜெபக்குறிப்பு:-

நம்மிடம் வேதாகமம் பெற்றவர்கள் தினமும் அதை ஆவலுடன் வாசிக்க ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş