Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.04.2026
Share:

By Village Missionary Movement

Saturday, 18-Apr-2026

இன்றைய தியானம்(Tamil) 18.04.2026

 

அங்கீகரிக்கப்படாதவர்களின் பட்டியல்  

 

“பேதுருவும் யோவானும் பேசுகிற தைரியத்தை அவர்கள் கண்டு,... ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்றும் அறிந்து கொண்டார்கள்” - அப். 4:13 

 

ஆர்வில் ரைட், வில்பர் ரைட் என்ற இரு சகோதரர்களும் சைக்கிள் பழுது பார்ப்பவர்கள். இருவரும் கல்லூரிக்குச் சென்றதில்லை. ஆனால் அவர்களுக்கு பறக்க வேண்டும் என்ற லட்சியமும் தைரியமும் இருந்தது. டிசம்பர் 17 , 1903 ல் அவர்கள் “Wright flyer” என்ற பறக்கும் இயந்திரத்தை கண்டுபிடித்து நான்கு முறை மாறி மாறி பறக்கச் செய்தனர். அதன் நீண்ட பயண நேரம் ஒரு நிமிடமே! ரைட் சகோதரர்களின் சுற்றத்தார் அவர்களின் சாதனையை பாராட்டவில்லை. அவர்களின் சொந்த ஊர் செய்தித்தாள் அதை நம்பவில்லை. உண்மையாக இருந்தாலும் அவர்கள் பறந்தது குறுகிய தூரமாக தான் இருக்க முடியும் எனக் கூறியது. பலமுறை அவ்வாறு பறந்து சாதனை புரிந்த பின்னரே அவர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். அதுவரை அவர்கள் அங்கீகரிக்கப்படாதவர்களாகவே இருந்தனர். ஆம், அவர்கள்தான் விமானத்தை கண்டுபிடித்த ரைட் சகோதரர்கள். அவர்களின் கண்டுபிடிப்பு வான்வழிப் பயணத்தின் தொடக்கமாகக் கருதப்படுகின்றது.

 

வேதத்திலே பேதுருவுக்கும் யோவானுக்கும் பிரசங்கிக்கும் உரிமம் இல்லை. மதத் தலைவர்களால் இவர்கள் பிரசங்கம் செய்ய அங்கீகரிக்கப்படவும் இல்லை. இருவரும் வேதாகம கல்லூரிக்குச் சென்றதும் இல்லை. அவர்கள் மீன் பிடி தொழிலைச் செய்தவர்கள். ஆனால் பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டு தைரியமாக நற்செய்தி அறிவித்தனர். தேவனாலேயன்றி வேறொருவராலும் இரட்சிப்பு இல்லை; நாம் இரட்சிக்கப்படும்படிக்கு வானத்தின் கீழெங்கும், மனுஷர்களுக்குள்ளே வேறொரு நாமம் கட்டளையிடப்படவும் இல்லை என்று தைரியமாய் பிரசங்கித்தார்கள். மத தலைவர்கள் பேதுருவிடமும் யோவானிடமும் இயேசுவைப் பற்றி மற்றவர்களுக்கு சொல்லுவதை நிறுத்தும்படி கட்டளையிட்டனர். ஆனால் அவர்கள் நாங்கள் கண்டவைகளையும் கேட்டவைகளையும் பேசாமல் இருக்கக் கூடாதே என்றனர். அவர்களின் பிரசங்கத்தை பரலோகம் அங்கீகரித்தது.

 

பிரியமானவர்களே! நீங்களும் அங்கீகரிக்கப்பட்டவர்களின் பட்டியலில் இல்லாமல் இருக்கலாம். சமுதாயம் கூட உங்களை ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் பரிசுத்த ஆவி உங்களிடத்தில் வரும்போது, நீங்கள் பலனடைந்து இயேசு கிறிஸ்துவை பற்றிய செய்தியை உலகம் முழுவதும் சொல்ல முடியும். பேதுரு ,யோவானை போல அங்கீகரிக்கப்படாதோர் பட்டியலில் இருந்தாலும் நீங்கள் தேவனுக்காக செயல்பட முடியும். தேவன் உங்களை அங்கீகரிப்பதோடு உங்கள் மூலம் தம்முடைய ராஜ்யத்தை கட்டுவார். ஆகவே சோர்ந்து போக வேண்டாம். தேவனுடைய அங்கீகரிப்பே மேன்மையானது என்பதை உணர்வோம். அல்லேலூயா!

- A. பியூலா  

 

ஜெபக்குறிப்பு:-

VBS புத்தகம் அச்சடிப்பதற்கான தேவைகள் சந்திக்கப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş