Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 15.04.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 15-Apr-2026

இன்றைய தியானம்(Tamil) 15.04.2026

 

இக்காலத்துப் பாடுகள்  

 

"...இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்ல..." - ரோமர் 8:18

 

ஒரு முறை பேருந்து ஒன்றில் ஊனமுற்ற பெரியவர் ஒருவர் ஏறினார். இருக்கை எதுவும் காலியாக இல்லாததால் அவர் நின்று கொண்டே பயணம் செய்தார். இதை பார்த்த இளைஞன் ஒருவன் மனமிரங்கி எழுந்து, தனது இருக்கையில் அவரை அமர வைத்தான். பெரியவர் அவனுக்கு நன்றி சொல்லிவிட்டு, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்றபடி அமர்ந்தார். அதைக் கேட்ட இளைஞனுக்கு வியப்பாக இருந்தது. உடலில் ஊனத்தோடு வாழும் போது கூட, கர்த்தருக்கு ஸ்தோத்திரம் என்று சொல்கிறாரே என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டான். அவரிடம் தாத்தா, உங்களை இந்த நிலையில் வைத்திருக்கிற கடவுளை, உங்களால் எப்படி ஸ்தோத்திரிக்க முடிகிறது என்று கேட்டான். பெரியவர் பதில் ஒன்றும் பேசாமல், புன்முறுவலுடன் பையில் இருந்த வேத புத்தகத்தை எடுத்து படிக்க ஆரம்பித்தார். சற்று நேரம் கழித்து அந்த இளைஞனிடம் தம்பி, பணம் கொடுத்து பயணச்சீட்டு வாங்கிவிட்டு இப்படி நின்று கொண்டே வருகிறாயே. உன் மனசுக்கு கஷ்டமா இல்லையா என்றார். இளைஞன் புன்னகைத்தபடி தாத்தா, இன்னும் 10 நிமிடத்தில் பஸ் ஸ்டாண்ட் வந்துடும். எங்க வீடு அதுக்கு பக்கத்துலதான் இருக்கிறது. அப்புறம் எதுக்கு நான் வருத்தப்படணும் என்றான். நல்லா சொன்னாய் தம்பி. 10 நிமிஷத்துல வீட்டுக்கு போயிடுவோம் என்று நம்பிக்கையில், நின்றுக்கிட்டு வருவது உனக்கு சிரமமாக தெரியல. நீ எப்படி வீட்டுக்கு போகப் போறோம்ன்னு உறுதியா நம்புறியோ, அதே மாதிரி நானும் இந்த வாழ்க்கை முடிஞ்சதும் பரலோகம் போய் சேருவேன் என்று உறுதியாக நம்புகிறேன். போய் சேரப்போகிற இடம் குதூகலமான இடம் என்று தெரிஞ்ச பிறகு வருத்தம் எப்படி வரும்? ஸ்தோத்திரம் அல்லவா வரும் என்றார்.

           

பவுல் ரோமாபுரியாருக்கு எழுதின நிருபத்தில், இக்காலத்துப் பாடுகள் இனி நம்மிடத்தில் வெளிப்படும் மகிமைக்கு ஒப்பிடத்தக்கவைகள் அல்லவென்று எண்ணுகிறேன் என்று கூறியுள்ளார். இவ்வுலகில் நாம் அனுபவிக்கின்ற கஷ்டங்கள், துயரங்கள், பாடுகள் எதுவும் நிரந்தரமல்ல. அவையனைத்தும் ஒரு நாள் கடந்து போய்விடும். ஆனால் பரமனுக்காகவும், அவருடைய ராஜ்யத்திற்காகவும் அனுபவிக்கிற பாடுகள் மட்டுமே நமக்கு ஆசீர்வாதத்தைக் கொண்டு வரும்.

  

பிரியமானவர்களே! இவ்வுலக வாழ்வில் துன்பம் வருவது இயல்பு தான். அதிலிருந்து கர்த்தர் நம்மை விடுவிப்பார் என்பதும் அதிக நிச்சயம். நமக்கு கிடைக்கப் போகின்ற மகிமையான வாழ்க்கையை பற்றி எண்ணும்போது, எத்தனை பெரிய துன்பமும் தூசி போலத்தான் தோன்றும் என்பது உண்மைதானே! 

- Mrs. சசிகலா பரமசிவன்  

 

ஜெபக்குறிப்பு:-

3 மணி நேர, 1 மணிநேர, பகுதி நேர மிஷனெரிகள் அநேகர் நம்மோடு இணைய ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş