Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20-06-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Saturday, 19-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 20-06-2021 (Kids Special)

 

ஆயத்தமாவோம்

 

“உமது பிரமாணங்களில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.” – சங்கீதம் 119:16

 

“டே! ராபர்ட் இங்கே வாயேன். அம்மாவுக்கு உதவி செய். தெருக்குழாயில் தண்ணீர் வருது இரண்டு குடம் பிடித்து கொண்டு வா” ன்னு சொன்னாங்க. சரிம்மான்னு தண்ணீர் பிடிக்க போனான் ராபர்ட். போகும் வழியில் விரல்களை துப்பாக்கி போல் வைத்துக்கொண்டு டுமீல், டுமீல்ன்னு சொல்லிக்கொண்டே போனான். ராபர்ட்க்கு இராணுவத்துக்கு போகணும்னு ஆசை. தான் ஒரு இராணுவ வீரராக வேண்டுமென்று அம்மாவிடம் அடிக்கடி சொல்லிக்கொள்வான். அம்மா சொல்வாங்க, தினமும் பைபிள் வாசித்து ஜெபிக்கணும் தம்பி. அப்போதுதான் நீ எங்கே போனாலும் இயேசப்பா உன் கூடவே இருப்பாங்கன்னு சொன்னதும், “போம்மா உனக்கு வேற வேலையே இல்லையா” ன்னு கேலியா கேட்பான். இயேசப்பா ராபர்ட்டை எப்படியாவது உம்முடைய வழியில் நடத்துங்கன்னு அம்மா ஜெபித்துக்கொண்டேயிருந்தாங்க. 

 

சில வருடங்கள் கழித்து ராபர்ட் விரும்பினபடியே இராணுவ வீரனாக செலக்ட் ஆனான். சந்தோஷத்தோடு ஆயத்தமானான். அம்மாவும் அவனுக்கு தேவையான அனைத்தையும் வாங்கிக் கொடுத்து விட்டு, ஒரு புதிய ஏற்பாட்டையும் கொடுத்து உன் சட்டைப்பையில் எப்பொழுதும் வைத்துக்கொள். வேதத்தை தினமும் வாசிக்க மறக்காதே என்று சொன்னார்கள். சரியென்று ராபர்ட் வாங்கி வைத்துக்கொண்டான். ஒருநாள் யுத்தத்தில் ராபர்ட்டை சுட்டுவிட்டார்கள். அவ்வளவுதான் எல்லாம் முடிந்தது என்று நினைத்தான். எழுந்து பார்த்தான் எந்த பாதிப்பும் இல்லை. வேதத்தை வாசிக்கவில்லையென்றாலும் சட்டைப்பையில் எப்பொழுதும் சின்ன புதிய ஏற்பாட்டை வைத்துக்கொள்வான். குண்டு அந்த பைபிளில் பட்டு நின்றுவிட்டது. பைபிளை திறந்தான், குண்டு யோவான் 3:16 வரை பட்டு நின்றிருந்தது. “தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும்படிக்கு, அவரை தந்தருளி இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்” என்று வாசித்தான். இயேசு கிறிஸ்துவின் அன்பை உணர்ந்துகொண்டான். அன்றைய நாளில் இருந்து ஆசையாய் வேதத்தை வாசிக்கவும் ஜெபிக்கவும் ஆரம்பித்தான். சிறு வயதில் இருந்தே அம்மா சொன்னதை கேட்கவில்லையே என்பதை உணர்ந்துகொண்டான். ராபர்ட் அவனது மனமாற்றத்தை அம்மாவோடு பகிர்ந்து கொண்டான். அம்மா அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. ராபர்ட் இருக்கிற இடத்திலே சாட்சியாக வாழவும் ஆரம்பித்தான். 

 

என்ன குட்டீஸ்! எப்ப பார்த்தாலும் வேதம் வாசி, ஜெபின்னு சொல்லிக்கிட்டேயிருக்கீங்கன்னு நினைக்கிறீங்களா? வேதம் வாசித்து ஜெபிப்பதின் மூலம்தான் ஆண்டவரோடு நீங்க உறவாட முடியும். இப்படி வாழ்ந்தால்தானே ஆண்டவரோட வருக்கைக்கு ரெடியாக முடியும். இந்த உலகத்தின் வாழ்க்கை ஒருநாள் அழிந்துவிடும். ஆனால் பரலோக வாழ்க்கை ஒருநாளும் அழியாதது, நித்தியமானது. இந்த நித்திய வாழ்வு கிடைக்க வேதம் வாசித்து, ஜெபித்து சாட்சியாக வாழணும். என்ன ரெடியா?

- Mrs. அன்புஜோதி ஸ்டாலின்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al holiganbet giriş holiganbet padişahbet bets10 extrabet royalbet süperbetin padişahbet betcio romabet giriş romabet queenbet bahiscasino betcio bahiscasino atlasbet matbet matbet giriş bahiscasino celtabet queenbet casibom jojobet