By Village Missionary Movement
Sunday, 12-Apr-2026இன்றைய தியானம்(Tamil) 12.04.2026 (Kids Special)
மொட்டை ஆடும், கொம்பு ஆடும்
"பிரம்பும் கடிந்துகொள்ளுதலும் ஞானத்தைக் கொடுக்கும்; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்" - நீதி. 29 : 15
Hello குட்டீஸ், யாரு வீட்டுல எல்லாம் ஆடு இருக்குது? உங்களுக்கு ஆட்டுக்குட்டினா பிடிக்குமா o.k. குட்டீஸ். இப்ப நாம கதைக்குள்ள போலாமா? பாலுவும், ராஜனும் பக்கத்து பக்கத்து வீட்டில் குடியிருந்தார்கள். இருவரும் விவசாயம் செய்து தங்கள் குடும்பத்தை நடத்திக் கொண்டு வந்தார்கள். அவர்கள் இருவரும் ஆளுக்கொரு ஆடு வளர்த்து வந்தார்கள். இதில் பாலுவின் ஆட்டிற்கு இரண்டு கொம்புகளும் இருக்காது. ஆனால் ராஜனுடைய ஆட்டிற்கோ முரட்டு கொம்புகள் இருக்கும். ராஜன் பாலுவின் ஆட்டைப் பார்த்து ஏளனம் செய்வான். பாலுவோ தனது ஆட்டிற்கு கொம்பு இல்லாததால் அதை பத்திரமாய் பாதுகாத்து வந்தான். கழுத்தில் கயிற்றை கட்டி கையில் பிடித்தவாறே எங்குச் சென்றாலும் அதை அழைத்துச் செல்வான். ராஜனின் ஆடு கம்பீரமாய் ஊரை சுற்றித் திரியும். பாலுவின் ஆட்டிற்கு, ராஜனின் ஆட்டைப் போல் சுற்றித் திரிய ஆசை. ஆனால் பாலுவோ அதை தனியாக விடுவதாக இல்லை. எனவே கழுத்தில் கட்டியிருந்த கயிற்றை அங்கும் இங்கும் அசைத்துப் பார்த்து சோர்ந்து போய் விட்டது. பாலு அதை வீட்டிலேயே கட்டிப்போட்டு விடுவான். ராஜனின் ஆடோ, இந்த ஆட்டின் முன் கம்பீரமாக, கெத்தாக நடந்து செல்லும்.
நாட்கள் கடந்தன. ஒரு நாள் பாலுவின் ஆடு இரையை மேய்ந்து கொண்டிருந்தது. அப்போது அந்த வழியே ராஜனின் ஆடு இரண்டு கொம்புகளும், ஒரு காலும் ஒடிந்து இரத்தத்தோடு வந்து கொண்டிருந்தது. அதற்கு பின் வந்த ஜனங்கள், ராஜனுக்கு ஆட்டை கட்டிப்போட்டு வளர்க்க தெரியவில்லை. இஷ்டத்திற்கு விட்டதினால் யாருடைய தோட்டத்தில் மேய்ந்ததோ தெரியவில்லை. இப்படி கொம்புகளையும், காலையும் ஒடித்துவிட்டிருக்கிறார்கள் என்று திட்டியவாரே வந்தார்கள். இதைக் கேட்ட பாலுவின் ஆடு அப்பாடா, எனது எஜமான் என் நல்லதுக்குத்தான் இப்படி கட்டி போட்டிருக்கிறார் என்று உணர்ந்து கொண்டது.
தம்பி தங்கச்சி, பார்த்தீங்களா! தன் இஷ்டம் போல அலைந்த ஆட்டின் நிலைமையை. உங்களுக்கு கூட அம்மா அப்பா கண்டித்து உணர்த்தும்போது கோபம் பயங்கரமா வருதுல. எல்லாரும் எவ்வளவு ஜாலியா சுத்துறாங்க. ஆனா எங்க அம்மா மட்டும் எப்ப பார்த்தாலும் இப்படி வீட்டுக்குள்ளேயே இருக்க சொல்றாங்கன்னு நினைத்து எரிச்சல் வருதா. அது எல்லாமே உன்னோட நன்மைக்காக தான் குட்டீஸ். இனிமே அப்பா அம்மா என்ன சொன்னாலும் அப்படியே கீழ்ப்படியணும். o.k வா
- Mrs. சாராள் சுபாஷ்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864