Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.03.2026 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 22-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 22.03.2026 (Kids Special)

 

காலம் உமது கரங்களில் 

 

“புறம்பேயிருக்கிறவர்களுக்கு முன்பாக ஞானமாய் நடந்து, காலத்தைப் பிரயோஜனப்படுத்திக்கொள்ளுங்கள்” – கொலோ. 4:5

 

Hai குட்டீஸ்! நல்லா இருக்கீங்களா? HomeWork எதுவும் பண்ணலையா? எல்லாரோட கையிலயும் மொபைல் போன் தான் இருக்குது. சரி... சரி... அக்கா உங்களுக்கு ஒரு கதை சொல்லப் போறேன்.

 

ராஜான்னு ஒரு பணக்கார அண்ணே இருந்தாங்க. அவங்க அப்பா பெரிய கோடீஸ்வரர். பிசினஸ்மேனா இருந்தாங்க. அந்த ராஜா அண்ணே கேட்டதெல்லாம் அவங்க அப்பா அவங்களுக்கு வாங்கி கொடுத்தாங்க. எந்த குறையும் இல்லாமல் அண்ணனும் வளர்ந்து பெரிய ஆளானாங்க. அப்பா நம்ம பையனுக்கு பொறுப்பு வரணுமேன்னு நெனச்சு ஒரு ட்ரெய்னிங் வச்சாரு. அது என்ன தெரியுமா? ஒவ்வொரு நாளுக்கும் 24 ஆயிரம் ரூபாய் கொடுத்தார். எவ்வளவு சந்தோஷம் அப்படின்னு தானே நீங்க நினைக்கிறீங்க. அந்தப் பணத்தை வீணா செலவு பண்ணாம, பிரயோஜனமா செலவு பண்ணனும். அந்த ஒரு நாள்ல 24 ஆயிரம் ரூபாயை செலவு பண்ணலைன்னா அக்கவுண்ட்ல அது இருக்காது. அது செல்லாத காசாயிடும். எனவே அந்த ராஜா அண்ணே தூங்காம, சோம்பலா இல்லாம, டைம் வேஸ்ட் பண்ணாம, ஒவ்வொரு நாளும் எப்படி இந்த பணத்தை பிரயோஜனமா செலவு பண்ணலாம். யாருக்கு உதவி செய்யலாம் அப்படின்னு சொல்லி சிந்தித்து செயல்பட்டாங்க. முடிவுல என்ன ஆனாங்க தெரியுமா? ஒரு பெரிய பிசினஸ்மேனா உருவாயிட்டாங்க.

 

ஆமா, குட்டீஸ்! நம்ம கையிலேயும் இயேசப்பா ஒரு நாளைக்கு 24 மணி நேரத்தை கொடுத்து இருக்காங்க. இதை நீங்க எப்படி பயன்படுத்துறீங்க? அப்படின்னு check பண்றாங்க JESUS. அந்த பொன்னான நாள் போனா மீண்டும் நமக்கு திரும்ப கிடைக்காது. அதனால ஒவ்வொரு மணித்துளியையும் நாம பிரயோஜனமா செலவு பண்ணனும் குட்டீஸ். உன்னுடைய நேரத்தை நீ எப்படி பயன்படுத்துற? இயேசப்பா உனக்கு கொடுத்த நேரத்தை அவருக்கு பிரயோஜனமா என்ன செய்யப் போற? நீ செலவு பண்ற நேரத்தை பார்த்து இயேசப்பா சந்தோஷப்படுவாரா? அல்லது துக்கப்படுவாரா? நீயே யோசிச்சு பாரேன். மணிக்கணக்கா டிவி பார்க்கிறது, செல்போன் பார்க்கிறது இப்படி உன்னோட நேரத்தை வேஸ்ட் பண்ணாம, Home Work எழுத, விளையாட, உன்னோட பெற்றோருக்கு உதவி பண்ண இப்படி சுறுசுறுப்பா இருக்கணும். சோம்பேறியா இருக்கக் கூடாது. இப்படி நீ செஞ்சா இயேசப்பா சந்தோஷப்படுவாங்க O.K வா குட்டீஸ்!

- Sis.எஸ்தர்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al