Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 17.03.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 17-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 17.03.2026

 

80 வயதானவரின் பங்களிப்பு  

 

 "...அந்த ஜனங்கள் வனாந்தரத்திலே பசியும் இளைப்பும் தவனமுமாயிருப்பார்கள் என்று இப்படிச் செய்தார்கள்" - 2 சாமு. 17:29  

 

தாவீது ராஜா தன் மகனாகிய அப்சலோமுக்கு பயந்து ஊரைவிட்டே ஓடி மக்னாயீமுக்கு வந்தபோது, தாவீதையும் அவனது கூட்டத்தையும் ஆதரிக்க 80 வயதான பர்சிலா என்ற மனுஷன், மெத்தைகள், கோதுமை, வாற்கோதுமை, பயிறு வகைகள், தேன், வெண்ணெiய், பால் கட்டிகளையும் சாப்பிடுவதற்கு கொண்டு வந்தான். அப்பொழுது தாவீது, இராஜபதவியில் இல்லை, ஒரு சாதாரண மனுஷன். அதாவது முன்னாள் ராஜா. அப்படியிருந்தும் அசட்டை பண்ணாமல் 80 வயது சென்ற பர்சிலா எல்லாவித பொருட்களையும் கொண்டு வந்து தாவீதை ஆதரித்தான்.

           

பங்களிப்புக்கு வயது முக்கியமல்ல. நான் செயல்பட வேண்டும் என்ற எண்ணம் வந்தாலே போதும். முன்னாள் ராஜா தாவீதிற்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்று 80 வயது பர்சிலா நினைத்திருப்பார் என்றால், இன்றைக்கு ராஜாதி ராஜாவும், கர்த்தாதி கர்த்தருமான தேவனுக்காகவும், அவரது ஊழியத்திற்காகவும் உங்களது பங்களிப்பு எவ்வளவு முக்கியம் என்பதை யோசித்துப் பாருங்கள்.

            

ஊழியத்தில் இப்படிப்பட்ட தேவையுள்ள சூழ்நிலைகள் காணப்படலாம். அப்பொழுது உங்களது பங்களிப்பு மிக, மிக அவசியமாயிருக்கிறது. இந்த பர்சிலா எந்த எதிர்பார்ப்போடும் தாவீதுக்கு இந்த உதவிகளைச் செய்யவில்லை. தாவீதின் நிலைமை சரியான போது தனது ஊருக்குத் திரும்பினார். அப்பொழுது இந்த 80 வயது பர்சிலாவை தாவீது அழைத்தார். நீ என்னோடே வரவேண்டும், என்னிடத்தில் வைத்து உன்னை நன்கு பராமரிப்பேன் என்றார். அப்பொழுது பர்சிலா நல்லதா போச்சு, இவருடன் செல்வோம் என்று எண்ணவில்லை. ஏனென்றால் அந்த மனுஷன் எந்த பிரதிபலனையும் எதிர்பார்த்து அவனது பங்களிப்பை செய்யவில்லை. 

  

எனக்கன்பானவர்களே! நாம் கர்த்தருக்காக நமது பங்களிப்பை செய்வோமானால், ஏற்ற காலத்தில் நமது பங்களிப்பிற்கான பிரதிபலனை பெறுவோம் என்பது நிச்சயம். ஆகவே தேவனுக்காக செயல்பட வயது தடையாக இருக்கக் கூடாது, வாய்ப்பிற்காக காத்திருக்கவும் கூடாது. சுயநலம் பாராமல் தேவனுக்காக எப்பொழுதும் செயல்பட ஆயத்தமாயிருக்கும்போது தேவனிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக் கொள்வோம். இதை எபிரேயர் 6:10ல் "தேவன் மறந்துவிடுகிறதற்கு அநீதியுள்ளவரல்லவே" என்று அருமையாக கூறப்பட்டுள்ளது. ஆகவே உற்சாகமாய் தேவனுக்காய் செயல்படுவோம்.  

- Mrs. எப்சிபா இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:-

ஒவ்வொரு தாலுகாவிலும் சுவிசேஷகர்கள் நம்மோடு இணைய ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al