By Village Missionary Movement
Sunday, 15-Mar-2026இன்றைய தியானம்(Tamil) 15.03.2026 (Kids Special)
நம்மை மறவாத தேவன்
"அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை;..." - எபிரெயர் 4:13
சின்ன குட்டி செல்லங்களா... எப்படி இருக்கீங்க? நல்லா இருக்கீங்களா? இந்த வருஷம் ரொம்ப குளிர் இருந்துச்சு இல்லையா? இப்போ மெதுவா வெயில் காலம் ஆரம்பிக்கப் போகுது. இந்த வருஷம் வெயில் கொஞ்சம் அதிகமா இருக்கும்ன்னு சொல்றாங்க. வெயில் காலம் வந்தா, நிறைய தண்ணீர் குடிக்கணும். அப்பதான் உடம்பு ஆரோக்கியமா இருக்கும், நாமும் சந்தோஷமா இருக்க முடியும். சின்ன பிள்ளையா இருக்கும்போது அப்பா, அம்மா நம்மை பார்த்துக்குவாங்க. ஆனா நீங்க வளர்ந்த பிறகு, நீங்களே தான் உங்கள பார்த்துக்கணும். வாட்டர் பாட்டில்ல தண்ணீர் கொண்டு போய் குடிக்காம திரும்ப கொண்டு வரக்கூடாது. நல்லா தண்ணீர் குடிக்கணும் சரியா செல்லங்களா?
இப்போ ஒரு சின்ன கதை சொல்றேன். chair பாத்திருக்கீங்களா? இப்போ பிளாஸ்டிக் chair பயன்படுத்துகிறோம். ஆனால் அந்த காலத்துல மர நாற்காலி பயன்படுத்தினாங்க. நாற்காலி என்றாலே நான்கு கால்கள், உட்கார seat, சாய்ந்து கொள்ள back இதெல்லாம் சேர்ந்துதான் ஒரு chair. இதையெல்லாம் ஒண்ணா பிடிச்சு வச்சிருக்குறது ஒரு சின்ன நட்டு அது வெளியே தெரியாது. ஆனா அதுதான் எல்லாத்தையும் தாங்கி பிடிச்சிருக்கும். ஒரு நாள் அந்த nut நினைச்சுச்சாம்: "எல்லாருக்கும் கால் தான் தெரியுது, seat தான் தெரியுது. நான் மறைவாய் இருக்கேன், யாரும் என்ன கவனிக்கவே இல்லை. நானே இல்லாம போயிடறேன்" ன்னு அது கழண்டு கீழே விழுந்துச்சாம். யாருக்கும் அது தெரியல. அப்போ ஒரு guest வீட்டுக்கு வந்ததும் chair போட்டாங்க. Guest உட்கார்ந்ததும் என்ன ஆச்சு? Chair கால் சாஞ்சு... கீழே விழுந்துடுச்சு. Guestக்கும் அவமானம், வீட்டுக்காரங்களுக்கும் வருத்தம். அப்புறம் பார்த்தா தான் தெரிஞ்சுது, "ஓ! அந்த nut விழுந்திருக்கு" அப்போதான் எல்லாருக்கும் புரிந்தது இந்த சின்ன nut இல்லாம இந்த பெரிய chair எதுக்கும் பயன்படாது என்று.
இதுதான் நம்ம வாழ்க்கையிலும் நடக்குது. இயேசப்பா கிட்ட நிறைய பேர் வந்தாங்க. யோவான்- "இவர் தேவனுடைய குமாரன்" ன்னு சொன்னார். அந்திரேயா- "ஆண்டவரை கண்டோம்"ன்னு சொன்னார். நத்தானியேல் கடைசியா வந்தார். அவரை இயேசு "கபடற்ற உத்தம இஸ்ரவேலன்" ன்னு சொன்னாரு. பார்த்தீங்களா குட்டீஸ், எவ்வளவு பெரிய ஆசீர்வாதம்! மற்ற எல்லாரும் வெளியில் தெரிஞ்சவங்க. ஆனா கடைசியா வந்த ஒருவரையும் கூட ஆண்டவர் மறக்கல. சில பேர் உங்களைப் பார்த்து சொல்லலாம்: 'நீ வேஸ்ட், நீ ஒன்றுக்கும் உதவ மாட்ட'. அதையெல்லாம் நினைத்து நீ கவலைப்படாதே. நீ வெளியே தெரியலன்னாலும் நீ ரொம்ப முக்கியமானவன்/ முக்கியமானவள். chair ல இருக்கும் nut மாதிரி நீ மறைவா இருக்கலாம். ஆனால் ஆண்டவரின் பார்வையில் நீ மறைவாய் இல்லை. உன்னையும் ஆசீர்வதிப்பார், அவருக்கென்று பயன்படுத்துவார். சரியா bye குட்டீஸ்.
- Sis. தெபோராள்
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864