Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.03.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 12-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 12.03.2026

 

பிரயாசம் வீணாகாது  

 

“....இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன் கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்” - மத். 9:2

       

 ஒரு லட்சம் வாலிபர்களுக்கு மேல் பங்குபெறும் நம்முடைய வாலிபர் முகாமிற்கு, ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சகோதரி நானும் என்னால் இயன்றதை தேவனுக்காக செய்கிறேன் என்று தன் மனதில் நிர்ணயம் பண்ணி, வேன் பிடித்து தனக்குத் தெரிந்த வாலிபர்களை அழைத்து வந்தார்கள். தன்னுடைய நேரம், உடல் உழைப்பு மற்றும் பணத்தை செலவு செய்தார்கள். என்ன ஆச்சரியம்! தேவன் இவர்கள் கிரியைகளைப் பார்த்து 16 வருடமாக குழந்தை இல்லாத இந்த சகோதரி கர்ப்பம் தரிக்க தேவன் கிருபை செய்தார். தேவனுக்கே மகிமை உண்டாவதாக.

           

ஆம், வேதத்தில் மூன்று சுவிசேஷ புத்தகத்தில் படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரன் சுகம் பெற்ற அற்புதம் இடம் பெற்றுள்ளது. அந்த திமிர்வாதக் காரன் சுகம் பெற நான்கு பேர் ஒருமனப்பட்டார்கள். வியாதிக்காரன் மேல் இரக்கம் கொண்டு கரிசனையுள்ளவர்களாய் தங்கள் உழைப்பால் பிரயாசப்பட்டார்கள். இயேசுவை காண முடியாமல் அந்த வீட்டின் முன் கூட்டம் நின்றாலும், சோர்ந்து போகாமல் நான்கு பேரும் மிகுந்த பொறுமையோடு தொடர்ந்து முயற்சி செய்தார்கள். வீட்டின் கூரையைப் பிரித்து, எப்படியாகிலும் அவனை இயேசுவின் முன் கொண்டுச் செல்ல வேண்டும் என முயற்சித்தனர். அதற்காக வீட்டு கூரையைப் பிரிக்க வீட்டு ஓனரிடம் விலைக்கிரயம் செலுத்த முன் வந்திருப்பர். பிரயாசப்பட்டு இயேசுவின் முன் கொண்டு சென்று திமிர்வாதக்காரனுக்கு சுகத்தையும் வாங்கித் தந்தார்கள். அந்த நான்கு பேரின் விசுவாசத்தையும் இயேசு கிறிஸ்து பாராட்டினார். ஜனங்கள் அதைக் கண்டு ஆச்சரியப்பட்டு, தேவனை மகிமைப்படுத்தினார்கள்.

                

பிரியமானவர்களே, யாரோ Youth Camp நடத்துகிறார்கள், நமக்கென்ன என்று அந்த சகோதரி நினைத்திருப்பார்களானால், அந்த வாலிபர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருப்பார்களா? அவர்கள் வாழ்விலும் அற்புதம்! ஒரு வேளை உங்கள் பிரயாசம் மனிதனுக்குத் தெரியாமல் இருக்கலாம், பிறர் பாராட்டாமலும் இருக்கலாம். நம்மிடமிருந்து நன்மையை பெற்றவர்களே நமக்குத் தீங்கு செய்ததினிமித்தம் மனதில் சோர்வு கூட ஏற்பட்டிருக்கலாம். ஆனால் உங்கள் அன்பின் பிரயாசத்தை மறக்க தேவன் அநீதி உள்ளவரல்லவே. உங்கள் இருதயத்தின் நினைவுகளை அறிந்தவர் நிச்சயமாக இம்மையிலும், மறுமையிலும் உங்களுக்கு அதற்கேற்ற பலனை அளிப்பார். முழு இருதயத்தோடு கர்த்தருக்காக பிரயாசப்படுங்கள். உங்களுடைய நேரம், திறமை, பொருள் ஆண்டவருக்காக பயன்படட்டும்.

- Sis. G. எஸ்தர் செல்வி

 

ஜெபக்குறிப்பு :-

7 ஆயிரம் மிஷனெரிகள், 1 லட்சம் கிராமங்கள் என்ற இலக்கு சந்திக்கப்பட ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al