Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 06.03.2026
Share:

By Village Missionary Movement

Friday, 06-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 06.03.2026

 

சூனேமியாளின் பங்களிப்பு                        

 

"நாம் மெத்தையின் மேல் ஒரு சிறிய அறைவீட்டைக் கட்டி,... அவர் (எலிசா) நம்மிடத்தில் வரும்போது அங்கே தங்கலாம் என்றாள்" - 2 இராஜா. 4:10

           

எலிசா ஊழியம் செய்து வந்த நாட்களில் சூனேமுக்கு அடிக்கடி ஊழியத்திற்கு போய் வந்தார். அப்படி எலிசா சூனேமுக்கு செல்லும்போதெல்லாம் ஒரு ஸ்திரீ எலிசாவை வருந்தி அழைத்து அவரை போஷித்து பராமரித்தாள். இப்படியாக அநேக நாட்கள் செய்து வந்தாள். ஒருநாள் தன் கணவனிடம் ஊழியக்காரரையும், அவருடைய ஊழியத்தையும் குறித்து பேசி, நமது வீட்டின் மேல் அந்த ஊழியக்காரருடைய ஊழியம் தடையின்றி தொடர்ந்து நடக்க ஒரு அறையை கட்டி, அங்கே கட்டில், மேஜை, நாற்காலி, குத்து விளக்கு வைப்போம். ஊழியர் வரும்போதெல்லாம் தங்கி செல்லலாம் என்றாள். அவளது கணவரும் தேவனுக்கடுத்த காரியத்தில் தன் மனைவிக்கு இருக்கும் விருப்பத்தை ஏற்றுக் கொண்டார். ஆதலால் அந்தப் பகுதியில் தேவனின் ஊழியத்திட்டம் நிறைவேறினது.

         

இந்த சூனேமியாள் தனது பங்களிப்பை எலிசாவின் ஊழிய பாதையில் முழு மனதோடு செய்த படியினால், எலிசா நாம் அவளுக்கு ஏதாகிலும் உதவ வேண்டும் என்று எண்ணி, தனது வேலைக்காரனிடம் அவளுக்கு என்ன வேண்டும் என்று கேள் என்றார். அவளோ குழந்தை பாக்கியமற்றவளாக காணப்பட்டாள். எலிசாவின் பங்களிப்பு தேவனிடம் மன்றாடி ஜெபித்து ஒரு குழந்தை கிடைக்க ஜெபித்தார். தேவன் அவளுக்கு ஒரு குழந்தையைக் கொடுத்தார்.

         

எனக்கன்பான தேவப்பிள்ளைகளே, ஊழியக்காரரே, ஊழியக்கார சகோதரிகளே, இந்த தேவ செய்தியை வாசித்த பின்பு உங்களது பங்களிப்பு என்னவென்று தீர்மானியுங்கள். இந்த சூனேமியாளைப் போன்று வீட்டின் ஒரு பகுதியை ஊழியர்கள் தங்கி ஊழியத்தை நிறைவேற்ற உதவலாம். இல்லையென்றால் உங்களிடம் இருக்கும் இடத்தையோ, பணத்தையோ, தேவப் பணிக்கென்று கொடுக்கலாம். மேலே கண்ட மூன்றில் ஒன்றை உங்களது பங்களிப்பாக தேவ ராஜ்யம் கட்டப்பட கொடுக்கலாம். உங்களது பங்களிப்பை நீங்கள் நிறைவேற்றும் போது, உங்களுக்கு தேவனிடமிருந்து உங்களுக்குரிய பங்களிப்பின் பிரதிபலனை கண்டிப்பாக தேவன் கொடுப்பார். "...கிரியையையும்,..தமது நாமத்திற்காகக் காண்பித்த அன்புள்ள பிரயாசத்தையும் மறந்துவிடுகிறதற்குத் தேவன் அநீதியுள்ளவரல்லவே." (எபிரெயர் 6:10)

           

அன்புள்ள மக்களே, உங்களது பங்களிப்பை நிறைவேற்றுங்கள். தேவன் தாமே உங்களையும், உங்கள் குடும்பத்தையும் ஆசீர்வதிப்பாராக. ஆமென்! அல்லேலுயா!

- Rev. S. A. இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:-

நம்மோடு இணைந்துள்ள தோழமை ஊழியர்களோடு கர்த்தரின் கரமிருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al