Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 05.03.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 05-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 05.03.2026

 

என்னை அனுப்பும்       

 

"பின்பு: யாரை நான் அனுப்புவேன், யார் நமது காரியமாய்ப் போவான் என்று உரைக்கிற ஆண்டவருடைய சத்தத்தைக் கேட்டேன். அதற்கு நான்: இதோ, அடியேன் இருக்கிறேன்; என்னை அனுப்பும் என்றேன்." - ஏசாயா 6:8

          

1890 ன் பின்பகுதியில் ஸ்வீடிஷ் மிஷனெரி எரிக் லண்ட் ஊழியத்திற்காக ஸ்பெயின் நாட்டிற்குச் செல்ல தேவனால் அழைக்கப்பட்டதை உணர்ந்த போது, உடனடியாக கீழ்ப்படிந்தார். அங்கே அவர் குறைந்த அளவிலே வெற்றி கண்ட போதும் தேவனுடைய அழைப்பில் திட நம்பிக்கையோடு தன்னுடைய மிஷனெரி வேலையை தொடர்ந்தார். ஒரு நாள் அவர் பிரௌலியா மணிக்கண் என்ற பிலிப்பைன்ஸ் நாட்டு மனிதனைக் கண்டு அவரோடு சுவிசேஷத்தை பகிர்ந்து கொண்டார்.  

        

பின்னாட்களில் எரிக் லண்ட் மற்றும் மணிக்கண் இருவரும் சேர்ந்து பிலிப்பைன்ஸ் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்தனர். பணித்தளத்தில் எரிக் பெரியளவில் சாதனைகளை செய்தார் என்று சொல்வதற்கில்லை. ஆனால் ஆண்டவரின் கட்டளைக்கு கீழ்ப்படிந்த எரிக் பிலிப்பைன்ஸ் மக்களுக்கு அவர்களது தாய் மொழியில் வேதாகமத்தை மொழிபெயர்த்து, தன்னால் இயன்ற பங்களிப்பை கொடுத்தார். "நான் அசுத்த உதடுகளுள்ள மனுஷன்" என்று சொன்ன ஏசாயா ஆண்டவரது எதிர்பார்ப்பை அறிந்தவராக தன்னை முழுவதுமாக ஊழியத்திற்கு அர்ப்பணித்தார். இன்றளவும் பிரதான தீர்க்கதரிசிகளில் ஒருவராக ஏசாயாவை நாம் குறிப்பிடுகிறோம்.

          

இன்று நாம் வாசித்த வேதப் பகுதியில், "யாரை நான் அனுப்புவேன்? யார் நமது காரியமாய் போவான்" என்று அங்கலாய்க்கிற நமது தேவனுடைய சத்தத்தை நாம் வாசிக்கின்றோம். தனக்கான பங்களிப்பை கொடுக்கும்படி ஒவ்வொருவரிடமும் நம் ஆண்டவர் எதிர்பார்க்கிறார். ஆனால் யாரிடமும் பலவந்தமாக என்னுடைய வேலையை செய் என்று ஆண்டவர் வற்புறுத்துவதில்லை. ஆனால் ஏசாயாவைப் போல இதோ அடியேன் இருக்கிறேன் என்னை அனுப்பும் என்று நம்மை அர்ப்பணிக்கும்போது மிகப்பெரிய காரியங்களைச் செய்வார்.

          

நான் இயேசுவை முழு மனதாக நேசிக்கிறேன் என்றால் எனது பங்களிப்பாக முழு நேரமாகவோ, அல்லது பகுதி நேரமாகவோ ஊழியம் செய்து நமது பங்களிப்பை கொடுக்கலாம். அல்லது தங்களால் இயன்ற காணிக்கைகளை கொடுத்து ஊழியங்களை தாங்கி ஆதரிக்கலாம். ஆண்டவர் உங்களை வழிநடத்துவாராக.

- P. ஜேக்கப் சங்கர்

 

ஜெபக்குறிப்பு:-

தெபொராள்கள் இல்லாத தாலுகாவில் தெபொராள்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al