Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 02.03.2026
Share:

By Village Missionary Movement

Monday, 02-Mar-2026

இன்றைய தியானம்(Tamil) 02.03.2026

 

ஊழியர்களின் பங்களிப்பு       

 

"புத்திமானுடைய உதடுகளில் விளங்குவது ஞானம்;..." - நீதி.10:13

         

அநேக போர்க்களம் கண்டு ஜெயம் பெற்ற பெரிய படைத் தலைவனின் உடலில் குஷ்டம். அவருடைய சரீரத்திலுள்ள குஷ்டம் மாறி ஒரு மன மாற்றம் ஏற்பட, அவரிடம் பணிபுரிந்த வேலைக்காரர்களின் பங்களிப்பும் முக்கிய காரணம். அது வேறு யாருமல்ல அவர்தான் நாகமான். நாகமானின் சரீர பலவீனம் மாறி மன மாற்றம் வருவதற்கு காரணம் அடிமையாய் சென்ற ஒரு சிறு பெண் சொன்ன வார்த்தை. அந்த சிறு பெண் தன் கஷ்டம், வேதனையின் மத்தியிலும் நன்மை செய்ய நினைத்தாள்.

         

 அது மட்டுமல்ல ஆசீர்வாதத்தின் அருகில் வந்த போது, நாகமான் கோபத்தால் அதை இழக்கும் சூழ்நிலை வந்தது. அப்போது அவரோடு கூட வந்த வேலைக்காரர், பெரிய காரியத்தை சொல்லியிருந்தால் நீங்கள் செய்திருப்பீர்கள் அல்லவா. இது எளிய காரியம், செய்ய வேண்டியது தானே எனக் கூறியதும் நாகமானின் மனம் மாறுகிறது. சிறு பெண் தீர்க்கதரிசியை அறிமுகப்படுத்துகிறாள். மற்றொரு வேலைக்காரன் தேவனை, ஆசீர்வாதத்தை இழக்காமல் காக்க வகை செய்கிறார். இருவரும் ஞானமாய் பேசுகிறார்கள். படைத் தலைவனான நாகமான் தன் சரீரத்தில் சுகம் பெறுகிறார், ஆத்தும மீட்பையும் பெறுகிறார். ஆம், இஸ்ரவேலிலிருக்கிற தேவனைத் தவிர பூமியெங்கும் வேறே தேவன் இல்லை என்பதை அறிந்தேன் என்கிறார். இரண்டு வேலைக்காரரின் பங்களிப்பால் சீரிய தேசம் இஸ்ரவேலின் தேவனை அறிந்தது. அவர்களின் பெயர் கூட வேதாகமத்தில் எழுதப்படவில்லை. ஆனாலும் அவர்கள் தங்கள் பங்களிப்பைக் கொடுத்தனர். உங்களை தேவன் எவ்வளவாய் ஆசீர்வதித்திருக்கிறார். அதற்கு நன்றி கூறும் வகையில் உங்கள் பங்களிப்பை கர்த்தருக்கென்று கொடுக்கலாம். அவ்வாறு நீங்கள் கொடுக்கும் பங்களிப்பு சிறியதாயிருந்தாலும், தேவனே பெரிய பலனைக் காணச் செய்வார்.

 

 பிரியமானவர்களே, சிறு பிள்ளை என்றும் பாராமல் அடிமையாய் அழைத்து வந்து பணிவிடை செய்ய வைக்கும் ஒரு எஜமான் மீது அன்பு வைத்து, அவர் நன்றாயிருக்க தன் பங்களிப்பை கொடுத்தாள் அந்த சிறு பெண். அப்படியானால் நாம் நம்மை பராமரித்து, பாதுகாத்து, பரிந்து பேசி, தம்மோடு வைத்துக்கொள்ள நித்தியமான ஓர் இடத்தை ஆயத்தம் பண்ண, பாவிகளான நமக்காகத் தம்மையே தந்த இயேசு கிறிஸ்துவுக்காக நாம் நம் பங்களிப்பை கொடுக்க வேண்டும். நான் என் பங்களிப்பை எப்படி கொடுக்க வேண்டும் என யோசிக்கிறீர்களா? அதை நீங்கள் தெரிந்து கொள்ள இந்த மாதம் பங்களிப்பின் சிறப்பு இதழாக வெளியிட்டுள்ளோம். இம்மாத இறுதியில் தேவனுக்காக என் பங்களிப்பை எப்படி செலுத்தலாம் என முடிவெடுக்க இது உதவியாயிருக்கும். தொடர்ந்து வாசியுங்கள், உங்கள் பங்களிப்பை கொடுங்கள், பலனாய் விலையேறப்பெற்ற ஆத்துமாக்களைச் சம்பாதியுங்கள். தேவன் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.

- Bro. டேவிட் கணேசன்

 

ஜெபக்குறிப்பு :-

இம்மாத ஊழியங்களில் கர்த்தரின் கரம் உடனிருக்க ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al