Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 28.02.2026
Share:

By Village Missionary Movement

Saturday, 28-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 28.02.2026

 

சோர்ந்து போகாதே!            

 

 "சோர்ந்துபோகாமல் எப்பொழுதும் ஜெபம்பண்ணவேண்டும்..." - லூக்கா 18:1

 

ஜெப வீரன் ஜார்ஜ் முல்லரை பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கக்கூடும். இவர் தனது மரணப்படுக்கையில் இருந்த போதும் கூட, ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். குறிப்பாக அவருடைய இரண்டு நண்பர்கள் மனந்திரும்பி, இயேசு கிறிஸ்துவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள வேண்டும் என பல வருடங்களாக ஜெபித்து வந்தார். தேவன் ஜார்ஜ் முல்லரின் இடைவிடாத ஜெபத்தைக் கேட்டார். அவர் மரிப்பதற்கு முன் ஒருவர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டார். முல்லர் மரித்து சில மாதங்கள் கழித்து, மற்றொரு நண்பரும் ஆண்டவரை தனது சொந்த இரட்சகராக ஏற்றுக் கொண்டார். இவர்கள் மனந்திரும்ப வேண்டும் என்று ஜார்ஜ் முல்லர் 53 வருடங்களாக ஜெபித்துக் கொண்டே இருந்தாராம். பாருங்கள், சோர்ந்து போகாமல் ஜெபித்த ஜெபத்திற்கு பதில் வந்தது.  

  

இன்றைய வேதப்பகுதியில் சொல்லப்பட்ட சம்பவத்தை பார்ப்போம். ஒரு விதவை, நியாயாதிபதியினிடத்தில் சென்று, எனக்கும் என் எதிராளிக்கும் இருக்கிற காரியத்தில் எனக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று விண்ணப்பம் பண்ணினாள். வெகுநாட்களாய் நியாயாதிபதி விதவையின் காரியத்தை அலட்சியம் செய்தார். பின்பு, இந்த விதவை என்னை எப்பொழுதும் தொந்தரவு செய்கிறபடியினால், இவள் அடிக்கடி வந்து என்னை அலட்டாதபடி இவளுக்கு நியாயஞ்செய்யவேண்டும் என்று தனக்குள்ளே சொல்லிக்கொண்டார். அந்தப்படியே தேவன் தம்மை நோக்கி இரவும் பகலும் கூப்பிடுகிறவர்களாகிய தெரிந்துகொள்ளப்பட்டவர்களின் விஷயத்தில் நீடிய பொறுமையுள்ளவராயிருந்து அவர்களுக்கு நியாயஞ்செய்யாமலிருப்பாரோ? என்று இயேசு கிறிஸ்து கூறியுள்ளார்.

 

பிரியமானவர்களே! சோர்வு என்பது மனிதனாக பிறந்த நம் எல்லோருக்கும் வரக்கூடிய ஒன்று தான். அதிலும் குறிப்பாக ஜெபத்தில் சோர்வு வருவது இயல்பே. சோர்வு வராத உயிரினமே இல்லை என்று கூட சொல்லலாம். ஏன் அவ்வளவு பெரிய தீர்க்கதரிசியான எலியாவை கூட இந்த சோர்வு விட்டு வைக்கவில்லை. நமக்கு சோர்வு வரும்போதெல்லாம் ஆவியானவரை சார்ந்து கொள்வோம். நம்மில் அநேகர் நம்முடைய ஜெபத்திற்கு பதில் வரவில்லை என்றால் சோர்ந்து போய், ஜெபத்தை விட்டு விடுகிறோம். அது மாத்திரமல்ல சில நேரங்களில் ஜெபிக்கக்கூட மறந்து விடுகிறோம். ஜெபத்திற்கு காலதாமதம் ஆனாலும் இயேசுவானவர் நிச்சயம் நமக்கு பதில் கொடுப்பார். எனவே சோர்வு வரும்போதெல்லாம் ஆவியானவரை சார்ந்து, புதுப்பெலனை பெற்று தொடர்ந்து ஜெபத்தில் போராடி வெற்றி காண்போம்.

- Sis. மெர்சி

 

ஜெபக்குறிப்பு:-

சிறுவர் முகாம்கள் மூலம் நாம் சந்தித்த சிறுபிள்ளைகள் இயேசுவுக்காக எழும்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al