By Village Missionary Movement
Sunday, 22-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 22.02.2026 (Kids Special)
பிறந்தநாள் பரிசு
"முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்,..." - மத்தேயு 6:33
Hello குட்டீஸ்! எல்லாரும் எப்படி இருக்கிறீங்க, Happy யா இருக்கிறீங்களா? ஆமா குட்டீஸ், உங்க birthday எல்லாம் ஜாலியா celebrate பண்ணுவீங்கதானே. இன்னைக்கு யாரோட birthday celebrate பண்ணப் போறாங்க பார்க்கலாமா? ஒரு கூட்டம் மக்கள் சல சல வென்ற சத்தத்துடனும் மகிழ்ச்சியுடனும் போய்க் கொண்டிருந்தாங்க. அவங்க எல்லாரும் எங்க போறாங்கன்னு தானே நினைக்கிறீங்க. அவங்க இராஜாவோட அரண்மனைக்குத்தான் போயிட்டு இருந்தாங்க. ஏன்னா அவங்க எல்லாரும் இராஜ அரண்மனையில் வேலைப் பார்க்கும் வேலையாட்கள். இராஜாவுக்கு பிறந்தநாள் வரவிருந்தது. எனவே அங்கு வேலை செய்கிறவர்களுக்கு ஏதாவது வித்தியாசமா செய்ய நினைத்த இராஜா, அரசவையில் வேலை செய்யும் அனைவரையும் வரச் சொன்னார். அவர்களிடம் நாளைக்கு எனது பிறந்தநாள் முடிந்ததும், இந்த அரண்மனையில் உங்களுக்குப் பிடித்த எதை வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம் என்று கட்டளையிட்டார். வேலையாட்களும் கலைந்து சென்று வேலைகளை செய்து கொண்டே என்ன எடுக்கலாம் என்று பார்த்துக் கொண்டே இருந்தனர். இரவு சென்றுவிட்டது, அவர்களால் தூங்க முடியவில்லை. காலையில் சீக்கிரமே கிளம்பி வந்த சத்தம் தான் அந்த கலகலப்பு சத்தம்.
இப்பொழுது அரண்மனை ஜொலித்துக் கொண்டிருந்தது. குறித்த நேரத்தில் இராஜாவுக்கு birthday celebration நடைபெற்றது. நடந்து முடிந்ததும், இராஜா அவர்களைப் பார்த்து இப்பொழுது உங்களுக்கு பிடித்த பொருட்களை எடுத்துக் கொள்ளுங்கள் என்றார். அவர்களும் எடுத்துக் கொண்டு வெளியேறினர். இராஜாவிற்கு அருகில் நின்று விசிறி வைத்து காற்று வீசுபவன் மட்டும் எதையும் எடுக்க போகாமல் வீசிக்கொண்டே இருந்தான். இராஜா அவனைப் பார்த்து உனக்கும் சேர்த்து தான் எனது பிறந்தநாள் பரிசு. காற்று வீசுவதை நிறுத்திவிட்டு, நீயும் போய் உனக்கு பிடித்ததை எடுத்துக்கொள் என்றார். உடனே அவன் வீசுவதை நிறுத்திவிட்டு இராஜாவை இறுகப் பிடித்துக் கொண்டான். இராஜா அவனைப் பார்த்து ஏய் என்ன செய்கிறாய், என்னை விடு என்றார். அவன் அமைதியாக இராஜாவைப் பார்த்து, இராஜா நீங்கள்தான் இந்த அரண்மனைக்குள் உள்ளதை எடுத்துக் கொள்ளலாம் என்றீர்கள். நீங்களும் இந்த அரண்மனைக்குள் தான் இருக்கிறீர்கள். ஆகவேதான் உங்களைப் பிடித்துக் கொண்டேன் என்றான். உடனே இராஜா நீ எதையும் எதிர்பாராமல் என்னை உனக்கு சொந்தமாக்கி கொண்டதால் இந்த அரண்மனை உனக்குத் தான் சொந்தம் என்றார்.
அன்பான தம்பி தங்கச்சி, நீங்களும் இந்த காற்று வீசுபவனைப் போல first இயேசப்பாவை உங்களுக்கு சொந்தமாக்கிக் கொள்ளுங்க. பின்பு எல்லா ஆசீர்வாதமும் உங்களுக்கு வந்து சேரும். O.K வா.
- Mrs. சாராள் சுபாஷ்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864