Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 20.02.2026
Share:

By Village Missionary Movement

Friday, 20-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 20.02.2026

 

விழித்திருங்கள்

 

“..தூங்குகிற நீ விழித்து, மரித்தோரை விட்டு எழுந்திரு, அப்பொழுது கிறிஸ்து உன்னைப் பிரகாசிப்பிப்பாரென்று சொல்லியிருக்கிறார்” - எபே.5:14

 

ஒரு குடியானவன் தன் மகனை ஒரு அழகிய கிராமத்தின் வழியே மாட்டு வண்டியில் அழைத்துச் சென்றார். செல்லும் இடமெல்லாம் பச்சைப்பசேலென வயல்கள், தோட்டங்கள், குளங்கள் என பார்ப்பதற்கு இயற்கை காட்சிகள் மிக ரம்மியமாக இருந்தது. அந்த மகனும் தகப்பனிடம் ஒவ்வொன்றாக சுட்டிக் காட்டி கேட்கவே, அவரும் பொறுமையுடன் அவனுக்கு சொல்லிக் கொடுத்தார். அப்படி செல்லும் போது களைப்பினிமித்தம் தூக்கம் வரவே வண்டியை நிறுத்தி மகனை கீழே இறக்கி விளையாட விட்டு விட்டு, அங்கிருந்த மர நிழலில் கண் அயர்ந்தார். அவர் தூங்கி விழித்துப் பார்த்த போது மகனைக் காணோம். பதறிப்போன தந்தை “இயேசுவே, எனக்கு உதவிச்செய்யும்” என்று ஜெபித்தவாரே மகனை தேடினபோது, அவன் அங்குள்ள குளத்தில் தவறி விழுந்து கிடப்பதை கண்டு, அவனைக் காப்பாற்ற தேவன் உதவி செய்தார்.

 

இதே போல் தான் வேதத்திலும் கூட, புத்தியுள்ள ஸ்திரீ, புத்தயில்லாத ஸ்திரீ என 10 ஸ்திரீகளும் தூங்குகின்றனர். அந்நாட்களில் யூதர்களின் கலாச்சாரத்தில், திருமணத்தின் போது மணப்பெண் வீட்டில் 7 நாட்கள் விருந்து நடைபெறும். அது இரவு நேரங்களில் இருக்கும். இரவு நேரம் ஆகையால் அவர்களுடைய கரங்களில் தீப்பந்தங்கள் இருக்கும். மணவாளன் வருகையின் சத்தம் கேட்கும் போது ஆயத்தமாக இருக்க வேண்டும். இதே போல் ஆத்தும மணவாளனாகிய இயேசு கிறிஸ்து வரும் போது, அவரை எதிர் கொண்டு போக நாமும் விழிப்புள்ளவர்களாயிருக்க வேண்டும். புத்தியுள்ள ஸ்திரீகள் மணவாளன் வந்த போது, தீவட்டிகளில் எண்ணெய் ஊற்றி, ஆயத்தமாகி, மணவாளனோடு சென்றனர். புத்தியில்லாதவர்கள் எண்ணெயில்லாமல் இருந்ததால் மணவாளனை சந்திக்க முடியவில்லை.

 

இதை வாசிக்கும் அன்பரே, இதனையே பவுல் தெளிந்த புத்தியுள்ளவர்களாயிருங்கள், விழித்திருங்கள்; ஏனெனில், உங்கள் எதிராளியாகிய பிசாசானவன் கெர்ச்சிக்கிற சிங்கம்போல் எவனை விழுங்கலாமோ என்று வகைதேடிச் சுற்றித்திரிகிறான் (1 பேதுரு 5:8) என்கிறார். பிசாசுக்கு எதிர்த்து நிற்க நாம் விழித்திருந்து ஜெபிக்கிறவர்களாயிருக்க வேண்டும். நாம் விழித்திருந்து ஜெபிக்கும் போது நாம் ஆவியானவரின் வல்லமையால் நிரப்பப்பட்டு இருப்போம். நம் ஆவிக்குரிய வாழ்வு அணையாமல் எரிகிற தீவட்டியாயிருக்கும். இல்லையெனில் ஆவியானவரின் அபிஷேகமாகிய எண்ணெயே இல்லாமல் போய்விடும். நாம் மணவாளனை சந்திக்க முடியாத பரிதபிக்க கூடிய நிர்பந்த நிலை ஏற்படும். ஆகவே எப்போதும் விழிப்புள்ளவர்களாய் ஆயத்தமாயிருப்போம்.

- Sis. லதா     

 

ஜெபக்குறிப்பு:-

மிஷனெரிகளைத் தாங்கும் குடும்பத்தினரின் எல்லைகளில் தேவ பாதுகாப்பிருக்க ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş