Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil)  15-06-2021
Share:

By Village Missionary Movement

Tuesday, 15-Jun-2021

இன்றைய தியானம்(Tamil)  15-06-2021

கொடுங்கள் 

“கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்;…” – லூக்கா 6:38 

ஆனி ஆஸ்குவித் என்னும் ஆசிரியர் 1887-ம் ஆண்டு, நெல்லை மாவட்டத்தின் கல்லூரி ஒன்றில் பாடம் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருந்தபோது பிச்சை எடுப்பதற்காக வந்தான் பார்வையற்ற சிறுவன் ஒருவன். ஆனி அவனிடம், “தம்பி இது கல்வி வழங்கும் இடம், உணவு வழங்கும் இடமல்ல. எனவே நீ வேறு இடத்திற்குச் சென்று பிச்சையெடு” என்றார்கள். சிறுவன் மறுமொழியாக, “அப்படியெனில் எனக்குக் கல்வி கொடுங்கள்” என்றான். அந்தக் கேள்வி ஆனியின் உள்ளத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்தக் கேள்வியின் தாக்கத்தால் பார்வையற்ற அவனுக்கு கல்வி புகட்ட ஆரம்பித்தார். அது பள்ளியாக வளர்ந்தது. பிற்காலத்தில் மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியாக உருவெடுத்தது.

பரிசுத்த வேதாகமத்தில், சாறிபாத் என்ற ஊரிலுள்ள விதவை தன்னிடம் ஒரு பிடி மாவும் கொஞ்சம் எண்ணெயுமே வைத்திருந்தாள். இந்த சூழலில் எலியா என்னும் தீர்க்கதரிசிக்கு தன்னிடமுள்ள கொஞ்ச மாவும், கொஞ்ச எண்ணெயில் அப்பம் செய்து கொடுக்கிறாள். அதனிமித்தம் தேசத்தின் மேல் மழையைக் கட்டளையிடும் நாள் மட்டும் விதவையின் பானையின் மா செலவழிந்து போகவும் இல்லை, கலசத்தின் எண்ணெய் குறைந்து போகவும் இல்லை. அவள் தன்னுடைய இயலாமை நிலைமையிலிருந்தும், தன்னிடத்திலுள்ளதை அப்படியே கொடுத்துவிட்டபடியினால், பஞ்சகாலம் முழுவதும் ஆசீர்வாதமாகவும், செழிப்பாகவும் இருந்தாள் என பார்க்கிறோம். 

இதை வாசிக்கின்றதான அன்பானவர்களே! இயேசு கிறிஸ்து நம் எல்லோருக்காகவும் அவருடைய ஜீவனை கொடுத்ததினால் நாம் அவரில் அன்புகூருகிறோம். விதவையும் தன்னிடத்திலுள்ளதை கொடுத்து, செழிப்பான ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டாள். ஆனி அவர்களும் தன்னிடத்திலுள்ள கல்வியை கொடுத்ததினால், மிகப்பெரிய பார்வையற்றோர் பள்ளியை உருவாக்கினார். நாமும் கொரோனா லாக்டவுனில் இருக்கின்றதான இந்நாட்களில், நம்முடைய வீட்டின் அருகே அநேகர் தங்களுடைய வேலைகளை இழந்து, ஒருவேளை உணவு இல்லாமல் கூட கஷ்டப்படலாம். அப்படிப்பட்டதான ஏழை, எளியவர்களுக்கு நம்மால் முடிந்த அளவு நம்மிடம் உள்ளதை பகிர்ந்து கொடுப்போம்! மற்றவர்களுக்கு உதவிக்கரம் கொடுப்போம்! கொடுக்கின்றதான நம்மையும் ஆண்டவர் ஆசீர்வதிப்பார். 
-    Mrs. ஜீவா விஜய்      

ஜெபக்குறிப்பு:
நாம் கிராமங்களில் சந்தித்து வழிநடத்தின சிறுவர்கள், வாலிபர்கள் கர்த்தருக்குள் நிலைத்திருக்க ஜெபியுங்கள்.  

Whatsapp:
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள +9194440 11864 என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்.

Website: www.vmm.org.in
Email: reachvmm@gmail.com

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al