Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 18.02.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 18-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 18.02.2026

 

அர்ப்பணிப்பின் காலம்

 

"...நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன் என்றான்" - யோபு 42:6

 

இன்றைய தினத்தை பாரம்பரியமிக்க திருச்சபைகளில் "சாம்பல் புதன் கிழமை" என்று அனுசரிப்பதுண்டு. இன்று தொடங்கி ஈஸ்டர் பண்டிகை வரை உள்ள நாட்களை லெந்து காலங்கள் என்று அழைப்பர். வேதத்திலே "சாம்பல்" எதை குறிக்கிறது என்றால், "தேவனுக்கு முன்பாக தன்னைத் தாழ்த்துகிறதை" குறிக்கிறது. உதாரணமாக யோபு 42 : 6 ல் "நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்" என்கிறார் யோபு. அதாவது லெந்து காலங்கள், நம்மைத் தாழ்த்தி, தேவ சமுகத்தில் நம்முடைய குறைகளை ஆராய்ந்து, நம்மை நாமே நிதானித்து அறிந்து சரி செய்து கொண்டு, ஆவிக்குரிய வாழ்வில் வளர ஏற்ற காலங்கள்.

      

“லெந்து” என்பதன் பொருள் “வசந்தம்” என்பதாகும். இயற்கை கூட இந்த காலங்களில் தன்னுடைய பழுத்த இலைகளை உதிர்த்து, புதிய இலையை துளிர்க்கச் செய்யும். ஆகவே இந்த காலங்கள், நம்முடைய பழைய பாவ சுபாவங்களை விட்டு விட்டு, உள்ளான மனிதன் நாளுக்கு நாள் புதிதாகக்கூடிய அனுபவத்தை பெற்றுக்கொள்ள கூடிய நாட்கள். 

      

இந்த நாட்களில் பல வெளிபிரகாரமான தீர்மானங்களை எடுத்து, 40 நாட்களும் கடைப்பிடிப்பது நல்லது தான். ஆனால் முக்கியமாக, இருதயத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும். ஆண்டவரின் விருப்பத்தை நம் வாழ்வில் நிறைவேற்றுகிறவர்களாய் வாழ, நம் சரீரத்தை பரிசுத்தமாகவும், ஆண்டவர் தங்கும் ஆலயமாகவும், அவருக்கு பிரியமானதை செய்யும்படியும் நம்மை அர்ப்பணிக்க வேண்டும். ஆண்டவரே, உமக்கு பிரியமானதை செய்ய எனக்கு கற்றுத் தாரும் என்ற ஜெபத்தையும், தேவனே, என்னை ஆராய்ந்து என் இருதயத்தை அறிந்து கொள்ளும். என்னை சோதித்து என் சிந்தனைகளை அறிந்து கொள்ளும். வேதனை உண்டாக்கும் வழி என்னிடத்தில் உண்டோ என்று பார்த்து நித்திய வழியிலே என்னை நடத்தும் என்ற தாவீதின் ஜெபம், ஒவ்வொரு நாளும் நமது ஜெபமாய் மாறட்டும் .

        

நம் இருதயத்தையும் சரீரத்தையும் ஆண்டவருக்கு ஒப்படைத்து, எல்லாவித ஒழுக்க கேடுகளிலும் இருந்து நம்மை விலக்கி, அர்ப்பணிப்பின் இருதயத்துடன் உபவாசித்து மனம் திரும்பி, லெந்து நாட்களின் பூரண ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வோம். ஆமென்.

- Rev. S. ஜோதிநாயகம்

 

ஜெபக்குறிப்பு:- 

வடமாநில மிஷனெரிகளின் பாதுகாப்பிற்காக ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al