Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 09.02.2026
Share:

By Village Missionary Movement

Monday, 09-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 09.02.2026

 

கண்டிப்பு நல்லது

 

“பிள்ளையானவன் நடக்கவேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான்” - நீதி. 22:6

 

வட அமெரிக்காவில் அழிந்து வந்த ஒரு பறவை இனத்தைப் பாதுகாக்க அந்நாட்டு அரசாங்கம் முடிவு செய்தது. எனவே உயிரியல் பூங்காவில் தனியாக ஒரு அறை அமைத்து, அதைப் பாதுகாத்து, அந்தப் பறவைகளுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் செய்துத் தரப்பட்டது. அந்த பறவை இனம் பெருகியதும், பின்னர் வெளி உலகத்துக்கு சுதந்திரமாக பறக்க விடப்பட்டது. தனியாக, பாதுகாப்பாக வளர்க்கப்பட்டதால் அந்த பறவைகள் எளிதாக எதிரிகளுக்கு உணவாகி அழியத் தொடங்கின. எந்தப் பறவை இனம் அழியக் கூடாது என்று முயற்சி எடுக்கப்பட்டதோ, அந்த முயற்சியே அந்த இனம் அழியக் காரணமானது.

 

அதே போல் தான் நாம், நம் பிள்ளைகளுக்கு உருவாக்கிக் கொடுக்கும் சில வசதிகள் கூட, அவர்களுடைய அழிவுக்கு காரணமாகி விடுகிறது, பூங்காவில் பராமரிக்கப்பட்ட பறவைகளுக்கு வேட்டையாடத் தெரியாது. அதே போல் தான் அதிகமாக பேணப்படும் பிள்ளைகளால் தோல்விகளை தாங்கிக் கொள்ள முடியாது. உங்கள் பிள்ளைகளுக்கு வெளி உலகத்தைக் காட்டுங்கள். அதிலுள்ள பிரச்சனைகளை மேற்கொள்ள தேவ பெலனை நாடி அவர்கள் போராடி வெற்றி பெறட்டும்.

 

பழைய ஏற்பாட்டில் ஏலி என்னும் தேவ ஊழியர், தன்னுடைய குமாரர்களை ஆண்டவரின் வழியில் நடத்தத் தவறினார். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்களை கற்றுக்கொடுக்காததினால் அவர்கள் ஆசரிப்புக் கூடாரத்தின் வாசலில் கூட்டங்கூடுகிற ஸ்திரீகளோடு கூட இருப்பதைக் கேள்விப்பட்டு, அவர்களை நோக்கி : நீங்கள் இப்படிப்பட்ட காரியங்களைச் செய்கிறது என்ன? இந்த ஜனங்கள் எல்லாரும் உங்கள் பொல்லாத நடக்கைகளைச் சொல்லக்கேட்கிறேன். என் குமாரரே, இந்த பொல்லாத செயல்களை செய்ய வேண்டாம் என எச்சரிக்கிறார்.

 

பிரியமானவர்களே! சாலொமோன் இஸ்ரவேலின் தேசத்துக்கு ராஜாவாக இருந்த நாட்களில் அனுபவிக்காத வசதியே இல்லை. எல்லாவற்றையும் அனுபவித்தவர் தான், பிள்ளையானவன் நடக்க வேண்டிய வழியிலே அவனை நடத்து; அவன் முதிர்வயதிலும் அதை விடாதிருப்பான் என்று கூறுகிறார். பிள்ளைகளை அன்போடு கூடிய கண்டிப்புடன் நடத்த வேண்டும். வெறும் அன்பை மட்டும் காட்டிவிட்டால், அவர்கள் வழி தவறுவதற்கு வாய்ப்பு உண்டு. வெறும் கண்டிப்பை மட்டும் காண்பித்தால் அவர்கள் நம்மை விட்டு வழிவிலகிச் செல்லவும் வாய்ப்பு உண்டு. எனவே கர்த்தர் நமக்கு கிருபையாய் கொடுத்த பிள்ளைகளை தேவ ஒத்தாசையோடு நடத்துவோம். சிறுவயதிலேயே அவர்களுக்கு நல்வழியாம் இயேசுவை காட்டி விட்டால், அவர்கள் அதை முதிர்வயதிலும் விடாதிருப்பார்கள். நாம் அவர்களுக்கு அதை கற்றுகொடுக்க தவறும் பட்சத்தில் இந்த சமூகம் மற்றும் இயற்கை கற்றுக் கொடுக்க வேண்டியதாயிருக்கும்.       

- Bro. T. சங்கர் ராஜ்

 

ஜெபக்குறிப்பு:-

பள்ளி ஊழியத்தின் மூலம் சிறுவர் கேட்ட வசனங்கள் அவர்கள் உள்ளத்தில் கிரியை செய்ய ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet