By Village Missionary Movement
Sunday, 08-Feb-2026இன்றைய தியானம்(Tamil) 08.02.2026
கேட்டுப்பாரு
"கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்துப்பாருங்கள்;..." - சங்கீதம் 34:8
செல்ல பிள்ளைகளே, How are You? இன்றைக்கு Sunday class போக ரெடியா? அங்கு சொல்லி கொடுக்கின்றதை கவனமாய் கேட்டு, அதன்படி நடக்க JESUS கிட்ட உதவி கேட்கணும். O.K.வா குட்டி செல்லங்களே!
ஷீலா ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும் தவறாமல் Sunday class கலந்து கொள்ளுவா. Daily Prayer பண்ணிடுவா. நீங்க எப்படி குட்டீஸ்? எதை மறந்தாலும் தினமும் இயேசப்பாவிடம் பேச மறக்கவே கூடாது. ஷீலா Hostelல படிச்சா. எல்லா பிள்ளைகளுக்கும் பெற்றோர் பார்க்க வருவாங்க, தேவையான Snacks எல்லாம் வாங்கிக் கொடுப்பாங்க. ஷீலாவுக்கு அப்பா, அம்மா யாருமே கிடையாது. எவ்வளவு கஷ்டமா இருக்கும். இயேசப்பாட்ட அடிக்கடி சொல்லுவா. என்ன சொல்லுவான்னு நினைக்கிறீங்க? Jesus நீங்கதான் என் அம்மா, என் அப்பா. நான் ஆசைப்படுகிறதை நீர் அறிந்திருக்கிறீர் என்று ஜெபிப்பாள்.
ஒருநாள் இவளுக்கும் முறுக்கு சாப்பிட வேண்டும் என்று ஆசையாய் இருந்தது. எலியா தாத்தாவுக்கு காகம் அப்பமும் இறைச்சியும் கொடுத்தது. நீங்களும் Prayer பண்ணினால் இயேசப்பா உங்க எல்லா கஷ்டத்தையும் மாற்றி உங்களுக்கு உதவி செய்வார் என்று Sunday classல் சொல்லிக் கொடுத்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனே இயேசப்பாகிட்ட சொல்ல ஆரம்பித்தாள். எனக்கு முறுக்கு வேண்டும் இயேசப்பா சாப்பிட ஆசையா இருக்குதுன்னு ஜெபித்தாள். உங்களுக்கு ஏதாவது தேவைன்னா அப்பா, அம்மாவே வாங்கித் தருவாங்க. இல்லன்னா Zomoto, Swiggy ல Order பண்ணி சாப்பிடுவீங்க. ஆனா ஷீலாவுக்கு அப்படி யாருமே கிடையாதுதானே. அடுத்து என்ன நடந்தது தெரியுமா? காலையில் எழுந்ததும் என்ன ஆச்சரியம்! ஒரு காக்கா முறுக்கு பாக்கெட்டை கொண்டு வந்து அவள் பக்கத்தில் போட்டுவிட்டு சென்றது. ஷீலாவுக்கு சந்தோஷம் தாங்க முடியல. Thank You Jesusன்னு சொல்லி குதித்தாள். அவள் கேட்பதை எல்லாம் கொடுக்க இயேசப்பா இருக்கிறார் என்றும், தங்களுக்கும் அவர் உதவி செய்வார் என்று Hostel பிள்ளைகள் எல்லாரும் நம்ப ஆரம்பித்தார்கள்.
- Sis. எஸ்தர் செல்வி
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864