Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 04.02.2026
Share:

By Village Missionary Movement

Wednesday, 04-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 04.02.2026

 

அற்பமாக எண்ணாதிருங்கள்

 

"இந்தச் சிறியரில் ஒருவனையும் அற்பமாய் எண்ணாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள்;..." - மத்தேயு 18:10

 

பன்னிரண்டு வயதான ஸ்வாதி கன்வென்ஷன் கூட்டத்திற்குச் சென்றாள். அவள் ஒரு விசுவாசி. பிரசங்கியார் அன்று இரட்சிப்பைக் குறித்து அருமையாகப் பேசிக் கொண்டிருந்தார். ஸ்வாதிக்கு முன் வரிசையில் உட்கார்ந்திருந்த வாலிபப் பெண் ஜிக்கி, அவளுக்கு எரிச்சல் மூட்டினாள். அவளின் உதட்டு சாயமும், அலங்காரமும் ஸ்வாதியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவளது கண்ணாடி வளையல்களின் சத்தம் ஸ்வாதியை செய்தியை கவனிக்கவிடாமல் மிகவும் தொல்லை கொடுத்தது. ஸ்வாதி, அவளை மனதிலேயே சபித்துக் கொண்டிருந்தாள். பன்னிரண்டு வயதைத் தாண்டிவிட்டால் போதுமே, இப்படியா அலங்காரம் செய்து கொண்டு கூட்டத்திற்கு வருவது என்று. பிரசங்கம் உச்சக்கட்டத்தை அடைந்தது.

 

பிரசங்கியார் ஒரு கேள்வியை எழுப்பினார். யார் யாரெல்லாம் ஆண்டவரை ஏற்றுக்கொள்ள விருப்பமோ, அவர்களெல்லாரும் முன்னுக்கு வரும்படி அழைப்பு விடுத்தார். ஸ்வாதிக்கு ஒரே ஆச்சரியம், நம்ப முடியவில்லை ஒரே வியப்பு. யாரை சபித்தாளோ அதே ஜிக்கி தான் முதலாவது எழுந்து முன்னே சென்று பிரசங்கியாரிடம் முழங்கால்படியிட்டாள். தேவமனிதர் ஜெபித்தார், ஜெபத்திற்கு பிறகு ஜிக்கி கண்களைத் துடைத்த வண்ணமாக தனது இடத்திற்கு வந்தாள். அப்பெண்ணை அற்பமாய் எண்ணியதற்காக ஸ்வாதி குற்றவுணர்வடைந்தாள். இனி யாரையும் வெளித்தோற்றத்தை வைத்து எண்ணாதிருக்க தீர்மானமெடுத்து, எல்லோருக்காகவும் ஜெபிக்கத் தொடங்கினாள்.

 

எனக்கன்பான தேவ மக்களே! நாம் நல்ல பக்தியுள்ள வாழ்க்கை வாழ்கிறவர்களாக இருக்கலாம். அநேக காரியங்களில் தேவனுக்கு பிரியமாக வாழலாம். நல்லது! அதை தொடர்ந்து செய்ய வேண்டும்! அதே நேரத்தில் தேவனுக்கடுத்தக் காரியங்களில் குறைவுள்ளவர்களை அற்பமாக எண்ணக்கூடாது. லூக்கா 18 ஆம் அதிகாரத்தில் ஒருவன் பக்திமான், ஒருவன் பாவி. ஆனால் பக்திமான் பாவியை அற்பமாக எண்ணினபடியால், தனக்கு கிடைக்க வேண்டிய நன்மையை இழந்தான். அற்பமாக எண்ணப்பட்ட அவனே தேவனால் அங்கீகாரமடைந்தான். எப்படிப்பட்ட பாவியையும் இயேசு மனம் மாற்ற வல்லவராயிருக்கிறார். நாமும் பாவம் செய்து தேவ இரக்கத்தினால் பாவமன்னிப்பு பெற்றோம். ஒருவரையும் அற்பமாக நினைத்து அவர்களை வெறுத்து விடக்கூடாது. நாம் அவர்களுக்காக அதிகமாக ஜெபிக்க வேண்டும். இயேசு அவர்களையும் இரட்சிப்பார், நம்மையும் ஆசீர்வதிப்பார். இந்த ஆண்டில் நமது அனைத்து செயல்களும் இயேசுவுக்கு உகந்ததாக இருப்பதாக. கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென். அல்லேலூயா!

- Mrs. எப்சிபா இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:

12 Kids Club க்காக, பிள்ளைகள் தேவ ஞானத்தால் நிரப்பப்பட ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet jojobet giriş matbet giriş holiganbet giriş matbet sahabet onwin bets10 bets10 giriş bets10 güncel giriş betcio atlasbet casibom giriş deneme bonusu casibom vaycasino vaycasino giriş meritking meritking giriş cratosroyalbet realbahis realbahis giriş jojobet jojobet jojobet jojobet jojobet holiganbet holiganbet cashwin esbet tambet casibom casibom giriş casibom casibom giriş imajbet imajbet giriş imajbetapp grandpashabet grandpashabet giriş grandpashabet güncel bets10 bets10 giriş bets10 güncel giriş matbet matbet giriş alobet betmartin pashagaming ultrabet lunabet betzula meritking