Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 03.02.2026
Share:

By Village Missionary Movement

Tuesday, 03-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 03.02.2026

 

தயங்கக் கூடாது

 

"நன்மை செய்யப்படியுங்கள்;..." - ஏசாயா 1:17

 

தேவானும் அவனோடு ஆறு பிள்ளைகளும் பள்ளிக்குச் செல்லும் வழியில் ஒரு இரயில் பாதையை தாண்டி செல்வார்கள். ஒரு நாள் தேவான் இரயில் தண்டவாளத்தில் சில குறுக்கு கட்டைகள் எடுக்கப்பட்டிருந்ததை கண்டு விபத்து ஏற்படுமோ என கவலை அடைந்தான். அவன் தன் நண்பர்களிடம் அதை பற்றி சொல்லியும் அவர்கள் அக்கறை காட்டவில்லை. பள்ளிக்கு பிந்தி செல்ல நேரிடும் என்று நினைத்தார்கள். ஒரு வேளை இதனால் ஆபத்து நேரிடுமோ? இரயிலை நிறுத்தினால் என்னைத் திட்டுவார்களோ? இப்படி எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கவே, இரயில் வரும் விசில் சத்தம் கேட்டது. அவனுக்கு யோசிக்க நேரமில்லை. அதிர்ஷ்டவசமாக அன்று சிவப்பு சட்டை அணிந்திருந்த அவன், சட்டையை கழற்றி உயர்த்தி அசைத்துக் கொண்டே இரயில் பாதையில் ஓடினான்.

 

எஞ்சின் ஓட்டுநர் ஏதோ சிவப்புக் கொடி போல் தெரிகிறதே என்று பிரேக்கை அழுத்தினார். இரயில் மெதுவாக நின்றதும் தேவான் அவரை அழைத்துக் கொண்டு போய் தண்டவாளத்திலிருந்த விரிசலைக் காட்டினான். அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் தேவானை கட்டி அணைத்துக் கொண்டு நன்றி கூறினார். இரயில்வே அதிகாரிகள் வந்து அந்த இடத்தைப் பார்வையிட்டார்கள். தேவானுக்கு என்ன பரிசு வேண்டும் என்று கேட்டார்கள். அதற்கு அவன் ஐயா, பத்து கி.மீ நடக்க வேண்டி இருப்பதினால் ஒரு சிலர் மட்டுமே எங்கள் கிராமத்திலிருந்து பள்ளிக்குச் செல்லுகிறோம். எங்கள் கிராமத்தில் ஒரு நிறுத்தம் இருந்தால் கூடுதல் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்வார்கள். தயவு செய்து அதற்கு ஒழுங்கு செய்யுங்கள் என்றான். அதிகாரிகளும் அதற்கு ஒழுங்கு செய்தனர்.

 

எனக்கன்பான தேவபிள்ளைகளே! ஊழியக்காரர்களே! காலத்தின் கடைசியில் வந்திருக்கிறோம். விசேஷமாக நமது பங்களிப்பை இந்த ஆண்டில் தேவனுக்காக நிறைவேற்ற வேண்டும். தேவானின் நற்செயலால் அநேகர் காப்பாற்றப்பட்டார்கள். அது மாத்திரமல்ல அநேக பிள்ளைகளுக்கு கல்வி அறிவும் கிடைத்தது. அவனது சிகப்புச் சட்டையால் இரயிலை நிறுத்தி அநேகருடைய உயிரை காப்பாற்றியது போல, நமது இரட்சிப்பால் அநேகருடைய ஆத்துமாவை காப்பாற்ற இன்றே நாம் களத்தில் இறங்க வேண்டும். இரயிலில் இருந்த விரிசலை மற்றவர்கள் கண்டும் காணாமல் போனது போல நாம் இருக்கக் கூடாது.

 

அந்த தேவானை போல, அநேகர் பாவத்தின் சம்பளமாகிய மரணத்திலிருந்து காப்பாற்றப்பட, நமது இரட்சிப்பு உதவியாய் இருக்க வேண்டும். இந்த வருஷத்தில் நமது பங்களிப்பு தேவனுக்கென்று அதிகதிகமாக பெருக்கமடைய இன்றே ஒப்புக் கொடுப்போம். அநேகர் இரட்சிப்படைய நமது பங்கு அவசியம் தேவை. செய்வோம், செயலாற்றுவோம். கர்த்தர் தாமே நம்மை ஆசீர்வதிப்பாராக! ஆமென். அல்லேலூயா!

- Rev. S.A. இம்மானுவேல்

 

ஜெபக்குறிப்பு:

ஊழியர்களின் பிரயாணங்களில் தேவபாதுகாப்பு இருக்க ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al