Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 01.02.2026 (Kids special)
Share:

By Village Missionary Movement

Sunday, 01-Feb-2026

இன்றைய தியானம்(Tamil) 01.02.2026 (Kids special)

 

தேங்காய் கதை

 

"...உற்சாகமாய்க் கொடுக்கிறவனிடத்தில் தேவன் பிரியமாயிருக்கிறார்" - 2 கொரி.9 : 7

 

அன்பு செல்லங்களே! எப்படி இருக்கீங்க? இன்றைக்கு ஒரு கதை கேட்கலாமா? ஒரு குடும்பம் இருந்துச்சி, அவங்களுக்கு ஒரு தென்னந்தோப்பும் இருந்துச்சு. அங்கு ராஜூ, ரகுனு இரு அண்ணன் தம்பி இருந்தாங்க. அவங்களுக்குள்ள ஒற்றுமையா பாசமா இருந்தாங்க. அவர்களுக்கு ஒரு பத்து பன்னிரண்டு வயசு இருக்கும்போது அவங்க அப்பா இறந்து போயிட்டாரு. இவங்க வளர்ந்துட்டாங்க, ரெண்டு பேரும் அப்பாவோட அந்த தென்னந்தோப்ப பொறுப்பா பாத்துக்கிட்டாங்க. அந்த வருஷம் அவங்க ஆயிரம் தேங்காய் பறிச்சாங்க. 500 காய் விக்குறது உனக்கு, 500 காய் விக்குறது எனக்கு என பிரிச்சிகிட்டாங்க. அண்ணன் சொன்னான் நான் பகல்ல தோப்பை கவனிச்சுக்கிறேன், நீ இராத்திரி பார்த்துக்கோ என சொன்னான். அந்த தோப்பு சரியான பாதுகாப்பு இல்லாம இருந்துச்சு. ஒரு நாள் அண்ணன் நினைத்தான் இராத்திரி முழுவதும் தம்பி பார்த்துக்கிறான் கஷ்டப்படுகிறான் என்று நினைத்து, நான் கொடுத்தா வாங்க மாட்டான். அதனால ஒரு 50 காயை தன்னுடைய பங்குல இருந்து அவன் தம்பி பங்கோட எடுத்து போட்டுட்டான். இராத்திரி அங்க தம்பி வந்தான், அவன் நினைத்தான் அண்ணன் அப்பா இறந்ததுக்கு அப்புறம் நம்மள நல்லா பார்த்துக்கிறான் என்று நினைத்து அவனுக்கு ஏதாவது நாம செய்யணும், நாம கொடுத்தா வாங்கிக்க மாட்டான். அதனால் ஒரு ஐம்பது காயை தன்னுடைய பங்குல இருந்து எடுத்து அண்ணனுடைய பங்குல எடுத்து போட்டுட்டான்.

 

மறுநாள் அந்த காயை எல்லாம் ஏத்துறதுக்காக லாரி வந்துச்சு. அப்போ முதல்ல அண்ணனுடைய பங்கை தான் முதல்ல எண்ணினாங்க. எத்தனை இருந்து இருக்கும்னு நினைக்கிறீங்க? ஆமா கரெக்டா 500 காய் இருந்துச்சு! அண்ணனுக்கு ஒரே ஆச்சரியம்! நாம தான் தம்பிக்கு 50 காயை எடுத்து போட்டுட்டோமே, அப்படின்னா நம்ம பங்குல 450 தானே இருக்கும். ஆனால் அவன் நினைச்சுகிட்டான், நாம் மத்தவங்களுக்கு கொடுத்தா அதுல குறைவே இருக்காது போலன்னு! வாங்குவதை பார்க்கிலும் கொடுப்பது நல்லதுன்னு வசனம் சொல்லுது! கேளுங்கள் கொடுக்கப்படும் என்ற வசனம் உலகத்துக்கே தெரியும். ஆனா கொடுங்கள் அப்பொழுது கொடுக்கப்படும் என்ற வசனத்தின் படி நாம பிறருக்கு கொடுக்கும் போது ஆண்டவர் நம்மை மறக்கவே மாட்டார். நாம் மனுஷங்களுக்கு கொடுக்கும் போது தேவன் நமக்கு திரும்ப கொடுப்பார். அதுவும் அளவுக்கு அதிகமா கொடுப்பார். அதனால இந்த வருஷத்துல நாம ஆண்டவருக்குன்னு கொடுப்போம். நம்முடைய வாழ்க்கையில் ஆசீர்வாதம் வரும் சரியா பிள்ளைகளே உங்களுக்காக ஜெபிச்சுக்கிறேன். ஆமென். 

- Sis. தெபொராள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza tlcasino amgbahis holiganbet wbahis casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş carkbet carkbet giris supertotobet supertotobet giriş superbetin superbetin superbetin giriş marsbahis marsbahis giriş