By Village Missionary Movement
Friday, 30-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 30.01.2026
வெற்றியின் இரகசியம்
"...பக்திவிருத்திக்கு ஏதுவான நல்ல வார்த்தை உண்டானால் அதையே கேட்கிறவர்களுக்குப் பிரயோஜனமுண்டாகும்படி பேசுங்கள்" - எபேசியர் 4:29
வெற்றியின் இரகசியம் என்பது பிறரிடம் உள்ள நற்பண்புகளை மட்டும் பேசுவது. பிரான்ஸ் நாட்டிற்கு அமெரிக்கப் பிரதிநிதியாக பெஞ்சமின் ஃபிராங்க்ளின் நியமிக்கப்பட்டார். மிகவும் திறம்பட பணியாற்றிய அவரது சாதனைகளைக் கண்டு வியந்தவர்கள் அவரிடம், “உங்கள் வெற்றியின் இரகசியம் என்ன?” என்று கேட்டார்கள். பெஞ்சமின் ஃபிராங்க்ளின் “நான் யாரைக் குறித்தாவது பேச வேண்டுமானால் அவர்களது நல்ல குணங்களை பற்றி மட்டும் பேசுவேன். அவர்களது குறைவுகளையோ, தோல்விகளையோ குறித்து பேசமாட்டேன்” என்றார். அது போல நீங்களும் யாரைக் குறித்தும் தீது பேசாதீர்கள். பிறரிடம் ஏதாவது நன்மை உண்டானால் அதை பற்றி பேசலாம், இல்லையேல் அமைதியாய் இருக்கலாம். அதுவே உங்கள் வெற்றிக்கு வழிவகுக்கும் என்றார்.
அருமையான தேவபிள்ளையே, வேதத்தில் ஒரு சம்பவத்தை வாசிக்கிறோம். யூதா 1:9 ல் பிரதான தூதனாகிய மிகாவேல், மோசேயினுடைய சரீரத்தைக்குறித்துப் பிசாசுடனே தர்க்கித்துப் பேசினபோது, அவனைத் தூஷணமாய்க் குற்றப்படுத்தத் துணியாமல்: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்று சொன்னான். யோசுவாவுக்கு விரோதமாய் விரோதஞ் செய்ய பிசாசு அவன் வலது பக்கத்தில் நின்ற போதும், கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக என்றார்.
சகரியா 3:1,2 ல் பிரதான ஆசாரியனாகிய யோசுவா கர்த்தருடைய தூதனுக்கு முன்பாக நின்ற போது, சாத்தான் அவனுக்கு விரோதஞ்செய்ய அவன் வலதுபக்கத்திலே நின்றான். அப்போழுது கர்த்தர் சாத்தானை நோக்கி: கர்த்தர் உன்னைக் கடிந்து கொள்வாராக; இவன் அக்கினியினின்று தப்புவிக்கப்பட்ட கொள்ளி அல்லவா என்றார்.
அருமையான தேவ பிள்ளையே, பிசாசு தேவனுக்கு விரோதமாய் அநியாயம் செய்த போதிலும், கர்த்தர் அவனை தூஷணமாய் குற்றப்படுத்தத் துணியவில்லை என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆண்டவரே குற்றப்படுத்த துணியாத போது தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட, அபிஷேகம் பெற்ற, தேவசாயலில் உண்டாக்கப்பட்ட தேவபிள்ளைகளை நாம் குறை சொல்லலாமா? குறை சொல்லக் கூடாது. கறைபடாமல் உங்கள் வாயை காத்துக்கொள்ளுங்கள். அதுவே வெற்றியின் இரகசியம்.
- R. சலோமி
ஜெபக்குறிப்பு:-
மீடியா ஊழியத்தில் உள்ள ஊழியர்களை தேவன் ஆவியால் நிரப்பி பயன்படுத்த
ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864