Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 29.01.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 29-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 29.01.2026

 

ஜெபத்திற்கு பதில்                        

 

"...நானோ ஜெபம்பண்ணிக்கொண்டிருக்கிறேன்” - சங்கீதம் 109:4

 

எனக்குத் தெரிந்த ஒரு அண்ணனுக்கு இருதயத்தில் பிரச்சனை, அதனால் இரத்த வாந்தி எடுப்பார்கள். அந்த அண்ணனிடம் நான், இயேசப்பா கிட்ட சுகம் தாரும் என்று கேளுங்க, அப்போது சரியாகும் என்று சொன்னேன். அந்த அண்ணன், எல்லா தெய்வமும் என்னைக் கைவிட்டு விட்டது, உன் இயேசுவா எனக்கு சுகம் தரப் போகிறார் என்றார். தினமும் நடு இரவில் அந்த அண்ணனுக்காக நான் ஜெபம் செய்ய ஆரம்பித்தேன். ஒரு நாள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது, நீ யார் என்றே எனக்குத் தெரியாது என்று சற்று விரக்தியில் சொன்னார்கள். திரும்பவும் நான் அவர்களிடம் இயேசு உங்களுக்கு சுகம் தருவார் என்று சொன்னேன். என்னை எல்லாரும் விட்டு போய்விட்டார்கள். எனக்கு வியாழக்கிழமை ஆபரேஷன், ஏற்கனவே டாக்டர் நான் பிழைப்பது கடினம் என்று சொல்லிவிட்டார்கள். இந்த ஆபரேஷன் நடக்காமல் எனக்கு சுகம் கிடைத்தால், உன் இயேசப்பாவை நான் ஏற்றுக் கொள்கிறேன் என்றார்கள். மறுபடியும் நான் அவருக்காக ஜெபித்த போது, அந்த அண்ணன் சுகம் பெற்றதாக எனக்கு ஒரு தரிசனம் கிடைத்தது. மறுநாள் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்தேன், ஆனால் தொடர்பு கொள்ள இயலவில்லை. மூன்று வாரங்கள் கழித்து அந்த அண்ணன் எங்கள் வீட்டிற்கு வந்து எங்களிடம், எனக்கு இப்போது இரத்த வாந்தி இல்லை. ஆபரேஷன் நடக்காமலேயே நான் நல்லா இருக்கேன், உன் இயேசப்பாவை நான் ஏற்றுக்கொண்டேன் என்று சொன்னார்கள். நான் கண்ணீர் மல்க இயேசப்பாவிற்கு நன்றி கூறினேன்.

 

வேதத்திலும் கூட அன்னாளை பார்க்கும்போது, அவள் வருஷந்தோறும் ஆலயத்திற்குச் சென்று தன்னுடைய குறை மாறவேண்டுமென்று ஜெபித்து வந்தாள். அவள் ஆலயத்தில் தனியாக போய் மனங்கசந்து, மிகவும் அழுது, சேனைகளின் கர்த்தாவே, தேவரீர் உம்முடைய அடியாளின் சிறுமையைக் கண்ணோக்கிப் பார்த்து, உம்முடைய அடியாளை மறவாமல் நினைத்தருளி, உமது அடியாளுக்கு ஒரு ஆண் பிள்ளையைக் கொடுத்தால், அவன் உயிரோடிருக்கும் சகல நாளும் நான் அவனைக் கர்த்தருக்கு ஒப்புக்கொடுப்பேன்; அவன் தலையின்மேல் சவரகன் கத்தி படுவதில்லை என்று பொருத்தனை பண்ணி ஜெபித்தாள், அவளுடைய கண்ணீரின் ஜெபத்திற்கு பதில் கிடைத்தது.

 

கிறிஸ்துவுக்குள் பிரியமானவர்களே, ஆண்டவர் இன்று உங்களுக்கும் அவருக்கும் இடையே ஒரு தனிப்பட்ட நேரம் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறார். உங்களுடைய பிரச்சனை எதுவாக இருந்தாலும் அதை மனுஷரிடத்தில் சொல்லாமல், அவரிடம் போய் சொல்லும் போது, அதாவது ஜெபிக்கும் போது அதற்குரிய பதில் கிடைக்கும். உங்கள் எதிர்காலத்திற்குரிய திட்டங்களை அவர் வெளிப்படுத்துவார். நீங்கள் தேவனிடம் பேச தனிமையான ஜெப நேரம், ஜெப அறை உள்ளதா? சிந்திப்பீர்! 

- S. சிந்து 

 

ஜெபக்குறிப்பு:-

மீடியா ஊழியத்திற்கு படித்த திறமையான வாலிபர்கள் வர ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al