Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 13-06-2021 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 13-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 13-06-2021 (Kids Special)

 

சாந்தியின் முன்மாதிரி 

 

“நீங்கள் உலகத்துக்கு வெளிச்சமாயிருக்கிறீர்கள்;…” - மத்தேயு 5:14 

 

மாலா, கலா, சாந்தி மூன்று பேரும் ஒரே School-ல் ஒரே Class-ல் படிக்கக்கூடிய மாணவிகள். இதில் கலாவும், மாலாவும் நெருங்கிய தோழிகள். அதுமட்டுமல்லாது பயங்கர சுட்டிப் பிள்ளைகள். எப்பவுமே யாரையாவது கேலி செய்து கொண்டு, கோபப்படுத்திக் கொண்டேயிருப்பார்கள். சாந்தியோ மிகவும் அமைதியான, பெற்றோருக்கு கீழ்ப்படியக்கூடிய பிள்ளை. எப்போதுமே மற்றவர்களுக்கு முன்மாதிரியாக இருக்க விரும்புவாள். இவளது நல்ல நடக்கையைக் கண்டு அநேக சிறுவர்களும் கூட மனம் மாறுவார்கள். 

 

ஒருநாள் மாலாவின் அம்மா கையில் வாளியோடே, “மாலா….மாலா” என்று கூப்பிட்டுக்கொண்டே தெருவெல்லாம் தேடி கடைசியாக தன் வீட்டு அருகில் இருந்த Garden-க்கு வந்தார்கள். அங்கே மாலா கதைப் புத்தகம் ஒன்றை படித்துக் கொண்டிருந்தாள். அம்மாவின் சத்தத்தைக் கேட்ட அவளுக்கு கோபம் வந்தது. வேகமாக வந்து, “ஏன் இப்படி கத்திக்கொண்டிருக்கிறீர்கள்?” என்று உரத்த குரலில் கூறினாள். மாலாவின் அம்மாவோ அமைதியாக கையில் இருந்த வாளியை அவளிடம் கொடுத்து, “இதில் பச்சரிசி இருக்கிறது, இதை Rice Mill -ல் கொடுத்து அரைத்துக்கொண்டு வா” என்றார்கள். உடனே மாலா, “என்னால் முடியாது, நான் படிக்கவேண்டும்” என்றாள். உடனே மாலாவின் அம்மா, “உன்கூட படிக்கிற சாந்தி கூட இப்பத்தான் ஒரு வாளியை எடுத்துக்கொண்டு Rice Mill-க்கு சென்றாள்” என்றார்கள். மாலா உடனே, “மற்றவர்களை ஒன்றும் சுட்டிக்காட்ட வேண்டாம். நான் போய் அரைச்சிட்டு வர்றேன்” என்று சொல்லிவிட்டு போனாள். 

 

மறுநாள் எப்பவும் போல School-க்கு சென்றாள். Teacher Maths பாடம் நடத்திக்கொண்டிருந்தார்கள். நடத்தி முடிந்ததும், யாராவது வந்து இந்த கணக்கை Board ல் எழுதுங்கள் என்றார்கள். எல்லா மாணவர்களும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க, சாந்தி மனதிற்குள் ஜெபித்துக்கொண்டே, முயற்சித்துப் பார்ப்போம் என மனதிற்குள் எண்ணிக்கொண்டு Board-ல் எழுதினாள். எல்லாம் சரியாகவே வந்தது. Teacher சாந்தியை பாராட்டி, “இவளைப்போல நீங்களும் தைரியமுள்ள, முன் மாதிரியான பிள்ளையாக இருக்கவேண்டும்” என்றார்கள். சாந்தியை பாராட்டினதை தாங்க முடியாத மாலாவுக்கும், கலாவுக்கும் மனதிற்குள் எள்ளும் கொள்ளும் வெடித்தது. இருந்தாலும் class முடிந்தவுடன் சாந்தியிடம் சென்று, “உன்னால் மட்டும் எப்படி இப்படி எல்லோரிடமும் நல்ல பெயர் எடுக்க முடியுது” என்று கேட்டார்கள். சாந்தி சிரித்த முகத்துடன், “இயேசப்பா நமக்குள் இருந்தால் இப்படிப்பட்ட சுபாவங்கள் வந்துவிடும். நான் செல்கிற Sunday School -ல் இன்னும் நிறைய கற்றுத் தருவார்கள், நீங்களும் வர்றீங்களா?” என்று கேட்டாள். அவர்களும் நாங்கள் கட்டாயம் வருகிறோம் என்றார்கள். 

 

குட்டி தம்பி, தங்கச்சி! நீயும் இந்த சாந்தியைப் போல முன்மாதிரியான பிள்ளையாக வாழ்ந்து காட்டணும். Ok. 

- Mrs. சாராள் சுபாஷ்

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş