Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 25.01.2026 (Kids Special)
Share:

By Village Missionary Movement

Sunday, 25-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 25.01.2026 (Kids Special)

 

இரு அணில்கள் 

 

“பக்தியுள்ளவனைக் கர்த்தர் தமக்காகத் தெரிந்துகொண்டாரென்று அறியுங்கள்;..” - சங்கீதம் 4:3

 

இரண்டு அணில்கள் நண்பர்களாக இருந்தன. அவை மரத்தில் ஏறி சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தன. அதில் ஒரு அணிலுக்கு கடவுள் பக்தி அதிகம். மற்றொரு அணிலுக்கோ கடவுள் பக்தி சுத்தமாக கிடையாது. திட்டமிட்டு செயல்படுபவர்களுக்கு கடவுளே தேவையில்லை என்று அந்த அணில் அடிக்கடி சொல்லும். ஒரு நாள் அவைகள் விளையாடிக் கொண்டிருக்கும் போது, கடவுள் பக்தி உள்ள அணில் மரத்திலிருந்து தவறி கீழே விழுந்து சிறிது காயத்துடன் உயிர் தப்பியது. பெரிய ஆபத்திலிருந்து தன்னைக் காப்பாற்றிய கடவுளுக்கு நன்றி கூறியது. இதை பார்த்ததும் மரத்திலிருந்த மற்றொரு அணில் சத்தமாக சிரித்தது.

 

பக்தி உள்ள அணில் சொன்னது, கடவுளை நம்பும் நான் துன்பப்பட்டாலும் கைவிடப்படவில்லை. கடவுள் என்னை கீழே தள்ளினாலும், அதற்கு ஒரு காரணம் இருக்கும் என்று கூறிவிட்டு தன் நண்பனை வேதனையோடு பார்த்தது. கண்களை மூடி கடவுளை நோக்கி, “கடவுளே, இந்த அவமானத்திற்கு ஏதுவாய் நான் என்ன தவறு செய்திருந்தாலும் என்னை மன்னியுங்கள்” என்று கேட்டது. அது கண்களை திறக்கும் போது கண் முன்னே கொடூரக் காட்சி ஒன்றைக் கண்டது. மரத்திலிருந்த அணிலுக்கு அருகில் ஒரு கொடிய விஷமுடைய பாம்பு நெருங்கி வந்து கொண்டிருந்தது. உன் பக்கத்துல பாம்பு ஒன்று வருகிறது என்று மரத்தின் கீழ் இருந்து சொல்லுகின்ற அணிலின் சத்தம், மேலே இருக்கிற அணிலின் காதில் விழவில்லை. பாம்பு மரத்தில் இருந்த அணிலை ‘லபக்’ என்று கவ்விக் கொண்டது. தன் தோழன் மரத்திலிருந்து கீழே விழுந்ததற்கும் கூட ஒரு காரணம் இருந்திருக்கிறது என்று உணரும் போது அது முழுமையாய் விழுங்கப்பட்டு விட்டது.   

 

அன்பான குட்டிச் செல்லங்களே, நீ தடுமாறி விழும் போது உன் நண்பர்கள் உன்னை கேலி செய்யலாம், அது ஆண்டவர் உன்னை காப்பாற்றுவதற்காக கூட இருக்கலாம் என்பதை மறவாதே. எல்லா நேரங்களிலும், எல்லாவற்றிற்காகவும் ஆண்டவருக்கு நன்றி சொல்லு. கஷ்டமான சூழ்நிலையாய் இருந்தாலும் ஆண்டவருக்கு நன்றி சொல். இந்த அழகான வாழ்க்கையை உனக்கு கொடுத்த ஆண்டவர், எதைச் செய்தாலும் அதை நன்மைக்குத்தான் செய்வார் என்பதை ஒரு நாளும் மறவாதே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மேல் பக்தியோடு இரு. ஏனென்றால் “பக்தியுள்ளவனை கர்த்தர் தமக்காகத் தெரிந்து கொண்டார்.”

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al