Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 22.01.2026
Share:

By Village Missionary Movement

Thursday, 22-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 22.01.2026

 

நாம் எப்படி?                

 

"...கிறிஸ்துவினிடத்தில் விசுவாசிக்கிறதற்கு மாத்திரமல்ல, அவர் நிமித்தமாகப் பாடுபடுகிறதற்கும் உங்களுக்கு அருளப்பட்டிருக்கிறது" - பிலிப்பியர் 1:29

 

சீனாவில் கிறிஸ்தவ மதம் கீழ்த்தரமாக எண்ணப்பட்ட காலம் அது. இயேசு கிறிஸ்துவை வணங்கினவர்கள் விரட்டிக் கொல்லப்பட்டனர். ஒரு முறை பத்து விசுவாசிகள் தேவனை ஆராதிக்கும் போது பிடிபட்டனர். பனிபோல குளிர்ந்த ஆற்றில் நிறுத்தி வைக்கப்பட்டதால் குளிரில் நடுங்கினர், பற்கள் கடகட வென்று அடித்துக் கொண்டது. போர் சேவகர்கள் ஆற்றின் கரையில் நின்று கொண்டு, "வாருங்கள், உங்களுக்கு கம்பளியும், சூடான உணவும் தருகிறோம், வேலையிலும் உங்களுக்கு உயர்வு கிடைக்கும்" என்று ஆசை காட்டினர்.

 

அவர்கள் குளிரில் உரையத் துவங்கினாலும், பாடல்களை பாடிக்கொண்டே இருந்தனர். ஒரு மணி நேரம் கழித்து குளிர் தாங்க முடியாமல் ஒரு விசுவாசி ஆற்றிலிருந்து வெளியேறினார். உடனடியாக அவரை கம்பளியால் போர்த்தி, சூடான உணவு அருந்த அழைத்துச் சென்றனர். மீதி இருந்த ஒன்பது விசுவாசிகளை பார்த்த ஒரு போர் சேவகர் அழ ஆரம்பித்தார். உங்கள் விசுவாசம் இவ்வளவு உறுதியாக இருக்குமானால், உங்கள் கடவுள் மெய்யாகவே உயிருள்ளவர் என்று சொல்லிய அவன், "இன்று நான் கிறிஸ்தவனாகி உங்களோடு கூட மரிக்க வருகிறேன்" என்று உறைந்து கொண்டிருக்கும் ஆற்றிற்குள் நடந்து வந்து வெளியேறினவனது இடத்தில் வந்து நின்றான்.

 

இன்று நாம் எப்படி இருக்கிறோம்? பாடுகள் என்று வந்தாலே நாம் சோர்ந்து போய் விடுகிறோம். பிரச்சனை என்றாலே என்ன வாழ்க்கை என்று சொல்லி நொந்து கொள்கிறோம். மாறாத பாடுகள் அநுபவித்தால் தான் இயேசுவோடு அளுகை செய்ய முடியும்.

  

எனக்கன்பான விசுவாச மக்களே! வேதம் சொல்கிறது எபிரேயர் 11:25, 26 ல் மோசே அநித்தியமான பாவ சந்தோஷங்களை வெறுத்து, தேவனுடைய ஜனங்களோடே துன்பத்தை அனுபவிக்க தன்னை ஒப்புக்கொடுத்தார். ஏன்? இனி வரப்போகும் பலன் மேல் நோக்கமாயிருந்தார். இந்த பூமிக்குரிய வாழ்வு நிலையற்றது. நமக்கு ஒரு வாழ்வு உண்டு. அது தேவனோடு, தேவராஜ்யத்தில் உண்டு. அதை பெறுவதற்கு "நாம் கிறிஸ்துவுக்காக பாடனுபவிக்கவும், உயிரைக் கொடுக்கவும் ஆயத்தமாக இருக்க வேண்டும்". கர்த்தர் நம்மை ஆசீர்வதிப்பாராக! 

- Rev.S.A. இம்மானுவேல் 

 

ஜெபக்குறிப்பு:-

ஒடிசாவில் சுதேச ஊழியர்கள் எழும்ப ஜெபியுங்கள்

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al meritking meritking giriş meritking güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin casibom casibom giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş nakitbahis nakitbahis giriş jojobet superbetin matbet jojobet romabet romabet giriş marsbahis marsbahis güncel marsbahis güncel giriş alobet alobet giriş deneme bonusu deneme bonusu veren siteler bahsegel vaycasino vaycasino giriş atlasbet atlasbet giriş