By Village Missionary Movement
Sunday, 18-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 18.01.2026 (Kids Special)
அன்பு
“...உன்னிடத்தில் நீ அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக...” - மத். 19:19
இது நீண்ட நாட்களுக்கு முன் நடந்த சம்பவம். ஐரோப்பா தேசத்தில் நீக்ரோக்களான கறுப்பு இன மக்கள் வாழ்ந்து வந்தனர். அவர்களை ஐரோப்பியர் தாழ்வாக நடத்தினர். அதைப் பற்றி நாம் காண்போம்.
ஒரு பெரிய செல்வந்தரின் வீட்டில் மூன்று கார்கள் இருந்தன. அங்கு வேலை செய்ய நிறைய வேலையாட்களும் இருந்தனர். வேலை செய்பவர்கள் தங்க, வீட்டின் அருகிலேயே அவர்களுக்கு வீடு கட்டி கொடுத்திருந்தார். அவருக்கு ஒரே ஒரு பையன், அவன் பெயர் நிக்சன். அவன் மிகவும் அழகாக இருப்பான். இவர்களது கார் டிரைவரோ நீக்ரோ இனத்தை சார்ந்தவர். அவரது மகன் ஜான்சன். நிக்சனுக்கு ஜான்சனை பிடிக்கவே பிடிக்காது. மற்ற வேலையாட்களின் பிள்ளைகளோடு இணைந்து விளையாடுவான். ஆனால் ஜான்சனைப் பார்த்தாலே நிக்சனுக்கு கோபமும், எரிச்சலும் வரும். மேலும் அவனை அடிக்கவும் செய்வான்.
நிக்சன் தன் அப்பாவிடம், இந்த ஜான்சனின் அப்பாவை வேலையை விட்டு நிறுத்தி விடுங்கள். எனக்கு அவங்களை பார்க்கவே பிடிக்க வில்லை. அவங்க பையன் ஜான்சனை எனக்கு சுத்தமா பிடிக்காது என்று சொல்லுவான். ஆனால் நிக்சனின் அப்பாவோ, நீ அப்படி இருக்கக் கூடாது, எல்லோரையும் நேசிக்கணும் அவர்களிடம் அன்பு செலுத்த வேண்டும் என்றார். ஜான்சனும், அவங்க அப்பாவும் மிகவும் நல்லவர்கள். அவர்கள் நிறத்தை வைத்து அவர்களை வெறுக்காதே என நிக்சனுக்கு எவ்வளவோ அறிவுரை கூறியும், நிக்சன் அப்பா சொல்வதைக் கேட்காமல், அந்த நீக்ரோ அங்கிளை குடும்பத்தோட விரட்டணும் என யோசித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் நிக்சன் அவன் வீட்டின் பக்கத்திலுள்ள சிறுவர்கள், மற்ற வேலைக்காரர்களின் பிள்ளைகள், அவர்களோடு இணைந்து பட்டாசு போட்டு விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது ஜான்சனுடைய ட்ரெஸ்ல பட்டாசு கங்கு பட்டு ஓட்டை ஆயிற்று. அதை பார்த்து நிக்சன் கை தட்டி சிரித்து பேசிக் கொண்டே இருந்த போது, எதிர்பாராதவிதமாக அருகிலுள்ள மெழுகுவர்த்தியின் மேல் அவனது சட்டை பட்டு தீ பற்றி பிடித்தது. உடனே அவன் தீ, தீயென இங்குமங்கும் ஓடினான். மற்றவர்கள் பட்டாசை எடுத்து அப்புறப்படுத்தினர். ஆனால் ஜான்சனோ ஒரு போர்வையை எடுத்துக் கொண்டு ஓடிவந்து, அதை நிக்சனின் மீது சுற்றி, இருவரும் சேர்ந்து உருண்டனர். தீ அமர்ந்ததும் நிக்சனை உடனே காரில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அப்போது தான் நிக்சனுக்கு ஜான்சனின் அன்பு புரிந்தது. அன்று முதல் நிக்சனும், ஜான்சனும் நண்பர்களாயினர்.
இது போல தான் நீங்களும் மற்றவர்களுடைய புறத்தோற்றத்தைப் பார்த்து அவர்களை வெறுக்கக் கூடாது. எல்லோரிடமும் அன்பு செலுத்த வேண்டும். o.k வா குட்டீஸ்!
- Miss. சோபியா
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864