By Village Missionary Movement
Saturday, 17-Jan-2026இன்றைய தியானம்(Tamil) 17.01.2026
பலவீனரைத் தாங்குவோம்!
“அன்றியும், பலமுள்ளவர்களாகிய நாம்... பலவீனருடைய பலவீனங்களைத் தாங்க வேண்டும்...” - ரோமர் 15:1
அது ஒரு பெரிய மைதானம். அநேக பார்வையாளர்கள் அங்கு கூடியிருந்தனர். உடல் ஊனமுற்ற சிறுவர்களுக்கான ஓட்டப் பந்தயம் அங்கு நடைபெற்றது. விசில் அடித்தவுடன், சிறுவர்கள் அனைவரும் ஓடத் தொடங்கினர். ஓடத் தொடங்கிய சில வினாடிகளில் எதிர்பாராதவிதமாக ஒரு சிறுவன் கீழே விழுந்து விட்டான். முன்னோக்கி ஓடிக் கொண்டிருந்த மற்ற சிறுவர்கள் இதைப் பார்த்தவுடன் தங்கள் ஓட்டத்தை நிறுத்திவிட்டு, கீழே விழுந்த அந்த சிறுவனின் கைகளைப் பிடித்து தூக்கிவிட்டனர். பின்பு அனைவரும் ஒன்று சேர்ந்து ஓடினர். என்னே ஒரு Team spirit! உடனே பார்வையாளர்கள் அனைவரும் கரம் தட்டி சிறுவர்களை உற்சாகப்படுத்தினார்கள்.
இன்றைய வேதப் பகுதியில் தாவீது தன் அணியினரோடு யுத்தத்திற்குச் செல்கிறார். ஆனால் அதில் ஒரு கூட்டத்தார் இளைப்படைந்து, சோர்ந்துபோய் பாதி வழியிலேயே நின்று விட்டார்கள். இன்னும் சிலர் விடாய்த்துப்போனதினாலே யுத்தத்திற்குச் செல்லவில்லை. மீதமுள்ள ஜனங்களோடு சென்று தாவீது வெற்றி பெறுகிறார். வெற்றி பெற்று கொண்டு வந்த பொருட்களை, யுத்தத்திற்கு வராதவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என ஒரு கூட்டத்தினர் சொன்னார்கள். தாவீதோ யுத்தத்திற்கு வராமல் போனவர்களின் சுக செய்தியை விசாரித்து, அவர்களுக்கும் பொருட்களை சரிபங்காகப் பங்கிடச் சொல்லி, அதையே கட்டளையாகவும், பிரமாணமாகவும் ஏற்படுத்தினார் என பார்க்கிறோம்.
நண்பர்களே! நாம் இருக்கிற குடும்பம், சபை அல்லது குழு ஊழியத்தில் நம்மை விட ஏதோ ஒரு விதத்தில் பலவீனமாய் இருக்கிறவர்களை உற்சாகப்படுத்துகிறோமா? அவர்களையும் நம்மோடு சேர்த்து, தோள் தட்டி ஒன்றாக இணைந்து ஓடுகிறோமா என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். ஒரு குழுவிலே எல்லோரும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான தாலந்துகளை தேவன் கொடுத்திருக்கிறார். சிலருக்கு மேடை ஏறி பாடுவது, துதிப்பது, ஜெபிப்பது, பிரசங்கம் பண்ணுவது, பத்திரிக்கையில் எழுதுவது போன்ற காரியங்களைச் செய்வதில் சில குறைவுகள், தடுமாற்றங்கள் இருக்கலாம். ஆனால் நாம் அவர்களை அப்படியே விட்டு விடக் கூடாது. அவர்களுக்கு மீண்டும் மீண்டும் வாய்ப்புகள் அளித்து, உற்சாகப்படுத்தி முன்னோக்கி செல்வோம்! தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்!
- Bro. T. சங்கர்ராஜ்
ஜெபக்குறிப்பு:-
வீட்டு ஜெப குழுக்களுக்கு தங்கள் வீடுகளை திறந்து கொடுப்போர் எழும்ப ஜெபியுங்கள்.
*Whatsapp:*
இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்
Website: www.vmm.org.in
Email: info@vmm.org.in
Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin
கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)
விருதுநகர்
ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250
https://wa.me/919444011864