Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 16.01.2026
Share:

By Village Missionary Movement

Friday, 16-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 16.01.2026

 

பாவம்                

 

“உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் சொல்லுங்கள்; இதற்கு மிஞ்சினது தீமையினால் உண்டாயிருக்கும்” - மத். 5:37

 

உலகப் பிரசித்தி பெற்ற சுவிசேஷகர் Dr. பில்லி கிரஹாம் சொன்ன ஒரு நடந்த சம்பவம் இதோ. குருவானவர் ஒருவர் தன் ஆலய ஆராதனையில் பாவத்தைக் குறித்து மிகக் கடுமையாகக் கண்டித்துப் பேசினாராம். இதைக் கேட்டுக் கொண்டிருந்த சபை அங்கத்தினர் ஒருவர் குருவானவரிடம் வந்து, “ஐயா, பாவத்தைக் குறித்து இவ்வளவு கண்டித்து நீங்கள் பேச வேண்டிய அவசியம் இல்லை; ஏனென்றால் நம் சபை வாலிபப் பிள்ளைகள் பாவத்தைப் பற்றித் தெரிந்து கொண்டால் மிக எளிதில் பாவியாக மாறிவிடுவார்கள். அதனால் பாவத்தைப் “பாவம்” என்று சொல்லாமல், அது ‘பெலவீனம்’ என்று சொல்லுங்கள் என்று சொன்னாராம்.

 

அதற்கு அந்த குருவானவர், ஒரு “விஷம்” நிறைந்த பாட்டிலை எடுத்து அம்மனிதரிடம் காட்டி, “விஷம்” என்று எழுதியிருப்பதை எடுத்து விட்டு, அதற்குப் பதில் “தேன்” என்று எழுதட்டுமா? இவ்வாறு நஞ்சை, தேன் என்றோ, இனிப்பான மருந்து என்றோ, எவ்வளவு தூரம் அதன் தன்மையை மறைத்து எழுதுகிறேனோ அவ்வளவு தூரம் அது ஆபத்தாய் முடியும்” என்றாராம்.

 

எனக்கன்பானவர்களே! இந்தக் கடைசி காலத்தில் திருச்சபைகளிலும், தேசத்திலும் பாவத்தைப் பாவம் என்று சொல்ல ஜனங்கள் பயப்படுகிறார்கள். இதை ‘தவறு’ அல்லது ‘பெலவீனம்’ என்று சாக்குச் சொல்லுகிறார்கள். அதுமட்டுமல்ல, எல்லாரும் செய்வதைத்தான் நானும் செய்கிறேன்; இதிலென்ன தவறு என்று துணிந்து பாவம் செய்கிறவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். பாவத்தைச் சட்டமாக்குகிற தேசங்களும் இருக்கின்றன.

 

தேவப்பிள்ளைகளே! பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக்குறித்தும், நீதியைக்குறித்தும், நியாயத்தீர்ப்பைக் குறித்தும், உலகத்தைக் கண்டித்து உணர்த்துவார் (யோவான் 16:8). அதனால் நாமும் பாவத்தைக் கண்டிக்க வேண்டியவர்களாய் இருக்கிறோம். பாவத்தின் வல்லமை கொடூரமானது, ‘பாவத்தின் சம்பளம் மரணம்’ என்று வேதம் நம்மை எச்சரிக்கின்றது. நாம் பரிசுத்தமாய் வாழ அழைக்கப்பட்டு, தேவனால் பிரித்து எடுக்கப்பட்டுள்ளோம். ஆதலால் பாவத்தைப் பார்த்தும் பாராமுகமாய் இராமல், பாவத்தைப் பாவம் என்று கூறி பகிரங்கமாய்க் கண்டித்து உணர்த்துவோம்! பாதாளம் செல்வோருக்கு சுவிசேஷம் அறிவித்து பரலோக வழி காட்டுவோம்!

- Mrs. பிரிசில்லா தியோபிலஸ் 

 

ஜெபக்குறிப்பு:-

எல்லா தாலுகாவிலும் பல புதிய வீட்டு ஜெப குழுக்கள் எழும்ப ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al meritking meritking giriş meritking güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş Enbet enbet giriş enbet güncel giriş perabet perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin casibom casibom giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino vaycasino vaycasino giriş vaycasino güncel giriş matbet matbet giriş matbet güncel giriş yakabet yakabet giriş yakabet güncel giriş betsmove betsmove giriş betsmove güncel giriş betsat betsat giriş betsat güncel giriş safirbet safirbet giriş safirbet güncel giriş dumanbet giriş dumanbet dumanbet güncel giriş vaycasino vaycasino giriş vaycasino güncel giriş marsbahis marsbahis giriş marsbahis güncel giriş kingroyal kingroyal giriş kingroyal güncel giriş meritking meritking giriş meritking güncel giriş meritbet meritbet giriş meritbet güncel giriş nakitbahis nakitbahis giriş nakitbahis güncel giriş dumanbet dumanbet giriş dumanbet güncel giriş Holiganbet holiganbet giriş holiganbet güncel giriş bahissenin bahissenin giriş bahissenin güncel giriş bayconticasino bayconticasino giriş bayconticasino güncel giriş imajbet imajbet giriş imajbet güncel giriş prizmabet prizmabet giriş pashagaming pashagaming giriş pashagaming güncel giriş interbahis interbahis giriş interbahis güncel giriş nakitbahis nakitbahis giriş jojobet superbetin matbet jojobet romabet romabet giriş marsbahis marsbahis güncel marsbahis güncel giriş alobet alobet giriş deneme bonusu deneme bonusu veren siteler bahsegel vaycasino vaycasino giriş atlasbet atlasbet giriş