Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12-06-2021
Share:

By Village Missionary Movement

Saturday, 12-Jun-2021

இன்றைய தியானம்(Tamil) 12-06-2021

 

சாதாரணமானவர்களே தேவை 

 

“ஞானிகளை வெட்கப்படுத்தும்படி தேவன் உலகத்தில் பைத்தியமானவைகளைத் தெரிந்துகொண்டார்;….” – 1கொரிந்தியர் 1:27 

 

1850 ஜனவரி 6-ம் தேதி இங்கிலாந்து பனிப்புயலால் பாதிக்கப்பட்டது. பனிப்புயலில் சிக்கிய வாலிபனொருவன் தன்னை காத்துக் கொள்ள அருகிலிருந்த ஆலயத்திற்குள் ஓடினான். அங்கு மாலை நேர ஆராதனை நடந்து கொண்டிருந்தது. போதகர் இல்லாததால் சபை அங்கத்தினரான தையல்காரர் ஒருவர் ஆராதனையை நடத்திக்கொண்டிருந்தார். அவர் செய்தியளிக்க தொடங்கினார். அவர் திரும்ப திரும்ப வற்புறுத்தி சொன்ன காரியம், “என்னை நோக்கி பாருங்கள், அப்பொழுது இரட்சிக்கப்படுவீர்கள்” என்பதே. பனிப்புயலுக்கு தப்ப ஓடி வந்த வாலிபன் செய்தியை கேட்க விருப்பம் இல்லாமல் கதவுக்கு பின்புறமாக நின்று கொண்டிருந்தான். 

 

தையல்காரர் பிரசங்க பீடத்தில் நின்ற வண்ணமாகவே அந்த வாலிபனை நோக்கி, “வாலிபனே இயேசுவை நோக்கிப்பார்” என்று கூறினார். அவர் படித்தவருமல்ல, பிரசங்கியாருமல்ல, மிக சாதாரண மனிதர் தான். ஆனால் பரிசுத்த ஆவியில் நிறைந்தவராய், அசாதாரணமாக பிரசங்கித்தார். அந்த செய்தி வாலிபனை வெகுவாய் அசைத்தது. இயேசுவை நோக்கிப்பார் என்ற சத்தம் அவனுடைய இருதயத்தில் தொனித்துக் கொண்டேயிருந்தது. முதலில் இயேசுவை நோக்கினான். பரிசுத்த ஆவியால் நிரப்பப்பட்டான். அந்த வாலிபன் யார் தெரியுமா? அவர் தான் C.H. ஸ்பர்ஜன். பின் நாட்களில் பிரசங்க ஊழியத்தில் தேவனால் மிகவும் வல்லமையாய் பயன்படுத்தப்பட்டு புகழ்பெற்று விளங்கினார். ஒரு படிப்பறிவில்லாத தையல்காரரை கொண்டு தேவன் தேசத்திற்கு மிகப்பெரிய ஊழியராகிய ஸ்பர்ஜனை எழுப்பினார். அதுபோல, இயேசுவோடு ஊழியம் செய்த அவருடைய சீஷர்களில் அநேகர் படிப்பறிவற்ற மீனவர்களே. 

 

இதை வாசிக்கின்றதான பிரியமானவர்களே! தேவன் தனது பணியினை செய்ய திறமையுள்ளவர்கள், அனுபவமிக்கவர்களை மட்டுமே தெரிந்தெடுப்பதில்லை; சாதாரணமானவர்களையும் தெரிந்தெடுக்கிறார். இப்படி திறமையில்லாத, தகுதியில்லாத, படிப்பறிவில்லாத, உலகத்தினால் பைத்தியமாக கருதப்பட்ட வாலிபர்களையும், மனிதர்களையும் தேவன் தினந்தோறும் தெரிந்துகொண்டு பயன்படுத்திக்கொண்டே தான் இருக்கிறார். ஏனென்றால், சாதாரணமானவர்களை கொண்டு தான் தேவன் அசாதாரணமான காரியங்களை செய்து முடிப்பார். தேவன் தெரிந்தெடுக்கும் சாதாரண மனிதர் நீங்களாயும் இருக்கலாமே!  

- Mrs. சக்தி சங்கர்ராஜ் 

          

ஜெபக்குறிப்பு:  

ஒவ்வொரு நாளும் தியான செய்தியை எழுதிக் கொடுக்கும் தேவப் பிள்ளைகளை தேவன் தமது அபிஷேகத்தால் நிரப்பி பயன்படுத்த ஜெபியுங்கள்.

 

இந்த தியானச் செய்தியை பெற்றுக்கொள்ள

Whats app: 

தமிழில் பெற - +91 94440 11864

ஆங்கிலத்தில் பெற - +91 86109 84002

ஹிந்தியில் பெற - +91 93858 10496

தெலுங்கில் பெற - +91 94424 93250

 

Website: www.vmm.org.in

Email: reachvmm@gmail.com

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250



hacklink satın al deneme bonusu deneme bonusu veren siteler holiganbet holiganbet giriş holiganbet güncel giriş meritking meritking giriş meritking güncel giriş betcio betcio giriş holiganbet holiganbet giriş Enbet enbet giriş enbet güncel giriş holiganbet holiganbet giriş holiganbet güncel giriş holiganbet holiganbet giriş perabet meritking meritking giriş meritking meritking giriş pulibet pulibet giriş jojobet jojobet giriş jojobet güncel giriş Superbetin superbetin giriş hızlıcasino hızlıcasino giriş perabet perabet giriş deneme bonusu deneme bonusu veren siteler deneme bonusu deneme bonusu veren siteler meritking meritking giriş meritking güncel giriş bahissenin bahissenin güncel giriş bahissenin giriş superbetin giriş superbetin giriş süperbetin nakitbahis nakitbahis giriş enbet enbet giriş Matbet Matbet giriş holiganbet holiganbet giriş perabet perabet giriş jojobet bahsegel bahsegel matbet vaycasino Egebet marsbahis marsbahis güncel giriş marsbahis giriş casibom casibom giriş holiganbet güncel giriş betsat betsat betsat giriş betsat güncel giriş alobet alobet giriş meritking güncel giriş Vdcasino jasminbet jasminbet giriş klasbahis klasbahis giriş imajbet imajbet giriş İmajbet nakitbahis nakitbahis giriş