Village Missionary Movement         கிராம மிஷனரி இயக்கம்

இன்றைய தியானம்(Tamil) 12.01.2026
Share:

By Village Missionary Movement

Sunday, 11-Jan-2026

இன்றைய தியானம்(Tamil) 12.01.2026

 

ஜெபத்தின் மேன்மை                        

 

"...ஜெபத்திலே உறுதியாய்த் தரித்திருங்கள்" - ரோமர் 12:12 

 

நாம் கர்த்தரிடம் நமது இதயத்தை திறந்து பேசுவதும், நம்மோடு பேசும் கடவுளின் வார்த்தைக்கு கீழ்ப்படிவதுமே ஜெபம். ஜெபம், தேவனுடைய பொக்கிஷ சாலையைத் திறக்கும் ஒரு திறவுகோல். 

 

சகோதரர் எமில் ஜெபசிங் அவர்கள் தான் இரட்சிக்கப்பட்ட 17 வது வயதிலிருந்தே அதிகாலையில் எழுந்து, தேவ சமுகத்தில் நேர்முழங்கால் படியிட்டு, பாடல்களைப் பாடி, வேதம் வாசித்து பின்னர் ஜெபிப்பது அவருடைய வழக்கமாக இருந்தது. தேசத்திற்காக திறப்பில் நின்று ஆத்ம பாரத்துடன் ஜெபித்த ஒரு மாபெரும் ஜெப வீரர். சுமார் 45 வருடங்கள் கர்த்தருக்காக ஊழியம் செய்தார். நண்பர் சுவிசேஷ ஜெபக்குழுவில் ஊழியம் செய்து, பின்னர் விஷ்வவாணி என்ற மிஷனெரி ஸ்தாபனத்தின் ஸ்தாபகரானார். இவர் எழுதிய சுமார் 135 பாடல்கள் இந்திய தேசம் தேவனால் சந்திக்கப்பட வேண்டும் என்ற பாரம் நிறைந்ததாக இருக்கும். அவர்கள் நம்மைவிட்டு பரலோகம் சென்றாலும், அவரது பாடல்கள் இந்திய தேசமெங்கிலும் அனேக மொழிகளில் பாடப்பட்டு வருகின்றன.

 

தானியேல் என்ற தேவ மனிதர், தனக்கு விரோதமாய் பத்திரத்துக்கு கையெழுத்து வைக்கப்பட்டதென்று அறிந்த போதிலும், தான் முன் செய்து வந்தபடியே தினம் மூன்று வேளையும் தன் தேவனுக்கு முன்பாக முழங்காற் படியிட்டு, ஜெபம் பண்ணினார். தேவன் தம்முடைய தூதனை அனுப்பி சிங்கங்களின் வாயைக் கட்டிப்போட்டார். இதன் மூலமாக தரியு ராஜா தானியேலின் தேவன் "ஜீவனுள்ள தேவன்" என்று அறிக்கையிட்டார்.

 

அருமையான தேவ பிள்ளைகளே, நம்முடைய ஜெப வாழ்க்கை எப்படிப்பட்டதாய் இருக்கிறது? அதிகாலையில் அவரை தேடுகிறோமா, இல்லை நம் தேவைக்காக மட்டும் ஜெபிக்கிறோமா? "இம்மைக்காகமாத்திரம் நாம் கிறிஸ்துவின்மேல் நம்பிக்கையுள்ளவர்களாயிருந்தால், எல்லா மனுஷரைப் பார்க்கிலும் பரிதபிக்கப்படத்தக்கவர்களாயிருப்போம்" என்று வேதம் சொல்கிறது (1 கொரி. 15:19). ஒரு வேளை நம் சூழ்நிலைகள் பாதகமாக இருந்தாலும், அவருடைய சமுகத்தில் சென்று ஜெபிக்கும் போது, நித்திய மகிழ்ச்சி நம் உள்ளத்தை நிரப்பும். கண்ணீர் கவலைகள் மறைந்து போகும். இந்த உலகத்தில் சமாதானமாக வாழ கர்த்தர் அருள் புரிவார்.

- Mrs.நிர்மலா ஜெபராஜ்  

 

ஜெபக்குறிப்பு:-

7000 மிஷனெரிகள் 1 லட்சம் கிராமங்கள் என்ற இலக்குகளை அடைய

ஜெபியுங்கள்.

 

*Whatsapp:*

இந்த தியான செய்தியை தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம், தெலுங்கு, கன்னடம், பஞ்சாபி மற்றும் ஒரியா ஆகிய மொழிகளில் வாட்ஸ் அப்பில் பெற்றுக்கொள்ள *+9194440 11864* என்ற எண்ணை தொடர்பு கொள்ளவும்

 

Website: www.vmm.org.in

Email: info@vmm.org.in

 

Android App: https://play.google.com/store/apps/details?id=com.infobells.vmmorgin

 

கிராம மிஷனெரி இயக்கம் (Village Missionary Movement)

விருதுநகர்

ஜெப விண்ணப்பங்களுக்கு: +91 94873 67663, +91 94424 93250

 

https://wa.me/919444011864



hacklink satın al grandpashabet grandpashabet grandpashabet grandpashabet giriş grandpashabet grandpashabet güncel giriş grandpashabet grandpashabet güncel grandpashabet grandpashabet giriş grandpashabet giriş grandpashabet grandpashabet grandpashabet grandpashabet holiganbet giriş holiganbet giriş matbet holiganbet sahabet onwin casibom giriş casibom casibom giriş casibom matbet matbet giriş jojobet superbetin superbetin giriş betsmove betsmove giriş kargabet kargabet giriş piabellacasino piabellacasino giriş supertotobet supertotobet giriş marsbahis casibom casibom giriş holiganbet holiganbet giriş jojobet jojobet giriş casibom çarkbet vizebet vizebet giriş alobet alobet giriş amgbahis amgbahis giriş sweet bonanza grandpashabet grandpashabet betsalvador bahiscasino casibom casibom giriş jojobet jojobet giriş perabet perabet giriş holiganbet holiganbet giriş carkbet giris casibom casibom giriş casibom güncel giriş matbet matbet giriş superbetin superbetin giriş